web log free
March 07, 2021
editor

editor

இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, அடக்கம் செய்ய அனுமதி கோரி கொழும்பு, பொரளை மயானத்துக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டிணைந்த முஸ்லிம் அமைப்புகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்ட படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை கடற்படையினரின் கட்டளைகளை மீறி, குறித்த படகுடன் சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது, படகுடன் நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

படகை கரையோரப் பகுதிக்கு கொண்டு வந்தபோது, சந்தேக நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகை சோதனைக்குட்படுத்தி வருவதாகவும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் படகொன்றா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் கலந்து கொண்டிருந்தர்.

இதன்போது யாழ். மாநகர சபையின் புதிய மேயராக தெரிவாகியுள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுடன் எவ்வாறாக செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஜனவரி 11 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிகளையும், பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளையும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை மீளத் திறப்பது தற்போதளவில் கடினம் எனவும், அது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அருவியாற்றுப் பாலத்தில் குளிக்கச் சென்று காணாமல் போன கிராம அலுவலகரின் சடலம் இன்று காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

இதில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் வயது-26 என்பவரே உயிரிழந்துள்ளார்.

நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குறித்த இடத்தில் மது போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன அவரை தேடும் பணி 2 ஆவது நாளாக நேற்று புதன் கிழமை மாலை வரை தொடர்ந்திருந்தது.

கடற்டை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அரிப்பில் இருந்து கடல் தொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அருவி ஆற்றில் காணாமல் போன கிராம அலுவலகர் அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உயிரிழந்துள்ள நிலையில் அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரும் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையிலே குறித்த அனார்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம்.

அந்த நிகழ்வுகள் அனைத்தும் Social Media மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் பிளேமவுத் என்ற பகுதியில் இப்படியான வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்று வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு “Naked Cleaning Company” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை நிக்கி பெல்டோன் மற்றும் அவரது மனைவி லியன் வுல்மேன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

அப்படி என்ன சிறப்பு என்றால், இந்தநிறுவனத்தின் மூலம் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் வேலை செய்யும் நேரத்தில் மேலாடை இல்லாமலோ அல்லது நிர்வாணமாகவோ தான் வேலை செய்வார்களாம்.

இவர்களின் தனித்துவமே இது தானாம். அந்நாடுகளில் இது போன்ற நிறுவனங்கள் சட்டவிதிமுறை மீறல்கள் இல்லை. அதனால் அவர்கள் தைரியமாக நடத்துகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தினர் இதை அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை சாரையடி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவரே உயிரிழந்தார். இன்று அவருக்கு ஏற்பட்ட திடீர் குருதிப் பெருக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைத்ததும் பிரேத பரிசோதனை இடம்பெறும்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் வேட்பாளராக சொலமன் சிறிலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே விரும்பினார். ஆனால், யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் எவரும் அவரை விரும்பவில்லை. மேயர் வேட்பாளர் தெரிவுக் கூட்டங்களில்அவரின் பெயரை எவரும் பரிந்துரைக்கவும் இல்லை.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற புதிய மேயர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்குக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஆனோல்ட்டை அவர்கள் விரும்பியமைக்கு இதுவே சாட்சி. கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் மட்டும் நடுநிலை வகித்திருந்தார். அவரின் இந்த நடுநிலையும் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. அவர் சுமந்திரன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்தச் செயற்பாடு எமக்கு அதிருப்தியளிக்கின்றது.

அவருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்போம். சுமந்திரனின் ஆதரவாளர்கள் மூவர் இருந்தார்கள். இருவர் ஆனோல்ட்டை ஆதரித்தார்கள்” என்றார்.

மட்டக்களப்பில் இன்றும் (30) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ஆம் விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளது.

© 2019 Asian Mirror (pvt) LTD