web log free
July 04, 2020
editor

editor

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் தேடப்பட்ட இருவர் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, சீதுவ மற்றும் ஜா- எல பகுதிகளில் உள்ள வீடுகளின் சொத்துக்களை திருடிய பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட வீட்டு உபகரணங்கள் பலவும் சந்தேக நபர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

32 மற்றும் 41 வயதுடையவர்களை கைதுசெய்யப்பட்டதுடன், நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெடிகந்தபார பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கல்கிஸை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, விபசார விடுதியின் முகாமையாளரான பெண் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, புஸ்ஸ மற்றும் மீகஹாதென்ன ஆகிய பகுதிகளை சேர்ந்த 27, 32 மற்றும் 36 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான குறித்த பெண்கள் கல்கிஸை நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் பக்லான் மாகாணத்தில் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பக்லான்-இ-மர்காஷி மாவட்டத்தில் ஆப்கான் இராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த குகைகள் மற்றும் ஆயுதகிடங்குகள் மீது வான் வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா முகமது மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர். ஆப்கான் இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16ஆம் திகதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் அளித்த பதிலில் ‘கிரிக்கெட் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லமாட்டேன்.

இது சர்வதேச கிரிக்கெட் தொடர். இதில் விளையாடுவதா? வேண்டாமா? என்பதை இந்திய கிரிக்கெட் சபையும் சர்வதேச கிரிக்கெட் சபையும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு மற்றும் நிலைமைக்கு தக்கபடி இறுதி முடிவை மேற்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

ஐ.சி.சி. கூட்டம் வருகிற 27ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதிவரை டுபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொக்கைன் பயன்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (20) வாக்குவாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரிடமும் மரபணு பரிசோதனை (டீ.என்.ஏ) நடத்தவேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், இந்த வாதப் பிரதிவாதங்களின் போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, 225 பேரிடமும் பரிசோதனை நடத்தவேண்டியதில்லை. கொக்கைன் பயன்படுத்துவதாக கூறப்படும் 24 எம்.பிகளிடம் மட்டுமே பரிசோதனை நடத்தினால் போதும் என்றார்.


அரசியலமைப்பு பேரவை தொடர்பில், பாராளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை, முழுநாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியினால் இந்த விவாதத்துக்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று(20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிக்கள், அரசியலமைப்பு பேரவை தொடர்பிலான விவாதத்தின் போது, பல இரகசியங்களை அம்பலப்படுத்துவோம் என அறிவித்துள்ளனர்.


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 24 பேர், கொக்கைன் பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சி, நான்கு பேரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இன்று கூடிய, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே, மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, சபைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு, தன்னுடைய விசாரணை அறிக்கையை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுக்கு கையளிக்கும்.


தேசிய அரசாங்கம் குறித்த பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இந்த வாரம் இடம்பெறாது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதே குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரேரணை மீதான விவாதம் குறித்த தினத்தை தமக்கு பிரதமர் இதுவரை அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தும் இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங், இதனைக் கூறியுள்ளார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம்.

தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

© 2019 Asian Mirror (pvt) LTD