web log free
May 30, 2020
editor

editor

பாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதனால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெருசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விழுந்தவுடன் விமானத்தில் தீப்பிடித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன; எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்கல் தொடர்பில் தேடியறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழுவுக்கு கடமைக்காக வந்திருந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையால், அந்த ஆணைக்குழு காரியாலய இன்று (22) கிருமி தொற்றொழிப்பு தெளிக்கப்பட்டது. 

அந்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அவருக்கு வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பதாக தெரிவித்து, தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளார் என அறியமுடிகின்றது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் நேற்று (21) இரவு 11.55 மணியளவில் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 442 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் சனிக்கிழமை 24ஆம் திகதியும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் நாளை (23) இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி அதிகாலை 05 மணிக்கு நீக்கப்படும்.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வழமை போன்று ஊரடங்கு அமுலில் இருக்கும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால், உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதியாக, ஜனாதிபதி சார்பில், சட்ட மா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தினேஷ் பதிரண ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பொதுத் தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில், ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடுமாறும் கோரியே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் பெண் ஒருவர் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அலவ்வ பகுதியை சேர்ந்த  45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹோமாகம பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலவ்வயிலிருந்து கொட்டாவ வந்திருந்த அவர், முச்சக்கர வண்டியில் விடுதிக்கு சென்றுள்ளார்.

நேற்றிரவு குறித்த பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் இருந்தமையால் அந்த பெண் ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்துள்ளதாக ஹோமகாமா சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பெண் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண் தங்கியிருந்த விடுதி சட்டவிரோதமாக திறக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், அங்கு பணியாற்றிய இளைஞர் ஒருவரும் அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண்ணுடன் நேற்று இரவு ஆண் ஒருவர் வந்திருந்ததாகவும், தற்போது அவரை கண்டுப்பிடிக்கும் நோக்கில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமிலிருந்து, மேலும் 2193 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றியிருந்த சிப்பாய்களுடன் மிகவும் நெருங்கிய பழகியிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

சுகாதாரப் பிரிவின் பணிப்புரையின் பேரில், கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையிலேயே அவர்கள் அனைவரும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கடற்படையினரில் 578 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 237 கடற்படையினர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுகமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 

கடற்படையினர் 341 பேர், வைத்தியசாலைகளில் இன்னும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான அரசியலை செய்துகொண்டிருக்கும் கட்சிகள், தொழிற்சங்கங்களிலிருந்து மாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே செல்கிறது. 

இலங்கை தொழிலாளர் தேசிய சங்கம், மலைய மக்கள் முன்னர், தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்குள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கட்சி மாறிக்கொண்டு இருக்கின்றனர். 

அதில், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன் இன்று(21) இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்படும் அதேவேளை, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான நகர்வை முன்னெடுக்கின்றனர்.

கட்சிகளின் அங்கத்தவர்கள் உறுப்பினர்களை தம்முடன் இழுத்தெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதனடிப்படையில், மாத்தளை நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 20 பேர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளனர.

மொட்டுக் கட்சியின் லக்கல பிரதேச வேட்பாளர் திலக் பண்டாரவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ள அவர்கள்,  நாவுலயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, வெற்றிலை கொடுத்து கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். 

நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் அதனைக் கருத்திற்கொண்டுடே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

© 2019 Asian Mirror (pvt) LTD