web log free
July 04, 2020
editor

editor

 

பஸ் பொட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு, கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதனால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், கம்பஹா நீதிமன்ற வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பஸ் பொட்டாவின் சகாக்களா அல்லது வேறு பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் பிற்பகல் 3.00 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.

கொழும்பு 01, 13, 14 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறும்.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 2019 ஆம் ஆண்டு பிறப்பின் போது, வாழ்த்துத் தெரிவித்து எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகளை அனுப்பியது யாரென்று தெரியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்து குறுஞ்செய்தி தொடர்பில் தகவலறியும் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனவரி 2 ஆம் திகதியன்று விண்ணப்பம் செய்யப்பட்டது.

விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்கள் தங்களுடைய தரவுகளில் இல்லை என்பதால், அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக, ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 34 வயதான இந்திய பிரஜையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டபோதைப்பொருள் 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியானது என, பொலிஸார் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார்.

இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டொலரை அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.


வருகிற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணி வைக்காது என்ற தகவல் உண்மைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தபோது, ஊடகங்களுக்கு இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மக்களுக்கு நல்லதை பறிமாற முற்பட்டு இருக்கும்போது, கையை சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

அ.தி.மு.க.வை தனியாக சொல்லவில்லை என எண்ண வேண்டாம். ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சியை எதிர்த்து வருகிறேன். எனவே அ.தி.மு.க.வுடனும் கூட்டணி கிடையாது.
நடிகர் ரஜினிகாந்த் தனது இல்ல திருமணத்துக்காக அரசியல் கட்சியினரை அழைக்க போயிருக்கிறார். இந்து திருமண முறை பற்றி தி.மு.க.வினர் பேசுவது புதிது அல்ல.

அது எனக்கு பேரதிர்ச்சியையும் தரவில்லை. அது அவர்கள் கருத்து. இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசியிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.

எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்போது யாருடன் கைகோர்க்கிறோம் என்பதை வெகு ஜாக்கிரதையாக ஆராய வேண்டியுள்ளது. எங்கள் கை கறை படுத்தாத வகையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.

‘ஏற்பாடுகள் அதை நோக்கித் தான் இருக்கிறது. அது மக்கள் கையில் தான் உள்ளது. எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் எண்ணம்’ என்றார்.


எப்.முபாரக்

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை 95ஆம் கட்டைப் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும், லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார் என தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (8) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து சீமேந்துகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும், கந்தளாயிலிருந்து கப்பல்துறை பகுதிக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அலுகோசு பதவிக்கு எதிர்வரும் திங்கள் கிழமை முதல், விண்ணப்பம் கோரப்படவுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, போதைப் பொருள் வர்த்தர்களுக்கு அந்த தண்டனையை செயற்படுத்துவதற்காக, ஜனாதிபதியினால் எடுக்கப்படும் தீர்மானங்களை இலகு படுத்துவதற்காகவே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அப்பதவிக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தூக்குமரத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக வேறு உபகரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பெருந்தோட்ட பிராந்தியத்தின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ( மலையக அபிவிருத்தி அதிகார சபை) அங்குரார்ப்பண நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.

அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன், விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் உட்பட மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால், தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்யப்போவதாக அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 750 ரூபாவாக அதிகரித்தமையை இட்டு தான் திருப்தியடையவில்லை என்றும், அதனை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

© 2019 Asian Mirror (pvt) LTD