web log free
July 04, 2020
editor

editor

பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.

எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார்.

ஆனால் அண்மைகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் பயங்கரவாதிகளின் 8 குகைகள் நிர்மூலமாக்கப்பட்டன.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சார்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அத்துடன், பரீட்சைகள் திணைக்கள இணையத்தளமாக www.donets.lk இலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

கொழும்பு கொட்டாஞ்சேனை - மெல்வத்த - மைத்ரிபோதி மாவத்தையில் பெண் ஒருவர் மீது துப்பாக்கித் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் மாகாந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரானின் மற்றுமொரு மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்றில் இருந்து 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மருதானை ரயில் நிலையத்தின் அருகாமையில் குறித்த பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது, குறித்த கேரளா கஞசா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, புதிய ஜனாதிபதி, வரும் டிசெம்பர் 9 ஆம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொதுஜன முன்னணியின் புதிய ஜனாதிபதியின் கீழ், தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் இந்திய ரூ.6 கோடியே 74 இலட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை டுபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பயணபொதியின் பக்கவாட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு தைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு இந்திய ரூ.6 கோடியே 74 இலட்சம் என தெரியவந்தது.

இந்த தங்க கட்டிகள் கடத்தல் சம்பவம் குறித்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 144ஆவது நாளாக நேற்று (13) அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளார்.

இன்று நண்பகல் 12.10 மணியளவில் ஹைதரபாத் நகரிலிருந்து யூ.எல். 178 என்ற விமானம் மூலம் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்திய ஊடகமொன்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்​கொள்வதற்காக, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை மீண்டும் திறக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சுகவீனமுறும் போது, அவர்கள் அவுஸ்தரேலியாவிற்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மூலத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த போதும் இது பயனளிக்கவில்லை.

எதிர் கட்சிகளான பசுமை கட்சியும், தொழிற்கட்சியும் இணைந்து இந்த சட்ட மூலத்தை வெற்றிப்பெறச் செய்துள்ளன.

இந்த நிலையில், அகதிகளுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமை மீளத் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

© 2019 Asian Mirror (pvt) LTD