web log free
February 25, 2021
editor

editor


நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

“மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது.

 

புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

அரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவின் நிதியுதவியை மீளப் பெறுவதற்காக,  அரசின் உயர்மட்டக் குழுவொன்று வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

 

இலங்கைக்கும் மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, 480 மில்லியன் டொலர் ( 87 பில்லியன் ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா கடந்த செப்ரெம்பர் மாதம், அறிவித்திருந்தது.

 

இதுதொடர்பான உடன்பாடு டிசெம்பர் மாதம் கொழும்பில் கையெழுத்திடப்படவிருந்தது.

எனினும், ஒக்ரோபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த உதவித் திட்டத்தை அமெரிக்கா இடைநிறுத்தியது.

 

இந்தநிலையில், மீண்டும் பதவிக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்கு உயர்மட்டக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளது.

 

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதியமைச்சின் செயலர் எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு, இந்த மாத இறுதியில் வொசிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

 

உலக மக்களின் பாவங்களை தான் சுமந்து வலிகளை மறைத்து, மக்களுக்காக தன் தந்தையான தேவனிடம் மன்றாடிய  பரிசுத்த பிதாவின் தலை மகன் இயேசு கிறிஸ்த்து மண்ணில் அவதாரமாகவும் நம் உள்ளங்களின் துணையாக அவதரித்த நன்னாள். இந்நாளில் மாசற்ற தூய உள்ளம் படைத்த இயேசுவின் வருகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கு இனிய நத்தாள் தின வாழ்த்துக்கள்

இந்தோனேசியாவிலுள்ள அனக் கிரக்காட்டு எரிமலைக்கு அருகில் உள்ள கரையோர கிராமங்களை மீண்டும் சுனாமி தாக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சுனாமி தாக்கியதன் காரணமாக. 281 பலியாகியுள்ள நிலையிலேயே அதிகாரிகள் மீண்டுமொரு சுனாமி தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலை வெடித்தன் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வுகளே பாரிய சுனாமிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதை தொடர்ந்து சுனாமி ஆபத்து குறித்து பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எரிமலை வெடிப்பு தொடர்வதால் மற்றொரு சுனாமிக்கான வாய்ப்புகள் உள்ளன என இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக மக்கள் கடற்கரையோரங்களில் நடமாடக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை,வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படமான ‘அசுரன் ’ கதையின் நாயகனாக தனுஷ் நடிக்கிறார்.

இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகி, நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிமுக விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. படத்தின் தனுஷின் கதாபாத்திரத்தின் அமைப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். உடனே இணையத்தில் வைரலாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தனுஷ் நடித்த மாரி 2 வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்து அசுரன் படத்திற்காக பணியாற்றுவதை திரையுலகினர் மனதார ஆதரிக்கிறார்கள்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நிச்சயமாக அசுரனில் ஆச்சரியத்தை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கலாம்.

பங்களாதேஷ் மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் நடுவர் தவறுதலாக தொடர்ச்சியாக நோபோல் என தெரிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேசில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் வெற்றியிலக்காக 191 ஓட்டங்களை பெறுவதற்காக பங்களாதேஷ் அணி ஆடியபோதே இந்த தவறுகள் இடம்பெற்றுள்ளன.
நான்காவது ஓவரை ஒசேன் தோமஸ் வீசியவேளை சில பந்துகளை நோபோல் என நடுவர் அறிவித்தார். எனினும் ரீ பிளேகளின் போது அந்த பந்துகள் நோபோல் இல்லை என்பது தெரியவந்தது.
லிட்டன் தாஸ் அடித்த பந்தினை மேற்கிந்திய வீரர்கள் பிடித்த வேளை நடுவர் நோபோல் என அறிவித்தார்.


எனினும், மைதானத்தில் காணப்பட்ட திரையில் அது நோபோல் இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து மேற்கிந்திய அணியின் வீரர்கள் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு நடுவரை கேட்டுக்கொண்டனர்.
இதன்போது மேற்கிந்திய அணிவீரர்களுக்கும் நடுவர்கள் அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன.


இதன்பின்னர் மூன்றாவது நடுவரிடம் தீர்ப்பு குறித்து வினவப்பட்டதை தொடர்ந்து அவர் அது ஆட்டமிழப்பு என அறிவித்தார்.


எனினும், நான்காவது நடுவரும் ஆட்ட மத்தியஸ்தர் ஜெவ்குரோவும் மேற்கிந்திய அணித்தலைவர் அணிமுகாமையாளர் பங்களாதேஷ் அணித்தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தபின்னர் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்கவில்லை அது பிரீ ஹிட் என அறிவிக்கப்பட்டது.
களத்தில் நின்ற நடுவர் நோபோல் என அறிவித்ததால் அதனை மறு ஆய்வு செய்ய முடியாது என்பதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மூன்றாவது நடுவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஆட்டம் ஆரம்பமானவேளை பிரீ ஹிட்டை பயன்படுத்தி பங்களாதேஷ் வீரர் சிக்சர் அடித்தார்.


இதேவேளை இந்த ஓவரின் நான்காவது பந்திலும் நடுவர் டன்வீர் அகமட் தவறுதலாக நோபோல் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த போட்டியில் மேற்கிந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது.

தற்போது இலங்கையின் வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பகுதியளவில் 10 வீடுகளும், முழுமையாக 224 வீடுகளும் சேதம். 3. 3291 குடும்பங்களைச் சேர்ந்த 10,332 பேர், 34 முகாம்களில் தங்கவைப்பு

முழுமையாக தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார். 51 நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியை அடுத்து, 1 வாரகால விடுமுறையிலேயே ஜனாதிபதி தன் குடும்பத்தினருடன் பயணமாகியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் சட்டரீதியான பிரச்சினை எழுந்துள்ளதை அடுத்து, தனி அரசாங்கமொன்றில் இருக்கவேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியலமைப்பின் வியாக்கியானத்தை தெ ளிவுப்படுத்துமாறு, சட்டமா அதிபரிடம் அரசாங்கம் ஆலோசனை பெற்றுள்ளது.

மாரவில, தெமட்டபிட்டிய பிரதேசத்தில், 120 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோய்னுடன், 28 வயனதான இளைஞனை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

© 2019 Asian Mirror (pvt) LTD