web log free
July 04, 2020
editor

editor

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர், புதிய பிணைமுறிகளைக் கோரி, மத்திய வங்கி மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பை வெளியிடவுள்ளது.

அரசாங்கம் கடன்களை திருப்பி செலுத்துவதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டில் 5.9 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இதில், 2.6 பில்லியன் டொலர், முதல் காலாண்டுக்குள் செலுத்த வேண்டியவையாகும். ஏற்கனவே வைப்பில் இருந்த 1 பில்லியன் டொலரை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காக திருப்பிச் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், சீன வங்கியிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரப்பட்டது. எனினும், சீன புத்தாண்டு விடுமுறைகளால் இந்த கடனுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த நீண்ட பேச்சுக்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடன் ஜனவரி மாத கடைசியில் இறுதி செய்யப்படும் என்றும், இன்னொரு 700 மில்லியன் டொலர் மார்ச் முடிவுக்குள்ளும் இறுதி செய்யப்படும் என்றும் முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றில் ஏற்பட்டுள்ள தாமதங்களை அடுத்து, அரசாங்கம், 1 பில்லியன் டொலருக்கான பிணைப் பத்திரங்களை வெளியிட்டும், 1 பில்லியன் டொலருக்கான பான்டா மற்றும் சாமுராய் பிணைமுறிகளின் மூலமும் 2 பில்லியன் டொலரைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சீன வங்கியுடன் மீண்டும் பேச்சுக்களை பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


4 கோடி ரூபாய் சுங்க வரியை மோசடி செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுங்க திணைக்களத்தைச் சேர்ந்த இருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைக்கான சுங்க வரியை மோசடி செய்தனர் என்ற, சுங்க அதிகாரி மற்றும் சுங்க பரிசோதகர் ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேற்படி விவகாரம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோஷனா அபேவிக்ரவின் முன்னிலையில், நேற்று (18) அறிக்கையிடப்பட்டதை அடுத்தே, அவ்விருவருக்கும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய இருவரும், நீண்ட நாட்களுக்குப் பின்னர், சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தனர்.

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மேல்மாகாண நடவடிக்கை குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலேயே இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இவ்விருவரும் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை புனித பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்னால் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த எட்டு பேரில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொண்டு விட்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவீதியைச் சேர்ந்த நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவரை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ரைனா என்றழைக்கப்படும் நபரொருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இரண்டு பாதாள உலகக் கோஷ்டிக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிய மோதல்கள் காரணமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ரைனா என்றழைக்கப்படும் ஷரிந்து சலேக்க ஷங்கல்ப என்பவர், கொழும்பு-12, சுரியமல்புரவைச் சேர்ந்த 24 வயதான நபராவார்.

இதேவேளை, டுபாயில் மாகந்துரே மதுஷ் என்பவருடன் கைது செய்யப்பட்டுள்ள, வாழைத்தோட்டம் தினுக எனும் பாதாள உலகக் கோஷ்டி தலைவனின், சகாவான ரைனா, பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குற்றவாளியென பொலிஸார் தெரிவித்தனர்.


மாரவிலவில் கோர விபத்தொன்றை ஏற்படுத்தி, நால்வரை படுகொலைச் செய்து, மேலும் 19 பயணிகளுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், மாரவிலவில் நேற்று (18) இடம்பெற்ற இந்த கோர விபத்தில், நால்வர் பலியாகினர். அத்துடன், 19 பேர் காயமடைந்தனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸொன்று, வீதியை விட்டுவிலகி, பெரிய மின்மாற்றியில் மோதுண்டே விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.


மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் நேற்று (18) ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மையை ஆராயும் அமைப்பே இவ்வாறு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், பிரதிவாதிகளாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


கொக்கேன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் அடங்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களை, கையளித்துள்ளேன் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அந்த ஆவணங்களை, சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமே கையளித்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் சென்ற வாரம் நடந்த கடுமையான தாக்குதலின் தொடர்பில், 23 சந்தேக நபர்களை இந்தியா தடுத்துவைத்துள்ளது. சம்பவத்தில் 40க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் Jaish-e-Mohammad தீவிரவாதக் குழுவுடன் தொடர்புகொண்டோரும் அடங்குவர். சென்ற வாரத் தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர் முகமது உமைர் (Mohammed Umair) உள்ளிட்ட தீவிரவாதிகளைத் தேடிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

உமைர் அந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல் நடந்த வட்டாரத்திலேயே அவர் பதுங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.கைதான சந்தேக நபர்களிடம் இந்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Jaish-e-Mohammad உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் இடங்கொடுப்பதாக இந்தியா சாடியுள்ளது. அதனை நிராகரித்த பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.

 

 

அரசியலமைப்பு சபையில் நெருக்கடி நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, அது தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தின் போது காணக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார்.

எதுல்கோட்டே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலஅவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது , 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தான் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

© 2019 Asian Mirror (pvt) LTD