web log free
August 11, 2020
editor

editor

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய முன்னணிக்கு எதிராக அமைக்க உத்தேசித்துள்ள புதிய கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 11 மணிக்கு இந்த பேச்சுவார்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணியை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதனையடுத்து, மார்ச் 14ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலானது வெற்றியளித்திருந்தாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாம்கட்ட சந்திப்பானது, இன்று முற்பகல் 11 மணிக்கு எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது ஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்தக் குற்றச்சாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5.2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டிருப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா மற்றும் கடுகன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் 3 இலங்கையர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 6 இந்தியர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை, மொரட்டுமுல்ல, கொஸ்பெலன பகுதியில் இடம்பெற்ற மூன்று கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேநபர் பதுங்கி இருப்பதற்கான உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் மிரிஹானை விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் இந்த பெண் கைதாகியுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரான பெண், நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அனுமதிப் பத்திர வழங்கல் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து கடந்த 14ஆம் திகதி மூன்று பேர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அனுசரணையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இன்றையதினம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த பிரேரணைக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்குகின்ற நிலையில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியங்களே இருப்பதாக கூறப்படுகிறது.

மனித உரிமைகள், மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை விரிவுப்படுத்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையின் ஊடாக, 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகால மேலதி அவகாசக் காலத்தில், மனித உரிமைகள் பேரவையின் இரண்டு அமர்வுகளில் இலங்கை குறித்த இரண்டு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வின் நேற்றையக் கூட்டத்தின் போது, இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலெட், இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்ட பல்வேறு விடயங்கள் நிறைவேற்றப்படாதிருக்கின்றமை குறித்து கவலைத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் கிளை அலுவலகம் ஒன்றை திறக்க எதிபார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் அரசியல் யாப்பு மற்றும் சட்டங்களுக்கு அமைய, இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறை ஒன்றை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

மேலும் மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார்.

மேலும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய முன்னணிக்கு எதிராக அமைக்க உத்தேசித்துள்ள புதிய கூட்டணி தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நாளை முற்பகல் 11 மணிக்கு இந்த பேச்சுவார்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்காபொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணியை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதனையடுத்து, மார்ச் 14ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலானது வெற்றியளித்திருந்தாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாம்கட்ட சந்திப்பானது, நாளை முற்பகல் 11 மணிக்கு எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் றோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது ஜன பெரமுன சார்பில் அந்த கட்சியின் தவிசாரளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப் பெரும மற்றும் ஜகத் வெல்லவத்த ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலேயே எதிரணி உறுப்பினர்கள் மீது அரசாங்கம், வழக்கு தாக்கல் செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நான்கு வழக்குகளில் இருந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், கருத்து வெளியிடுகையில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார.

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பழிவாங்கும் நடவடிக்கைகள் தான் இலங்கையில் இன்று காணப்படும் பாரிய பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “சிறிய காரொன்றை வாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அது இன்று அது முடியாமல் போயுள்ளது.

சிறிய கார் மாத்திரமல்ல பெரிய கார்களையும் வாங்குவதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது. அந்தளவுக்கு விலையை அதிகரித்துள்ளனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களையே இந்த அரசாங்கம் இன்று முன்னெடுத்துள்ளது.

வெற்றிப்பெறும் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்னிறுத்துவோம். அந்த வேட்பாளரை வெற்றிப்பெறசெய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு பிரித்தானியாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், “இலங்கையின் தீர்மானிக்கும் சக்தியை இல்லாதுசெய்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் ஒரே திட்டத்தில் காணப்படும் பகுதிகள். முழு படத்தையும் பார்த்தால்தான் புரியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தெரிவித்தால் மாத்திரமே வேறு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


போதைப்பொருள் தொடர்பிலான சட்ட திட்டங்களில் குறைபாடு நிலவுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான, பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்லத்தர, மொதரவான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில், துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உள்ளான நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (20) காலை அவருடைய வீட்டுக்குச் சென்ற உறவினர் ஒருவர், பிரதேச சபை உறுப்பினர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து குறித்த உறுப்பினர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர்கள் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் மற்றும் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெலியத்த பொலிஸார் கூறியுள்ளனர்.

© 2019 Asian Mirror (pvt) LTD