web log free
July 04, 2020
editor

editor


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.


மதுஷின் சகாக்களில் ஒருவரான ஜங்கா என்பவருக்கு இராணுவ சீருடையை வழங்கியிருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரை, அனுராதபுரத்தில்வைத்து இராணுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்பவருடன் ஜங்கா என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜங்கா என்றழைக்கப்படும் துமே ஹேவாதுரகே அனுஷ்க கவிஷால் என்வரது மாத்தறை வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, இராணுவ சீருடைகள்-18 மற்றும் ரி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 23 கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள் மாகந்துரே மதுஷ் என்பவரின் மனைவியுடையது எனக் கூறப்படும் காரொன்றை, பாதுக்க பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.


தொம்பே, வனலுவாவ வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், திருமணமான ஜோடியொன்று காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கருத்துமோதல்களை அடுத்தே, இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் 23 வயது என்றுத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.


பாராளுமன்றத்திலுள்ள மின்னுயர்த்திகளில் ஆறுபேருக்கு மேல் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு, அறிவுறுத்தல்களும் ஒட்டப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேவையாளர்கள், ஏனையோர் பயணிக்கும் சகல மின்னுயர்த்திகளிலும் அந்த அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சபையமர்வில் கலந்துகொள்வதற்காக, மின்னுயர்த்தியில் தாங்கள் வந்துகொண்டிருந்த போதே, இடைநடுவிலேயே அது செயலிழந்தமையால், பாரிய அசௌகரியங்களுக்கு தாங்கள் முகம் கொடுத்தோம் என்றும், சுமார் 12 உறுப்பினர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் சிக்கித்தவித்தோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி., கடந்த வியாழக்கிழமை, சபாநாயகரின் கவனதத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து மின்னுயர்த்தியை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு கட்டமாகவே மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்துக்குள் தண்ணீர் போத்தல் கொண்டுச் செல்வதற்கு, நேற்று (8) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக, பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு வருகின்ற விருந்தாளிகள், பாராளுமன்றத்தில் சேவையாற்றுகின்ற சேவையாளர்கள் உள்ளிட்ட எவருமே, தண்ணீர் போத்தல்களை எடுத்துவரமுடியாது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் தண்ணீர் பருகக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் குடிதண்ணீருக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால், வெளியிலிருந்து தண்ணீர் போத்தல்களை கொண்டுவரவேண்டிய தேவையில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்யத ப்ருஸ் மெக் ஆத்தர் என்ற நபருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் இந்த கொலைகளை செய்துள்ளார்.

ஸ்கந்தராஜா நவரட்ணம் மற்றும் கிரிஷ்ண குமார் கணகரட்ணம் ஆகிய இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்ததாக 67 வயதான மெக் ஆர்த்தர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளாக பிணைக்கு விண்ணப்பிக்க முடியாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.

பெங்களூர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவே மகிந்த ராஜபக்ச அங்கு சென்றுள்ளார்.

நாளை வரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், மகிந்த ராஜபக்ச, இந்திய- இலங்கை உறவுகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன், நாமல் ராஜபக்ச, லொகான் ரத்வத்த, டிலான் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் பெங்களூர் சென்றுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆணைக்குழு நிராகரிததுள்ளது.

இதனால் தாம் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு படையினர் கொல்லப்பட்டமைக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, ஜனாதிபதிக்கு கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியர் ஜி.எஎல்.பீரிசின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்ற நிலையில், பசில் ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தை தவிர்த்துள்ளார் என கூறப்படுகின்றது.

© 2019 Asian Mirror (pvt) LTD