web log free
July 04, 2020
editor

editor

 

இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதியன்று, எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) விடுமுறை தினம் என்பதால், எரிபொருள் விலை மாற்றம், இன்று (11) வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் நிலையான அரசியல் பின்புலமொன்று காணப்படுவது மிகவும் பயனுடைய என்று கூறிய திஸ்ஸ அத்தனாயக்க, அவ்வாறான ஒருநிலை நாட்டில் தற்போது காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலையான அரசாங்கமொன்று மக்களால் உருவாக்கப்படவேண்டும் என்றும் தந்போதைய நிலையில் நாட்டு மக்கள் தேசிய அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைப்பதைவிட தேர்தலுக்கு சென்று பெரும்பான்மையுடன் அரசாங்கமொன்றை உருவாக்குவதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஏ.எச்.ஏ. {ஹஸைன்

சீன அரசாங்கத்தின் 234 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்தார்.

இவ்வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திரசிகிச்சைக் கூடம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவு என்பவை அடங்கலாக 3மாடிக் கட்டிடம் அமையப் பெறவுள்ளது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் எம்.எஸ். சுபைர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


வங்கிக் கணக்கில், ஆகக் குறைந்த தொகையாக, 1000 ரூபாவுக்கு குறைந்த தொகையொன்று நிலுவையிலிருக்குமாயின், மாதாந்தம் 25 ரூபாவை கழித்துக்கொள்வதற்கு வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

மாதாந்தம் 25 ரூபாய் என்றடிப்படையில் கழித்து, அந்த கணக்கை மூடிவிடுவதற்கும் வங்கிகள் தீர்மானித்துள்ளன என அறியமுடிகின்றது.

1000 ரூபாவுக்கு குறைந்த கணக்கு வழக்குகளை பேணுவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்தே, மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அவ்வாறான கணக்குகள், 40 மாதங்களுக்குள் இரத்துச் செய்யப்பட்டுவிடும் என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன.


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, பொலிஸ் அதிகாரியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அதிகாரி, பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரியின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு ஒத்துழைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சிவா என்பவரை தேடி, பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை பிரதேசத்திலுள்ள சிவாவுக்கு சொந்தமான வீடொன்றை, நேற்றிரவு சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சென்றாயன் தனது மனைவி கர்ப்பமாக இருந்த செய்தியை கேட்ட சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த காட்சி இன்னும் பலருக்கு நினைவிருக்கும்

இந்த நிலையில் சென்றாயனுக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது. இன்று சென்றாயனின் மனைவி கயல்விழி ஆண்குழந்தையை பெற்றெடுத்ததாகவும் தாயும் சேயும் நலம் என்றும் சென்றாயன தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்றாயன் நண்பரும் அவர் நடித்த 'மூடர் கூடம்' என்ற படத்தை இயக்கியவருமான இயக்குனர் நவீன், சென்றாயனுக்கு தனது டுவிட்டர் பக்க்த்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர், 'தம்பி சென்றாயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்' என்று கூறியுள்ளார்.

 

கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்கு அமெரிக்கத் துருப்புகள், தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் தென்கொரிய அதிகாரிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஒப்பந்தம் அடுத்த வருடம் காலாவதியாகும்.

அதிகப் பணம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்ததை அடுத்து பழைய ஒப்பந்தம் காலாவதியாகியிருக்கிறது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்திற்குத் தென்கொரிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும்.

தென்கொரியாவில் அமெரிக்கத் துருப்புகள் இயங்குவதற்குப் புதிய ஏற்பாட்டின்படி, தென்கொரியா 924 மில்லியன்டொலர் வழங்கவேண்டும்.

முன்பு அந்தத் தொகை 850 மில்லியன் டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

அரசாங்க நிதியான 1MDB தொடர்பான ஊழலில் நஜிப் பில்லியன் கணக்கான டொலரைத் திருடியதாகக் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவருடைய கூட்டணிக் கட்சி ஆட்சியை இழப்பதற்கு 1MDB விவகாரம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.

பண மோசடி செய்ததாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நஜிப் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கடந்த பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களை இழக்காத இந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது.

இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ஓட்டங்களில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி துடுப்பாட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரை வென்று அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் அந்த அணி வீரர்கள் இருப்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

ஹாமில்டனில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

2012-ம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்த ஆக்லாந்து மைதானத்தை விட இது சற்று பெரியது. ஆனாலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், இங்கு ஓட்ட மழையை எதிர்பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்,

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.

இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளதுடன், முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் சந்திக்கின்றன.

முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

© 2019 Asian Mirror (pvt) LTD