web log free
September 25, 2020
editor

editor

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு இந்திய அரசாங்கம் அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இவர் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட 13ஆவது திருதச்சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது என்று அவர் அண்மையில் கூறியிருக்கிறார்.

இதுபற்றி பேச்சு நடத்தவே மேற்படி இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


பண்டாரகம, அட்டுலுகம, மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஜீப் வண்டியை வழிமறித்து பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அனைத்து பேக்கரி உட்பத்திகளுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

பெரும்பாலும் 5 ரூபாவினால் இந்த விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை விலை, எண்ணெய் விலை என்பன அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு முடிவை எடுப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன பேஸ் லைன், மாளிகாவத்தை, வோட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹியங்கனை - கண்டி வீதியில் உள்ள ஹசலக, பல்லேவத்தே பகுதியில் காட்டு யானை ஒன்று டிப்பர் லொறியில் மோதியுள்ளது.

குறித்த டிப்பர் யானையைத் தட்டிவிட்டு, சிறிது தூரம் இழுத்துச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காணபிக்கின்றன.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06) நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக உச்சத்தைத் தொட்ட நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் அப்படி பிரபலமும், பெயரையும் அடைந்தவர்கள்.

அண்மையில் தமிழ் சினிமாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனப் பெயர் வாங்கியவர் அனிகா. அஜித் மகளாக 'என்னை அறிந்தால், விஸ்வாசம்' ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில்,  அண்மைகாலமாக அனிகா விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

அதில் சில கவர்ச்சி புகைப்படங்களும் உள்ளன. அஜித்துக்கு மகளாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்படும் அளவுக்குஅந்தப் புகைப்படங்கள் இருக்கின்றன.

தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டிய வயது, அதற்காகத்தானே வாய்ப்பைக் கேட்க முடியும். அதனால்தானோ என்னவோ, அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களைப் பதிவிடுகிறார் அனிகா.

பிரபல பாடகர் எஸ்.பி.பீ.யின் உடல்நிலை திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாயன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் விதத்தில் பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்டுபகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 19 ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய விடயங்களை பாதுகாத்து 19 பிளஸ் உருவாக்கப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

19 பிளஸ் சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் காணப்படுகின்ற மிக மோசமான விடயங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்து, அதற்கு பதிலாக சர்வதிகாரம் கொண்ட திருத்தமொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 19ஆவது திருத்தத்திலுள்ள ஊழல் ஒழிப்பு விடயங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், சிறந்த அரச நிர்வாக முறைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தற்போது பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் அவர் கூறியிருந்தார்.

அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தமானது, நாட்டு மக்கள் மீதான தாக்குதல் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

19 பிளஸ் அரசியல் தலையீடுகள் இருக்காத வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன், இந்த விடயத்திற்கு தாம் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.

13ஆவது திருத்தம் காட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதிலுள்ள மாகாண சபை முறை தற்போதுள்ளதை விடவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

நாட்டில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது தொடர்பிலான வரைவு வெளியானதை அடுத்தே, அது தொடர்பிலான மேலதிக விபரங்களை தம்மால் கூற முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பிலான தமது நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற பெண் கைதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்து, ஹொரணை பகுதியில் வைத்து குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கைதி, கூரையை பிரித்து நேற்று (08) பிற்பகல் தப்பிச்சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை பமுணுகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், 1300 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகர, எம்.பியாக நேற்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்கு எதிர்ப்பு ​தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் கறுப்பு பட்டி அணிந்து, எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சியிலிருந்து ஒன்பது பேர், ஆளும் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

அவ்வாறானவர்கள் தொடர்பில் புதிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது, ​பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும், கறுப்பு பட்டி அணியாதவர்களில் சிலரே, எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்.

அவ்வாறான சிலர் இந்த படத்தில் உள்ளனர். அத்துடன், கட்சி தாவவுள்ள இன்னும் சிலரை படத்தில் காண முடியவில்லை.

© 2019 Asian Mirror (pvt) LTD