web log free
July 04, 2020
editor

editor

காஷ்மீரில் சென்ற வாரம் நடந்த கடுமையான தாக்குதலின் தொடர்பில், 23 சந்தேக நபர்களை இந்தியா தடுத்துவைத்துள்ளது. சம்பவத்தில் 40க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் Jaish-e-Mohammad தீவிரவாதக் குழுவுடன் தொடர்புகொண்டோரும் அடங்குவர். சென்ற வாரத் தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர் முகமது உமைர் (Mohammed Umair) உள்ளிட்ட தீவிரவாதிகளைத் தேடிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

உமைர் அந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல் நடந்த வட்டாரத்திலேயே அவர் பதுங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.கைதான சந்தேக நபர்களிடம் இந்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Jaish-e-Mohammad உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் இடங்கொடுப்பதாக இந்தியா சாடியுள்ளது. அதனை நிராகரித்த பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.

 

 

அரசியலமைப்பு சபையில் நெருக்கடி நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, அது தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தின் போது காணக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார்.

எதுல்கோட்டே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலஅவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது , 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தான் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் திரைசேரி ஆகியவற்றுடன் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள மூன்று வருடங்களுக்கு விரிவாக்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான கடன் உதவி தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வருகை தந்திருந்தனர்.

2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கான மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தினால் உத்தியோபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியது.

மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமாரானதை அடுத்து, நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா சென்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்போது, இலங்கைக்கு வருவதற்கு கிறிஸ்டைன் லகர்டே உடன்பட்டிருந்தார்.

இந்த கடன் திட்டத்தின் அடிப்படையில் தற்போதுவரை நான்கு சந்தர்ப்பங்களில் 759.9 மில்லியன் டொலர் கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இடம்பெறும் பேச்சு வார்த்தைகளில் மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கடன் திட்டம் இலங்கைக்கு வழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொது தேர்தலை வெற்றிக் கொள்ளும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர், அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பிலேயே பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும், இந்தப் பேச்சுக்கள் சுமுகமாக இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு ஈரான் கடற்படையின் மூன்று கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

புஷ்ஷர், லாவன், பயன்டோர் ஆகிய பெயர்களைக் கொண்ட ஈரானிய கடற்படைக் கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்தக் கப்பல்களுக்கு கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

நான்கு நாட்கள் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பல்கள், நாளை கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள 300இற்கும் அதிகமான எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு எலும்புக்கூடுகளின் மாதிரி எலும்புகள் புளோரிடா ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அவற்றில் ஐந்து மாதிரிகள் தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் கிடைத்ததாகவும் அந்த அறிக்கை புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச் 8ஆம் திகதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், மார்ச் 8ஆம் திகதி நண்பகல் அது வெளியிடப்படும் வாய்ப்புள்ளதாகவும், அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அதன் பிரதி ஒன்று வழங்கப்படும். அறிக்கையை ஆராய்ந்து பதிலளிப்பதற்கு வசதியாகவே இலங்கை அரசாங்கத்துக்கு முன்கூட்டியே பிரதி ஒன்று வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் நடந்த தற்கொலைத் தாக்குதல் குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமானவர்கள் உரிய தண்டனையைப் பெறுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்று முன்தினம், 350 கிலோகிராம் எடை கொண்ட வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, இந்திய இராணுவத்தின் வாகனத்தோடு மோதிய சம்பவத்தில் அந்தத் தாக்குதல் இடம்பெற்றது.

காஷ்மீரின் புல்வாமா (Pulwama) வட்டாரத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், குறைந்தது 37 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பு, அந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள இந்தியா உறுதி தெரிவித்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் கொண்டிருக்கும், 'வர்த்தகத்திற்கான ஆக விருப்பமான நாடு' என்ற நிலை இரத்து செய்யப்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

 

அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்திய நபரை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று மதியம், சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றது.

அதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிக்காரர், தொழிற்பேட்டையில் பணியாற்றியதாக நம்பப்படும் 45 வயது கேரி மார்ட்டின் என்றவர். அவர் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

© 2019 Asian Mirror (pvt) LTD