web log free
September 25, 2020
editor

editor

இலங்கை பாராளுமன்ற அமர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு நேரத்தை அறிவித்துள்ளது.

முற்பகல் 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே இருக்கும்

அடுத்த பாராளுமன்ற அமர்வு 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையிலும் ஈடுபடவுள்ளது.

கொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள ​கிறிஸ்தவ தேவாலயமொன்றை வீடியோ செய்து கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை

அரசாங்கம் சில அதிரடியான விடயங்கள் அறிவித்துவருகின்றது.

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தான் மக்கள் தினம் அறிவிக்கப்பட்டது.

எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அதுதொடர்பில் புதிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இனி, புதன்கிழமைகளில் மக்கள் தினம் நடைபெறாது. திங்கட் கிழமைகளில்தான் மக்கள் தினம் என, அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை அரசமைப்பில், 17ஆம் திகதித்துக்கும் 18ஆவது திருத்தத்துக்கும் 19ஆவது திருத்தத்துக்கம் ஆதரவளித்த 20 பேர், 20ஆவது திருத்தத்துக்கும் ஆதரவளிக்கவுள்ளனர். அவர்களின் விபரம் இதோ... • மஹிந்த சமரசிங்க • ரஞ்சித் சியம்பலபிட்டி • பிரியங்கர ஜெயரத்ன • எஸ்.பி.திசநாயக்க • சுசில் பிரேமஜயந்த • டல்லாஸ் அலகபெரும • ஜான்ஸ்டன் பெர்னாண்டோ • அனுரா பிரியதர்ஷன யாப்பா • விமல் வீரவன்ஸ • பவித்ரா வன்னியராச்சி • ஜோன் செனவிரத்ன • தினேஷ் குணவர்தன • காமினி லோகுகே • பந்துல குணவர்தன • டிலான் பெரேரா • டக்ளஸ் தேவானந்தா • A.L.M. அதாவுல்லா • ஜி.எல். பீரிஸ் • மஹிந்தானந்தா அலுத்கமகே • திஸ்ஸா விதாரண • நிமல் சிரிபாலா டி சில்வா • துமிந்தா திஸாநாயக்க • ஜனக பண்டார தென்னகோன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்றையதினம் சாட்சியமளித்தார்.

அவர் சாட்சியமளிக்கும் போது, அந்த சாட்சியத்தை ஜயமயத்துல் உலமா அமைப்பின் பதில் செயலாளர் சட்டவிரோதமான முறையில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

அதனை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு இன்றையதினம் கண்டுப்பிடித்து, அந்த ஒலிப்பதிவை கைப்பற்றியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு ஒலிப்பதிவு செய்தார் என்பது தொடர்பில், செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இன்று (09) முற்பகல் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படும் வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, வீட்டின் உரிமையாளரை கைது செய்தபோது, அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதோடு, இதில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் இடம்பெறுவதாக பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த வீட்டை முற்றுகையிட்ட வேளையில் அங்கிருந்த  04 பெண்களும் 04 ஆண்களும் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர், பெண் பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் 03 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென, ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (09) இடம்பெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு நேர்காணலில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன், மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கூறியுள்ளார். அவர் மகாவம்சத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையான என்பது எமக்கு முக்கியமில்லை. ஆனால், வடக்கில் புத்தர் சிலைகளை வைக்க வேண்டாமென கூறுவதற்கு அவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்தார்.

சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகி 14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா படத்தின் பாடலை பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'.

கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி இந்தப் படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சூர்யா-ஜோதிகா காதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் குறிப்பாக 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய இந்த பாடலை தற்போது சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி மேடை ஒன்றில் பாடியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ், சமீபத்தில் ‘இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராஹேவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஆரவ்-ராஹே திருமணத்திற்கு பின்னர் நடந்த இரவு நேர பார்ட்டியின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரவ் குத்தாட்டம் ஆடிய நடனம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரவ்-ராஹே தம்பதியினர் இணைந்து கேக் வெட்டி திருமணத்தை மகிழ்ச்சியுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கொண்டாடிய வீடியோவும் வைரலாகி வருகிறது.


தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பலின் மீட்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மூவர் கப்பலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தீ விபத்துக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பல் காணப்படும் இடத்தில் எண்ணெய்ப் படிவுகளை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இரண்டு கடல்மைல் தொலைவுக்கு குறித்த எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் நேற்றைய தினம் டீசல் படிவுகளை அவதானிக்க முடிந்ததாகவும், கடல் பிரதேசத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில், இரசாயனங்களை தூவ நடவடிக்கை எடுத்ததாகவும், கடற்படை குறிப்பிட்டுள்ளது.

© 2019 Asian Mirror (pvt) LTD