web log free
August 14, 2020
editor

editor

பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பணிப்பெண்களாக வெளிநாடுளுக்கு செல்கின்றமை காரணமாக பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இதனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், பெண்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது” என்றார்.


மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டொலருக்கு அதிகமான தொகையை பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 20ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் பிணை மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்றக்காவல், நாளை மறுதினம் முடிகிறது. அன்றைய தினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவரது சார்பில் மீண்டும் பிணை மனு தாக்கல் செய்யப்படுகிறது.

விசாரணையை விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட தலைமை நீதவான் எம்மா ஆர்புத்நாட் நடத்துவார் என தகவல்கள் கூறுகின்றன.

அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ் சார்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நவாஸுக்கு 6 வாரங்கள் பிணை வழங்குவதாக அறிவித்தது.

இதையடுத்து, ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் நவாஸ் ஷெரீப் வெளியே வந்தார். நவாஸ் ஷெரீப்பை வரவேற்க அவரது கட்சியினர் சிறைவாசலில் பெருமளவில் திரண்டனர்.

அவர் சென்ற கார் மீது பூக்களை வீசி உற்சாக வரவேற்பை ஆதரவாளர்கள் அளித்தனர். சிறையில் இருந்து நவாஸ் ஷெரீப் இல்லம் வரை, காரின் பின்னால் அணிவகுத்தபடி ஏராளமான ஆதரவாளர்கள் பின் தொடர்ந்து சென்றனர்.


அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊதியப் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று காலை 7.00 மணி முதல் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் பதிலளிக்காமை காரணமாக, இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளிலும் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலககுழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேராவுடன் மேலும் ஒருவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இருவரும் டுபாய் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எப்.இசட். 547 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடகர் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவருமே நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்றைய தினம் நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இன்று இரவு 9 மணி தொடக்கம் 9 மணிநேரத்துக்கு இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு,கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.


சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து 1232 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அமைச்சே தனக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள
அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்டியெழுப்புவதற்கு கடினமான அமைச்சு பதவியே தற்போதும் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள அமைச்சினை பொறுப்பேற்ற சிறிது காலத்துக்குள் இனிவரும் அமைச்சர்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத
வகையில், நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்மை அண்மித்த பிரதேசங்களில் உள்ள தொழிலற்ற பெண்களுக்கு, தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயற்றுகையில்
இந்த விடயங்களை அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருக்கின்றார்.

பாதாள உலகக்குழு தலைவர் 'கெசெல்வத்த தினுக'வின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய இராணுவம் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன.

தியத்தலாவையில் உள்ள இராணுவ முகாமில் இன்றைய தினம் ஆரம்பிக்க உள்ள மித்ரசக்தி - 6 என்ற இந்த கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 6ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டு இராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக 120 இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்போது இரு நாடுகளின் இராணுவத்தினரும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.

புனேயில் இடம்பெற்ற மித்ரசக்தி - 5 கூட்டு இராணுவ பயிற்சியில் இலங்கை மற்றும் இந்தியாவின் 120 இராணுவத்தினர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2019 Asian Mirror (pvt) LTD