web log free
April 06, 2020

'பெதுமக் தேகி கரமு' திட்டம் ஆரம்பம்


இலக்கிய மாதத்தினை முன்னிட்டு நன்கொடையாளர்களுடன் இணைந்து மக்கள் வங்கியால் ஆரம்பிக்கப்பட்ட 'பெதுமக் தேகி கரமு' திட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட புத்தகங்களை பகிர்ந்தளித்திடும் ஆரம்ப விழா பஃஅம்பகஸ்தோவ குமாரபட்டிய ரோயல் கல்லூரியில் நடைபெற்றதுடன். பண்டாரவளை விஷாகா மத்திய மஹா வித்தியாலயத்திற்கு புத்தகங்களை வழங்கிடும் நிகழ்வும் அத்தினம் இடம்பெற்றது. அப்போது புத்தகங்கள் மட்டுமன்றி பாடசாலை கற்றலுக்குத் தேவையான பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது.


புத்தகங்களை வாசிக்க விரும்பிடும், ஆனால் அவற்றை கொள்வனவு செய்வதற்கு வசதியில்லாத எமது பிள்ளைகளுக்கு சக்தியளித்திடும் நோக்கத்துடன் மக்கள் வங்கி தமது வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டமாக 'பெதுமக் தேகி கரமு' திட்டத்தினை ஆரம்பித்தது. இதற்காக நீங்கள் வாசித்து முடிந்த எந்தவொரு புத்தகத்தினையும் உங்கள் அருகிலுள்ள மக்கள் வங்கிக் கிளையில் கையளித்திடுமாறு மக்கள் வங்கி தங்களது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் தங்களது வாடிக்கையாளர்களிடமும் நன்கொடையாளர்களிடமும் வேண்டி பதிவிட்டிருந்தது. அதே போல் மறக்காமல் அவர்களது வாழ்வுக்கு வலுவூட்டிடும் வகையிலான வாழ்த்தினையும் ஒவ்வொரு புத்தகத்திலும் முதலாவது பக்கத்தில் எழுதி கையளித்திடுமாறும் குறிப்பிட்டிருந்தனர்.


இலங்கையின் டிஜிட்டல் வங்கியில் முன்னோடியாய்த் திகழும் மக்கள் வங்கி சமூக வலைதளத்தினூடாக  மட்டும் பதிவிடப்பட்டிருந்த  இந்த வேண்டுகோழுக்கு நாடு முழுதும் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மக்கள் வங்கியின் கிளைகளுக்கு கொண்டு வருவதற்குக் காரணம் மக்கள் வங்கியின் மீது மக்களுக்கு உள்ள மிகுந்த நம்பிக்கையும் நம் நாட்டு சிறுவர்களின் அறிவினை பெருக்குவதில் அவர்களுக்கு இருந்த அக்கறையுமே முக்கிய காரணங்கள் ஆகும்.


இப்புத்தகங்களை பகிர்ந்தளித்திடும் நிகழ்வின் போது வாசிப்பின் மூலம் கிடைத்திடும் அறிவினையும் நாளைய உலகின் சவால்களையும் வெற்றி கொள்ள டிஜிட்டல் அறிவினை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தினைப் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் வங்கியியலின் மூலம் மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள சுய வங்கிச் சேவையுடன் People’s wave app, People’s wiz, People’s web இணை Pநழிடந'ள றநடி போன்ற வசதிகள் தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது. அதே போல் நாட்டில் முதன்முறையாக 1971ஆம் ஆண்டு பாடசாலை மாணவ மாணவியருக்கு சேமித்திடும் பழக்கத்தினை ஊக்குவித்த மக்கள் வங்கி, இலங்கையின் மாணவ தலைமுறைக்கு டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தினை பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன் NFC தொழில்நுட்பத்துடனான பண வைப்புச் செய்யும் இயந்திரங்களைக் கொண்ட பாடசாலை வங்கி அலகினை 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்தது.

நாட்டில் முன்னணி வகிக்கும் அரச வங்கி என்ற வகையில் மக்கள் வங்கி ஆரம்பம் முதலே இந்நாட்டின் மாணவ சமுதாயத்தின் சேமிப்புப் பழக்கத்தினை மற்றும் அறிவினை மேம்படுத்திட பல நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இலங்கையில் முதன்முறையாக 1971ஆம் ஆண்டு முதல்  பாடசாலை மாணவ மாணவியருக்கு சேமித்திடும் பழக்கத்தினை ஊக்குவித்த மக்கள் வங்கி, ஆண்டு தோறும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையில் உயர் சித்திகளைப் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றையும் ஆரம்பித்து உள்ளது.

அதே போல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியரின் அறிவினை விருத்தி செய்து கல்வி சார் திறன்களை மேம்படுத்திடச் செய்யும் நோக்குடன் ஆண்டு தோறும் நாடு முழுவதும் புலமைப்பரிசில் கருத்தரங்குகள் பலவற்றை நடாத்துவதற்கும் மக்கள் வங்கி அனுசரணை வழங்குகிறது.


'பெதுமக் தேகி கரமு' நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற புத்தகங்களை எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளிலுள்ள மாணவ மாணவியருக்கும் பகிர்ந்தளித்திட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்வின் போது மக்கள் வங்கியின் சிரேஷ்ட உப பொது முகாமையாளர் (வங்கி நடவடிக்கைகள்) பொனிஃபஸ் சில்வா, வலயக் கல்விப் பணிப்பாளர் டபள்யூ. டீ. ஜயதிலக, கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஜித் ராஜபக்ஷ, அம்பகஸ்தோவ குமாரபட்டிய ரோயல் கல்லூரியின் அதிபர் எம். ஆரியரத்ன, உப அதிபர் கபில தர்மசேன, மக்கள் வங்கியின் பதுளை பிரதேச முகாமையாளர் மஞ்சுள தசநாயக மற்றும்  ஊவா பரனகமை கிளையின் முகாமையாளரான ஈ. ஏ. கல்பனி சந்திமா ஆகியோர் கலந்துகொண்டனர்.

© 2019 Asian Mirror (pvt) LTD