web log free
August 11, 2020
editor

editor

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (17) திறக்கப்பட உள்ளது.

க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு 75 மாணவர்கள் மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

எதிர்காலத்தில் வயம்ப பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்ததாகவும் மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இவற்றில் 150 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வசதி அளிப்பதற்காக இரத்தினபுரி வைத்தியசாலை, போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்.

இதற்குரிய ஏற்பாடுகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

5 கிலோ 24 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

கடுவெல, கொத்தலாவல பகுதியில் நேற்று (16) இரவு 8.50 மணி அளவில் ஹெரோய்னுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோய்னின் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்களிப்பில் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் 19 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மேயின் அரசாங்கத்துக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிர்த்து 306 வாக்குகளும் பதிவாயின.

ஒரு நாள் முன்புவரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பிரதமர் மேயின் திட்டங்களுக்கு, கன்சர்வேட்டிவ் கட்சி, ஜனநாயக யூனியன் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

ஆனால் நேற்று நடந்த வாக்களிப்பில், மே பிரதமராகத் தொடர்வதற்கு அவர்கள் ஆதரவு தந்தனர்.

வாக்களிப்பில் மேயின் வெற்றிக்கு அது முக்கியக் காரணமாக அமைந்தது.

வாக்களிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் மே அழைப்புவிடுத்தார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் ‘டிவிசன் 1’ லீக் போட்டியில் மிலன் சமிதி - பைக்பாரா அணிகள் மோத இருந்தன.

பைக்பாரா அணியில் 21 வயதான அனிகெட் இடம் பிடித்திருந்தார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம்தான் பைக்பாரா கிளப்பில் இணைந்தார்.

மைதானத்தில் சக வீரர்களுடன் பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கால்பந்து விளையாட விரும்பியுள்ளார்.

அதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென சுருண்டு மைதானத்தில் விழுந்துள்ளார். உடனடியான சகவீரர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனிகெட் உடலை பரிசோதித்த செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் என அறிவித்தனர்.

இதனால் பைக்பாரா அணி வீரர்கள் சோகத்தில் மூழ்கினர். ‘‘அனிகெட் சிறந்த கிரிக்கெட்டர். அவர் மிகவும் அறிவான வீரர். அத்துடன் சிறந்த பீல்டர். நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்’’ என பயிற்சியாளர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் திகதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சித்த ராமையா அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 18-ம் திகதி விதான் சவுதாவில் உள்ள கூட்ட அரங்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு சித்தராமையா முன்னிலை வகிக்கிறார் என தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை நேற்று வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.


அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணித்துள்ளார்.

அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையிலான மூவரடங்கிய குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் அறிக்கைக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதரம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இந்த ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையான மலகன்யன்க் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்கை சந்தித்து பேசியிருந்தார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றதுடன், இதன்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்சுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மணிலா சென்றடையும் ஜனாதிபதி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என்று பிரிப்பைன்ஸ் ஜனாதிபதி பேச்சாளர் சல்வடோர் பனீலோ தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேரேவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மலாகானங் மாளிகையில் இடம்பெறும்.

இதன்போது, அரசியல், பொருளாதாரம், விவசாயம், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படும்.

இந்தப் பயணத்தின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொஸ் பனோசில் உள்ள அனைத்துலக அரிசி ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலாவில் உள்ள இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

1978ஆம் ஆண்டு தற்போதைய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்ட பின்னர், பிலிப்பைன்சுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார்.

இதற்கு முன்னர், பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க மாத்திரமே, பிலிப்பைன்சுக்கு சென்ற இலங்கையின் உயர் தலைவராவார். அவர் 1976இல் பிலிப்பைன்ஸ் பயணத்தை மேற்கொண்டிருந்தார்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், இங்கையில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலையீடுகளுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

 

நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,

“நாங்கள் எப்போதும் பௌத்தத்தை மதிக்கிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்ததவொரு நல்ல பௌத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை.

நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இவையெல்லாம் பொய்யான பிரசாரங்கள்” என்றார்.

© 2019 Asian Mirror (pvt) LTD