web log free
September 16, 2025

மின்னும் ’விஸ்வாசம்’ அஜித்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வருமாறு இடம்பெற்றுள்ளன.

இதுபோன்று எல்.இ.டியில் ஒளிரும் வகையில் டிஜிட்டல் கட் அவுட் வைப்பது சினிமா வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதனை அப்பகுதி அஜித் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த கட் அவுட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd