web log free
March 07, 2021
editor

editor

மாவனல்லை இம்புல பிரதேசத்தில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில், புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணகைளை அடுத்து, சந்தேக நபர் நேற்று(04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் இவர் இதற்கு முன்னர் வழிப்பாட்டு தலங்களில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரப்பட்ட தகவலைபோல இது பயங்கரவாத அல்லது தீவிரவாத செயற்பாடு அல்ல என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டதெனியாவ நாவான மையானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்ட சடலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஹங்வெல்ல – கொடிகந்த விஹாரையை சேர்ந்த 65 வயதான உடுவில தம்மசிறி தேரர் கடந்த 2ம் திகதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

65 வயதுடைய குறித்த தேரர் தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி  48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல மற்றும் கொட்டதெனியாவ  பொலிஸாருடன் மிரிஹான தெற்கு  குற்றவிசாரணை அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புராண படங்களுக்கும் சரித்திர படங்களுக்கும் வரலாற்றுக் கதைகளுக்கும் தான் மவுசு அதிகமாக இருக்கிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவை மிகப்பெரும் வெற்றி பெறுகின்றன.

இதனால் இயக்குனர்கள் இவ்வாறான படங்களை எடுப்பதற்கு தற்போது வரிசைகட்டி நிற்கின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு மொழியில் எடுக்கப்படவுள்ள புராணக் கதைப் படமான சகுந்தலம் திரைப்படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மற்ற மாெழி சினிமாக்களை விட தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை வரலாற்று கதைகள், புராணக் கதைகள் போன்றன பிரமாண்டமாக, மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படுகின்றன.

அந்தக் கதையில் நிஜமாகவும் தத்ரூபமாகவும் கொண்டுவந்திருப்பார் இயக்குனர். அதற்கு உதாரணம் தான் பாகுபலி,ருத்ரமாதேவி பாேன்ற படங்களாகும்.

காளிதாசர் எழுதிய புகழ்பெற்ற காவியம் தான் சகுந்தலையின் காதல் கதை . இதனை ருத்ரமாதேவி, ஒக்கடு ,அர்ஜூன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய குணசேகரன் இயக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் உருவாகிறது.இதில் சமந்தா சகுந்தலை ஆக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலை தற்போது நடத்தினால் அரசுக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என புலனாய்வுப் பிரிவுகளால் அரச உயர்பீடத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த அச்சத்தின் காரணமாகவே கோட்டாபய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச புலனாய்வுத்துறை இரண்டு பகுதிகளாகப் புலனாய்வு செய்திருக்கின்ற நிலையில், அதில் கோட்டாபய அரசின் படுதோல்வி நிச்சயமாக உறுதிசெய்யப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3 வீதிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, புனித அன்ரூஸ் வீதி, புனித அன்ரூஸ் மேல் மற்றும் கீழ் வீதி ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மூன் அலி இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் 10 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் என எதிர்வரும் 14ஆம் திகதிமுதல் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அண்மையில் முடக்கப்பட்ட அவிசாவளை பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இருவரும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

71 மற்றும் 86 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு வலியுறுத்தினர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடயத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

எனினும் பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள், தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாளிகாவத்தை என்.எச்.எஸ்.வீட்டுத் திட்டம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலினால் கொழும்பு மாவட்டமே அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வரும் மாவட்டமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில்  கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய 09 பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வரையில் முடக்கப்பட்டது.

இந்த பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங் காணப்பட்டு வந்தமையினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அத்துடன் குறித்த முடக்கத்தினால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவேதான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை, கட்டாயமாக பின்பற்றுமாறு வலியுறுத்தி, பெரும்பாலான பகுதிகளை தொற்று நீக்கி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையிலேயே மாளிகாவத்தை என்.எச்.எஸ்.வீட்டுத் திட்டமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா  இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார நடைமுறைகளை  பின்பற்றாமல் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Page 6 of 614
© 2019 Asian Mirror (pvt) LTD