web log free
May 30, 2020
editor

editor

இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கான வரி, இன்று (22) முதல் 6 மாத காலத்துக்கு அமுலாகும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, ரின் மீன், அப்பில், பேரிச்சம்பழம், யோகட், மிளகாய் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், இறக்குமதி செய்யப்படும் மேற்படி 26 பொருட்களுக்கான விலைகளும் அதிகரிக்கும் என இறக்குமதி வர்த்தகர்கள் எதிர்வு கூறியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பத்தில், பருப்பு மற்றும் ரின்மீன் ஆகியவற்றுக்கு, அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது. 

காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வரபோகிறது.. காசியை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது.. அதனால் காசி விவகாரம் சூடு பிடித்துள்ளது!!

மகள்களின் வீடியோ காட்டி அவர்களின் அம்மாவையும் சீரழித்த காசி 26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. சுகுனா சிக்கன் குமரி மாவட்ட டீலர்தான் காசி.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்..

அவரது லேப்டாப்களை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது. ஏற்கனவே காசியிடம் 3 நாள் போலீஸ் விசாரணை நடந்தது. இந்த 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது..

போலீசாருக்கு சரியான முழு ஒத்துழைப்பும் தரவில்லை.. ஒவ்வொரு வார்த்தையையும் காசியிடம் இருந்து பிடுங்குவதற்கே போலீசார் படாதபாடு பட்டுள்ளனர்..

அந்த விசாரணையில் வெளிவந்த பெயர்தான் ஜினோ.. 19 வயது இந்த நண்பனை பற்றி சொல்லவும், அந்த நண்பனை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண்களை மிரட்டுவது, ஆபாச வீடியோ அப்லோடு செய்வது, என காசிக்கு எல்லா உதவிகளையும் இவர்தான் செய்து வந்துள்ளார்..

இதையல்லாம் கேட்டு போலீசாரே மிரண்டனர். காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது..

இதையெல்லாம் விசாரிக்கவும், காசியுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, பின்னணியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விசாரிப்பதற்காக போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

"எத்தனை பேர் வயித்துல உன் குழந்தை வளருது தெரியுமா".. குளிர வைத்த பெண் டாக்டர்.. குஷியாகி போன காசி! 

"டெஸ்ட் டியூப் குழந்தை" மருத்துவத்தில் அந்த பெண் டாக்டர் ஸ்பெஷலிஸ்ட்டாம்.. காசியை பலமுறை "ஸ்பெர்ம் டொனேட்" செய்ய அந்த பெண் டாக்டர் உரிமையாக கேட்கவும், காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார்..இதனால் ஏகப்பட்ட பெண்களின் வயிற்றில் காசியின் குழந்தைகள் வளர்கிறது என பகீர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

போலீஸ் காவலில் உள்ள 26 வயது நாகர்கோவில் காசி பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பாக வெளிவந்தபடியே உள்ளது.

நூற்றுக்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். சிறுமி முதல் குடும்ப பெண்கள் வரை யாரையுமே காசி விட்டு வைக்கவில்லை.. போலீசார் கைப்பற்றியுள்ள காசியின் லேப்டாப்கள்தான் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

மகள்களை நாசம் செய்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர் காசி கும்பல் என்ற தகவலும் வெளிவந்தது. தற்போது இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. காசியின் லேப்டாப்பில் முக்கிய விஐபிக்களின் மனைவிகளுடன் எடுத்த வீடியோக்களும் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

ஐ லவ் யூ

காசியை பற்றின பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வரும் நிலையில், தற்போதும் சில தகவல்கள் கசிந்துள்ளன.. நூற்றுக்கணக்கான பெண்களை காசி நாசம் செய்தாலும், ஒரு பெண்ணையும் மனசார காதலித்தது கிடையாதாம். ஐ லவ் யூ என்றுதான் எந்த ஒரு பெண்ணிடமும் பேச்சை ஆரம்பிக்கும் காசிக்கு லவ் என்றாலே அலர்ஜியாம்.. எப்போது நிர்வாண வீடியோ எடுக்கலாம், எப்போது ஆபாச போட்டோக்கள் எடுக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பாராம்.

குடும்ப பெண்கள் வெளியாட்கள் மட்டுமில்லை, தன் குடும்ப பெண்களிடமும்கூட தப்பாக நடந்து கொண்டதும் உண்டு என்கிறார்கள்.. அவர் வீட்டு தெருவில் உள்ள 3 பெண்களுக்கு தனித்தனியாக ரூட் விட்டு, ஏமாற்றி, வெளியில் அழைத்து போய் குடிக்க வைத்து சீரழித்துள்ளார்.. ஒரே தெருவில் இருந்தாலும் விஷயம் வெளிவந்துவிடுமே என்ற பயமே காசிக்கு இருந்ததில்லை என்கிறார்கள்.

பெண் டாக்டர்

சென்னை டாக்டர் பெண்தான் காசி பற்றின முதல் புகாரை தந்தது.. ஆனால் காசி சொந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெண் டாக்டரையும் ஏமாற்றி உள்ளாராம்.. ‘டெஸ்ட் டியூப் குழந்தை' மருத்துவத்தில் அந்த பெண் டாக்டர் ஸ்பெஷலிஸ்ட்டாம்.. உண்மையிலேயே அந்த டாக்டருக்கு காசியை பிடித்திருந்தது.. காசியின் அழகு, பேச்சு திறமை, அன்பாக பேசும் முறை இதெல்லாம் பார்த்து அவர் மயங்கியே விட்டாராம்.

ஸ்பெர்ம் டொனேட்

அதனால்தான் நெருங்கி பழகி இருந்துள்ளார்.. காசியை பலமுறை "ஸ்பெர்ம் டொனேட்" செய்யவும் உரிமையாக கேட்டுள்ளார்.. காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார்.. அதற்கு ஒருமுறை அந்த பெண் டாக்டர், ‘எத்தனை பேர் வயித்துல உன் குழந்தை வளருது தெரியுமா"ன்னு சொன்னாராம். இதைக்கேட்டு காசி உச்சி குளிர்ந்து போய், தன்னுடைய நண்பர்களை எல்லாம் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி "ஸ்பெர்ம் டொனேட்" செய்ய வைத்துள்ளார்.

நாடு தற்போதிருக்கும் நிலைமையில் பொதுத் தேர்தலுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும். எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு, அவ்வாறு ஏன்? செய்யவில்லை என்பது தெரியவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

ஆகையால், தேர்தலுக்கான முன்கூட்டிய செயற்பாடுகளை ஆரம்பிக்கமுடியும். 

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு அவ்வாறு செய்யவில்லை என்றார்

பாராளுமன்றத்தை கலைத்தமை, தேர்தலுக்கான திகதியை மாற்றியமைத்தமை ஆகியன தங்களுடைய அடிப்படை உரிமையை மீறிவிட்டன எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள், நேற்றும் (22) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட மேற்படி வழக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஐந்தாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி செயலாளர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா குறித்த கடிதத்தை மன்றில் ஒப்படைத்து இதனை தெரிவித்தார்.

மக்கள் படிப்படியாக புதிய சுகாதார முறைகளுக்கு ஏற்றவாறு மாறி வருவதாகவும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் படி புதிய சுகாதார முறைகளை வர்த்தமானியில் வெளியிடுவது பொருத்தமானது என்றும் டொக்டர் அனில் ஜாசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு கோரினால் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா தெரிவித்தார்.

நாட்டில் உள்ள தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்த முடியாத சூழலை தாம் காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே சுகாதார பணிப்பாளர் நாயகம் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு எந்தப் பக்கத்திலிருந்து பச்சை கொடி காட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது எனவும் அவர் மன்றில் வினவினார்.

இதேவேளை சட்டமா அதிபர் சார்பாகவும், சுகாதார பணிப்பாளர் நாயகம் சார்பாகவும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா மன்றில் ஆஜரானார்.

இதன்போது தமது வாதத்தை முன்வைத்த அவர் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் சட்டமா அதிபர் தமது அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே மனுக்களை தொடர்ந்தும் விசாரிக்காது அவற்றை தள்ளுப்படி செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

தற்போது 304 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் அவர் வினவினார்.

எனவே மனுதாரர்களின் வேண்டுகோளின் பேரில் 7400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நேரடியாக பாதிக்க கூடிய தீர்ப்பை வழங்க முடியாது எனவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

இலங்கையில், எதிர்வரும் ஞாயிறுக்கிழமையும் மறுநாள் திங்கள்கிழமையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் காரணமாக மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக 58 பேர் கொண்ட படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் சிக்கிக்கொண்டார்

ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் படக்குழு நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வந்தனர்.

இது பற்றி நடிகர் பிரித்விராஜ் சமீபத்தில் உணவுக்கு கூட பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். இந்த தகவல் அனைவரையும் உருக்குலைத்தது.

இதையடுத்து அவரது மனைவி கணவரின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து மாதக்கணக்கில் காத்திருந்தார். அவ்வப்போது கணவரை பிரிந்து உருக்கமான பதிவுகளை போட அவருக்கு ஆறுதலான வார்த்தைக்கூறி அனைவரும் சமாதானம் செய்தனர்.

அப்பா வீட்டிற்கு வரப் போகிறார் என்று அவரது செல்ல மகள் சந்தோஷமாக போர்டில் எழுதிய வீடியோவை மனைவி சுப்ரியா மேனன் இன்ஸ்டாவில் வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

 

இந்த நிலையில் தற்போது அனைவரது பிரார்த்தனையும் நிறைவேறியது. ஆம், நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படக்குழுவினருடன் அம்மானில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் இன்று காலை கொச்சி வந்திறங்கியுள்ளார்.

அங்குள்ள குவாரன்டைன் மையத்தில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு பிரித்விராஜ் வீடு திரும்புவார். இதையடுத்து அவரது மனைவி கணவருக்கு உதவிய அதிகாரிகள் முதல் பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்ற மைதானத்திற்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நேற்று (19) நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கலந்து கொள்ள வைப்பதற்காக அரச தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக அந்த நிகழ்வில் சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சியை ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்ய அரசாங்க தரப்பில் அக்கறை காட்டப்பட்டாகவும் சிங்கள இணையத்தளமொன்று குறிப்பிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை தொடர்புகொண்டு அவர் நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த அரசாங்க தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இவற்றுக்கு பொன்சேகா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பதிகாரியான ரொஹான் வெலிவிட்ட , நேற்றைய தினம் சரத் பொன்சேகாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது அரசியல் நண்பர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, “பீல்ட் மார்ஷல் ஒருவர் எப்போதும் லெப்டினட் கேர்ணல் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்த மாட்டார்.

நான் அந்த நிகழ்விற்கு செல்ல மாட்டேன்” எனக் கூறியதாக பொன்சேகாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

எனினும், போர் வெற்றி நாளான மே 19ஆம் திகதியன்று, சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது. 

முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த அரசாங்கம்  குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு நாரஹேன்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் உள்ள இந்த காணியை முன்னாள் இராணுவத் தளபதியின் பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காகப் பயன்படுத்தினர்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அப்போது மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க சமர்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த காணி, காணி அபிவிருத்தி அதிகார சபையினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதோடு அதற்கான கடிதமும் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

போர்வெற்றி கொண்டாட்ட நிகழ்வு 19ஆம் திகதி நடத்தப்பட்டது. எனினும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அக்கடிதம்  கடந்த 11ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று 5 ரூபாயில் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க லங்கா IOC நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியின் 2003ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கையின் நிதியமைச்சுக்கு அறிவிக்காமலேயே விலையை அதிகரிக்கும் அதிகாரத்தை லங்கா ஐஓசி நிறுவனம் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாளிகாவத்தை கோடீஸ்வர வர்த்தகரினால் பகிரப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை பெற பெற முயன்ற மூன்று பெண்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.

மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்த பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்களின் சுவாச மண்டலம் பாதிப்படைந்தமையினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்ற வைத்திய அதிகார் ராவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் இந்த விபரம் வெளியாகியதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் காணப்படும் எலும்புக் கூடுகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவனபணியாளர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் முன்னர் அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Page 7 of 432
© 2019 Asian Mirror (pvt) LTD