web log free
July 04, 2020
editor

editor

சஹ்ரான் ஹசீம் உயிரிந்திருந்தாலும் காத்தான்குடியில் இன்றும் பிரிவினைவாத வஹாப் சித்தாந்தம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு முன் நேற்று முன்தினம் (17) சாட்சி வழங்கிய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 45 முதல் 50 சூஃபி அல்லாத பள்ளிவாசல்கள் உள்ளதாகவும், அதில் வஹாப் கொள்கையை கடைப்பிடிக்கும் 10 முதல் 15 பள்ளிவாசல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தந்த வஹாப் கொள்கையுடைய பள்ளிவாசல்களில் சுமார் 15,000 உறுப்பினர்கள் வரையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய மௌவிகள் போதனைகளுக்காக காத்தான்குடி பகுதிக்கு வந்ததாகவும் அதில் தமிழக தவுப்பிக் ஜமாத் அமைப்பின் தலைவர் என தெரிவிக்கப்படும் செயினுலப்தீனும் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய தவுப்பிக் ஜமாத் அமைப்பு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் ஒழிக்கப்பட்டாலும், ஸ்ரீலங்கா தவுப்பிக் ஜமாத், சிலோன் தவுப்பிக் ஜமாத் ஆகிய அமைப்புகள் இன்றும் பகிரங்கமாக பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் அரபு மற்றும் மதரஸா பாடசாலைகளில் வஹாபிசம் கற்பிக்கப்படுவதாகவும், வஹாபிசவாத பிரிவினைவாத பள்ளிவாசல்கள் நாட்டில் இன்றும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் காத்தான்குடியில் அரபு மொழியில் பெயர்; பலகைகள் நகர சபையால் வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த நகரசபையின் தலைவராக வஹாபிசவாத சித்தாந்தத்தை கொண்ட ´அஸ்வர்´ என்ற நபர் இன்னும் பதவியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் காத்தான்குடி பிள்ளைகள் 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்குப் பின்னர் அரச பாடசாலைகளுக்கு செல்வதில்லை என்றும் மாறாக அவர்கள் மதரசா மற்றும் அரபு பாடசாலைகளில் கற்பதாகவும் அவர் ஆணைக்குழுவில் மேலும் தெரிவித்தார்.

” பதிவுசெய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களிடமிருந்து ஒரு கிலோவுக்கு அறவிடப்படுகின்ற 3.50 ரூபா, ஏற்றுமதி வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் பிரசாரம் முன்னெடுப்பதற்காகவே தேயிலை சபையால் இவ்வரி அறவிடப்பட்டுவந்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வகித்த பதவி கைமாற்றப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி. ரத்னாயக்கவிடமே அப்பதவி கையளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா அபிவிருத்தி குழுவின் தலைவராக ஆறுமுகன் தொண்டமானே பதவி வகித்தார்.  அந்த பதவியே சி.பி.ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

குழந்தையை பெற்றெடுத்த 14 வயதான சிறுமி, தன்னிடமிருந்து 12 நாட்களான குழந்தையை பிரிக்கவேண்டாம் என்று நீதிமன்றத்தில் மன்றாடிய சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எம். மகேந்திர ராஜாவிடமே, அந்த சிறுமியான தாய் மன்றாடியுள்ளார். 

14 வய தான அந்த சிறுமியின் தாயாருடைய கள்ளக் காதலானால் சிறுமியும் கர்ப்பிணியாகியுள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தபோது, சிறுமியிடமிருந்து குழந்தையை பிரித்து,  சரியான பாதுகாவலரிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவிடுமாறு வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் கோரியிருந்தனர். 

இதன்போது, மேற்படி சிறுமியான தாய், நீதிமன்றத்தில் மன்றாடியுள்ளார். அதனை அவதானித்த நீதவான், இருவரையும் தங்க வைப்பதற்கு தகுதியான இடம் கிடைக்கும் வரையிலும், வைத்தியசாலையில் தங்கவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 
 
அத்துடன் கர்ப்பத்துக்கு காரணமான சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இந்த வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதியன்று மீண்டும் அழைக்குமாறும் நீதவான் கோரிக்கை விடுத்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை,  மாளிகாவத்தை பகுதியில் வைத்து கூரிய ஆயுத்தால் கடந்த 17ஆம் திகதி தாக்கப்பட்டார்.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டமை இந்தியாவில் மறைந்து வாழும் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான புகுடு கண்ணாவின் திட்டம் என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இது குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் 17ஆம் திகதி மாலை 6.39 அளவில் மாளிகாவத்தை சத்தர்ம விஹாரைக்கு முன்னாள் தாக்கப்பட்டார்.

அவர் தாக்குதலுக்கு உள்ள விதம் அருகில் இருந்த சி.சி.ரி.வியில் பதிவாகியிருந்தது.

இதேவேளை நேற்றிரவு போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவரால் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டதுடன், முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே தாக்குதலின் பின்னணியில் புகுடு கண்ணாவின் திட்டம் உள்ளமை தெரியவந்துள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தாக்குதலை மேற்கொண்டு தப்பியவர்களில் ஒருவர் சுவாமிநாதன் எனப்படும் புதா என தெரியவந்துள்ளது.

இலங்கையின் சந்தையின் தங்கத்தின் விலை, வெகுவாக அதிகரித்துள்ளது. 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 83 ஆயிரம் ரூபாய் முதல் 84 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றது. 

செய்கூலி இல்லாமலே தங்கத்தின் விலை இதுவரும். செய்கூலியும் சேர்த்தால் தங்கத்தின் விலை இன்னுமின்னும் அதிகரிக்கும்

ஆகக் கூடுதலாக ஒரு பவுண் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கத்தின் விலை 70 ஆயிரமாக இருந்தது. 

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் கோப்பையை தாரைவார்த்து விட்டதாக தெரிவித்திருக்கும் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கூற்றுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  மஹேல ஜெயவர்த்தன, சாட்சிகள் இருக்கின்றதாக எனவும் கேட்டுள்ளார். 

இதேவேளை, தேர்தல் சாகசம் தொடங்கிவிட்டது என்றும் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள்   அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை  வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் வீரர்களை இணைத்துக் கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்துக்கு   இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  மஹேல ஜெயவர்த்தன தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர். 

ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர். 

தொழில்நிமிர்த்தம் அங்கு சென்று நாடு திரும்ப முடியாமல் தவித்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டனர்.

 ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 எனும் விசேட விமானத்திலேயே அவர்கள், இன்று (18) காலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

அந்த விமானத்தில் மொத்தமாக 290 பேர் வருகைதந்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்தே கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம்  வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில்  இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

இதேவேளை, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். 

© 2019 Asian Mirror (pvt) LTD