web log free
May 30, 2020
editor

editor


கடந்தவாரம் நியமிக்கப்பட்ட இரு ஆளுனர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் தென் மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா, ஊவா மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களும், கட் அவுட்களும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வருமாறு இடம்பெற்றுள்ளன.

இதுபோன்று எல்.இ.டியில் ஒளிரும் வகையில் டிஜிட்டல் கட் அவுட் வைப்பது சினிமா வரலாற்றில் முதல் முறை என்று கூறப்படுகிறது.
இதனை அப்பகுதி அஜித் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த கட் அவுட்டை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளில் தாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கப் போவதாக விடுத்த மிரட்டலை மீட்டுக் கொண்டிருக்கிறது.

சட்டவிரோதமான, முறைப்படுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தாய்லந்து நல்ல முன்னேற்றம் கண்டு வருவதே அதற்குக் காரணம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.

தாய்லந்து மீன் இறக்குமதிகளுக்குத் தடை விதிப்பது தொடர்பான எச்சரிக்கையை அது, 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் விடுத்தது.

அப்போது முதல், தாய்லந்து அதன் மீன்பிடித் துறைக்கான சட்ட அமைப்புமுறையை, அனைத்துலகச் சட்டத்திற்கு இணையாகத் திருத்தி அமைத்துள்ளது. மேலும், அது தனது கண்காணிப்புக் கட்டமைப்புகளையும் மேம்படுத்தியுள்ளது.

 

ஹட்டன் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையே இவ்வாறு அறுத்துச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை, பிரதேசவாசிகளும் ஹட்டன் பொலிஸாரும் சுற்றி வளைத்து மட்டக்கி பிடித்து தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

பிடிப்பட்ட இளைஞனை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியபோது, குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

எனினும் அவரது அடையாள அட்டையில் பத்தனை பிரதேசமென குறிப்பிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நாடெங்கிலும் மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அறிவித்தார்.

சமகால அரசாங்கம் மக்கள் உணர்வுகளை அறிந்திருக்கிறது. மேல் - கீழ் - நடுத்தர மட்டங்களில் சமமாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கிறது.

கம்பெரலிய திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்காகவும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கிராமப்புறங்களுக்கு இவ்வளவு அதிகமான நிதி வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 திருகோணமலையில் கடற்படைத் தளத்தைஅமைப்பதற்கு அமெரிக்காவுக்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளதா என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், விமல் வீரவன்ச இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, “இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சின் கீழ் இந்த விடயம் இல்லை.

இது பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட விவகாரம், பாதுகாப்பு அமைச்சிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பதிலளித்துள்ளார்.


இராணுவ டிரெக் வண்டியும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.


கிளிநொச்சி-பளை, இயக்கச்சி பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.


அதிக வேகத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தையடுத்து டிரக் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


வட மாகாண ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, கொழும்பில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார்.


இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

 

கடலூரில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் நீண்ட கால சிறை தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தன் பள்ளிக்கூடம் அருகே தின்பண்டம் விற்றுவந்த லட்சுமி என்பவருடன் நட்புடன் பழகினார். அவர் அச் சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியதோடு, சிறுமியை தொடர்ந்து மிரட்டி, பல நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

பிறகு ஆனந்த ராஜ் என்ற நபருடன் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த சிறுமி தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார். இதன் பிறகு, வேறு ஒரு சிறுமியை அழைத்துவந்தால் விட்டுவிடுவதாக இந்த மாணவியிடம் கூறவே, அவரும் மற்றொரு 13 வயது சிறுமியை அழைத்துவந்தார். பிறகு இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் கும்பலிடம் விற்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு கடத்தப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் காவல்துறையை நாடினர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் பாதிரியார் ஒருவரும் சில அரசியல் பிரமுகர்களும் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்ததால், பல அமைப்புகள் கடலூரில் போராட்டத்தில் இறங்கின.
உள்ளூர் காவல்துறை இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என சிறுமியின் உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இதனால், வழக்கை 2016 ஜூலையில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக 30 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பேர் மீது கடத்தல், சிறுமிகளை விற்பனை செய்தது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இதில் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டதால், மீதமுள்ள 17 பேர் மீது வழக்கு நடந்துவந்தது. இந்த வழக்கை கடலூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது.


வடமாகாணம் உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று (07) வழங்கிவைக்கப்பட்டது.


இதன்பிரகாரம், ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னக்கோனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட பேராசிரியர் தாம் திஸாநாயக்கவும் வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் இராகவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

© 2019 Asian Mirror (pvt) LTD