web log free
July 04, 2020
editor

editor

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

அரசாங்க நிதியான 1MDB தொடர்பான ஊழலில் நஜிப் பில்லியன் கணக்கான டொலரைத் திருடியதாகக் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவருடைய கூட்டணிக் கட்சி ஆட்சியை இழப்பதற்கு 1MDB விவகாரம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.

பண மோசடி செய்ததாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நஜிப் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதனால் இந்த 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கடந்த பத்து 20 ஓவர் போட்டித் தொடர்களை இழக்காத இந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது.

இந்திய அணி ஹாமில்டனில் 4-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 92 ஓட்டங்களில் சுருண்டதை யாரும் மறந்து விட முடியாது. அதே மைதானத்தில் தான் இந்த போட்டியும் நடப்பதால் இந்திய வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அதிரடி துடுப்பாட்டக்காரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சிலும் நல்ல நிலையிலேயே உள்ளது.

ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்து விட்ட நிலையில், 20 ஓவர் தொடரை வென்று அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் அந்த அணி வீரர்கள் இருப்பதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

ஹாமில்டனில் இதுவரை எட்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

2012-ம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்திய அணி இங்கு 20 ஓவர் போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது 20 ஓவர் போட்டி நடந்த ஆக்லாந்து மைதானத்தை விட இது சற்று பெரியது. ஆனாலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், இங்கு ஓட்ட மழையை எதிர்பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்,

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, பிளைர் டிக்னெர்.

இலங்கை நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளதுடன், முன்னதாக இதே மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் சந்திக்கின்றன.

முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

நாடாளுமன்றத்துக்கு வருகை தருவோர் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள், நாடாளுமன்ற வளாகத்துக்குள் குடிநீர் போத்தல்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் சகல இடங்களிலும் குடிதண்ணீர் காணப்படும் நிலையில், வெளியில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வருவது அவசியமற்றது என நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற ஊழியர்கள், இவ்வாறு குடிநீர் போத்தல்களை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிஅளிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவரையே, தாம் வேட்பாளராக முன்நிறுத்தவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கழிந்துள்ளன. எனினும், தமிழ் மக்களை திருப்திபடுத்த முடிந்துள்ளதுடன், அரசியல்வாதிகளை திருப்பதிபடுத்த முடியவில்லை” என, அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த நான்கு வருடங்களில் அவ்வாறான ஒரு செயற்பாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களில் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே இவ்வாறான முயற்சி தற்போது, மேற்கொள்ளப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் இலங்கையில் தொடர்புகளை பேணிவந்த நபர்கள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 25 பேரில் 7 பேர் மாத்தறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 4 பேர் கம்புருபிட்டி பிரதேசத்தையும், இருவர் வெலிகமை பிரதேசத்தையும், ஒருவர் கந்தர பிரதேசத்தையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

டுபாயில் கைதான, ஜங்கா எனப்படும் அனுஷ்க கவிஷாலின் மாத்தறை - கந்தரை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இராணுவ சீருடையும், துப்பாக்கித் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து 18 இராணுவ சீருடைகளும், டீ56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 23 தோட்டக்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் ஜங்காவின் 82 வயதான தாத்தா கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஜங்காவிற்கு, குறித்த இராணுவ சீருடைகளை வழங்குவதற்காக, உதவி புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் அநுராதப்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மாகந்துரே மதூஷின் டுபாயில் உள்ள மனைவி திலானி நிஷாயா திலகரத்னவிற்கு சொந்தமான கார் ஒன்று பாதுக்கை போரேகெதர பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு பேரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டுபாயில் கைது செய்யப்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் உள்ள விருந்தக உரிமையாளரான சன்சைன் சுத்தாவின் விருந்தகத்தில் இருந்து நடிகர் ரையன் வேன் ரூயன் பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி காணொளிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அருணாசலப் பிரதேசத்திற்கு வருகை புரிந்ததைச் சீன வெளியுறவு அமைச்சு கண்டித்துள்ளது.

அந்த இடத்தைச் சீனாவும் உரிமை கோருகிறது. அந்தப் பகுதியில் இந்தியத் தலைவர்களின் நடவடிக்கைகளை முற்றிலும் எதிர்ப்பதாகச் சீனா தெரிவித்தது.

மே மாதம் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார்.

இருநாடுகளுக்கிடையில் உறவை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தென் திபெத் என்று சீனா சொல்லும் வட்டாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.

 


யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன? நடந்தது என்பதை தெளிவுப்படுத்துமாறும், அவர்களுக்கு நீதிக்கோரியும் யாழ்ப்பாணத்தில், கறுப்பு பட்டியணிந்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 950 பேர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 3,876 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 950 சாரதிகளும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் தம்வசம் வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 1,033 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமான முறையில், ஆயுதங்களை வைத்திருந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.


மதுஷின் சகாக்களில் ஒருவரான ஜங்கா என்பவருக்கு இராணுவ சீருடையை வழங்கியிருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரை, அனுராதபுரத்தில்வைத்து இராணுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்பவருடன் ஜங்கா என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜங்கா என்றழைக்கப்படும் துமே ஹேவாதுரகே அனுஷ்க கவிஷால் என்வரது மாத்தறை வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, இராணுவ சீருடைகள்-18 மற்றும் ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 23 கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2019 Asian Mirror (pvt) LTD