web log free
September 15, 2025

இம்முறை சுற்றுப் பயணம் சவாலாது

அவுஸ்திரேலியாவிற்கு இம்முறை மேற்கொள்ளும் சுற்றுப் பயணம் சவாலாகவே இருக்கும் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக குறித்த போட்டிகள் நடக்க இருப்பதால் டெஸ்ட் போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி கொல்கத்தாவில் பங்களாதேசிற்கு எதிராக ஒரேயொரு பிங்க் பால் டெஸ்டில் மட்டும் விளையாடியுள்ளதாகவும், அதன்பின்னர்  அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருப்பதாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவுஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் இதுவரை ஏழு பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், குறித்த ஏழு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது இல்லை என ரோகித் சர்மா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Last modified on Wednesday, 17 June 2020 13:06
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd