ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான தகவலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “நான் கொரோனா தொற்று பரிசோதனை செய்தேன். அதில் தொற்று உறுதியாகியுள்ளது, ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு தயாராகிறேன்.
கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஐக்கியம் மற்றும் நல்லினத்திற்கான அலுவலகம் மீண்டும் விரைவில் திறக்கப்படவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அலுவலகம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி திறக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன் தலைவராக பணியாற்றினார்.
எனினும் புதிய அரசாங்கம் வந்தவுடன் அந்த அலுவலகம் மூடப்பட்டதுடன், அதன் பணிப்பாளரும் நீங்கினார்.
இந்நிலையில் மீண்டும் அந்த அலுவலகத்தை தீர்ப்பதற்கான யோசனையை நிதியமைச்சர் அலிசப்ரி அமைச்சரவைக்கு அண்மையில் சமர்பித்துள்ளார்.
தலைவர் ஒருவருடன் பணிப்பாளர் உட்பட 11 பேருடன் இந்த அலுவலகம் மீண்டும் பணிகளை தொடங்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்றுமுன்தினம்
இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து வரும் திங்கள்
கிழமை (நாளை) வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழைப்பை நேற்று கிளிநொச்சியில் வைத்து யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள்
கூட்டணி, ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் அமைப்பு அனைவரும் ஒன்றாக விடுத்துள்ளனர்.
யாழ் பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு
தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் நினைவாக
அமைக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று(09) தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிஸையை சேர்ந்த 74 வயது பெண், காத்தான்குடியை சேர்ந்த 64 வயது ஆண், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 76 வயது ஆண் மற்றும் ஒப்பநாயக்க பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து கண்டுடெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 62 பயணிகளுடன் பயணித்த விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேருடன் அந்நாட்டின் கலிமண்டன் மாகாணம் போண்டியானாக் நகருக்கு இன்று மதியம் போயிங் 737 - 500 ரக விமானம் புறப்பட்டது.
ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.
தீவு நகரான போண்டியானாக்கிற்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் பயனிக்கும்போது விமானம் மாயமாகியுள்ளது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். ஜாவா கடற்பரப்பிற்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டதால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால், ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால், இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனாலும், கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை
நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மீட்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற மீட்புப்படையினர் விமானம் கடலுக்குள் விழுந்ததா? அவ்வாறு விழுந்திருந்தால் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது? அவர்களில் யாரேனும் உயிருடனரா? என்பது குறித்து ஜாவா கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
62 பேருடன் சென்ற போயிங் 737 விமானம் மாயமாகியுள்ள நிலையில், விமானத்தின் சிதைந்த பாகங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகங்கள் குறித்தும், மாயமான போயிங் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31ம் திகதி முதல் வாட்ஸப் கொண்டுவந்த புதிய அப்டேட் நிபந்தனையினால் உலகில் இலட்சக்கணக்கான வாட்ஸப் பவனையாளர்கள் அதன் பயன்பாட்டை இழந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி வாட்ஸப் நிறுவனம் புதிய நிபந்தனைகளை விதிக்க உத்தேசித்துள்ளது.
முன்வைக்கப்படும் நிபந்தனைகளை ஏற்க மறுப்பவர்களுக்கு தாராளமாக வாட்ஸப் செயலி பயன்பாட்டில் இருந்து விலகலாம் என்கிற ஏகத்தாள அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பழைய தொலைபேசியை பயன்படுத்தும் அதிலும் இலங்கையர்களுக்கு வாட்ஸப் தூரப்போய்விடும் அபாயம் இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையில் தண்டப் பணம் செலுத்த முடியாமல் உள்ள சிறைக் கைதிகள் அனைவரையும் அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே, இவ்வாறு கைதிகளை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
தண்டப் பணம் செலுத்த முடியாமல் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், முதல் கட்டமாக கைதிகளுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பிணை வழங்க முடியுமான 8,000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வழக்கு நடவடிக்கைகள் முடிந்து, தண்டப் பணம் செலுத்த வசதியின்றி சிறைகளில் உள்ள கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள்கள், பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை தொடர்கின்றது.
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 24 வயது நிரம்பிய லட்சுமணன், சில நாட்களுக்கு முன்பு மூர்மார்க்கெட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் பழைய செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார்.
தற்போது சென்னையில் செல்போன் திருட்டு அதிகமாகி வருகிறது. அதிலும் தற்போது ஒரு கொடுமையான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது செல்போனை நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே பறித்துக்கொண்டு செல்கின்றனர். இந்தநிலையில் லட்சுமணன் தான் வாங்கிய பழைய செல்போனில், தனது சிம் கார்டை போட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், லட்சுமணனுக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், இந்த செல்போன் ஒருவரின் தொலைந்துபோன செல்போன். எனவே விசாரணைக்காக நீங்கள் காவல் நிலையம் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து லட்சுமணன் மூர்மார்க்கெட்டில் ஒரு கடையில் வாங்கினேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து லட்சுமணனிடம் போலீசார், நாங்கள் அழைக்கும்போது, எங்களுடன் வந்து செல்போன் விற்ற நபரை அடையாளம் காட்ட வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு மன உளைச்சலில் இருந்துள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் பெற்றோரிடம் புலம்பியுள்ளார் லட்சுமணன்.
இந்தநிலையில் நேற்று காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே,மின்சார ரயிலில் அடிபட்டு, லட்சுமணன் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே பொலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமணன் மரணம் தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலாப்பயணிகள் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர்.
நேற்று முற்பகல் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்பட உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பிரயாணிகள் மற்றும் சுற்றுலாத்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறை வழிமுறைகளை சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.