web log free
May 30, 2020
editor

editor

உயர்நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களை பேஸ் புக்கில் பதிவிடுவதற்காக, கையடக்க தொலைபேசிகளில் படங்களை பிடிக்கவேண்டாம் என்றும் படங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம் என்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அங்கிருந்தவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியுள்ளார். 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், நாட்டின் தற்போதயை நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் நேற்று (19) இரவு 11.55 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

 கிரிக்கட் பந்தை மினுமினுப்பாக்க இனிமேல் எச்சிலைப் பயன்படுத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுநிலை நடுவர்களை உள்நாட்டு நடுவர்கள் பிரதியிடுவர். எல்லா வகையான போட்டியின் இனிங்ஸொன்றுக்கும் ஒவ்வொரு அணிக்கும் மேலதிக மீளாய்வு நடத்தப்படும் என்றார். 

எச்சிலுக்குப் பதிலாக  வியர்வையைப் பயன்படுத்தலாம் என அறிவுரை வழக்கப்பட்டது 

கொவிட்-19 மாற்றுவீரர்கள் இல்லை போன்ற பரிந்துரைகள் நேற்று  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக மீண்டும் கிரிக்கெட்டை ஆரம்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கைகளே மேற்கூறப்பட்ட பரிந்துரைகளாவன என கிரிக்கட் செயற்குழுவின் தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பரிந்துரைகள் தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், இம்மாதம் 28ஆம் திகதி காணொளி மாநாடு மூலம் சந்திக்கவுள்ள பணிப்பாளர் சபையால் இது ஏற்ற்க் கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் செயற்குழுவின் கூட்டமும் மெய்நிகர் உலகத்தில் நடைபெற்ற நிலையில், முன்னாள் சர்வதேச வீரர்களான ராகுல் ட்ராவிட், மகேல ஜெயவர்தன, அன்றூ ஸ்றோஸ், பெலின்டா கிளார்க்குடன், இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், உயர்நிலை நடுவர் றிச்சர்ட் இல்லிங்வேர்த்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருந்தது.

ஹோமாகமையில் புதிய மைதானம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட தருணம் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

விளையாட்டுத்துறைக்கான அபிவிருத்திக்காக அடித்தளக் கட்டமைப்புக்கள் இன்றியமையாதவை.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் அந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் எந்தவொரு இறுதித்தீர்மானத்தை எடுக்கும் முன்னரும் அது சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஹோமாகமையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தொடர்ந்தும் விமர்சனம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே நாமல் ராஜபக்சவின் கருத்து வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 10-15 வருடங்களில் உலகக் கிண்ணப்போட்டிகளை நடத்துவதற்காக 40 மில்லியன் டொலர்களில் மைதானம் அவசியம் இல்லை என்பதே மஹேலவின் கருத்தாக உள்ளது.

அத்துடன் உலகக் கிண்ணக்கிரிக்கட் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இலங்கை தெரிவுசெய்யப்படுமானால் அதன்போது மைதானக் கட்டமைப்புக்காக சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திடம் நிதியுதவியைக் கோரமுடியும் என்றும் மஹேல சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் மஹேல ஜயவர்த்தன முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளமையால் அது தொடர்பில் தீவிரமாக ஆராயவேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.

தமிழில் அலெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 54 வயது ஆகிறது. 2006-ல் பிரெஞ்சு நடிகையை மணந்து விவாகரத்து செய்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மகள் வயது பெண்ணை மணப்பதா? என்று விமர்சனங்கள் கிளம்பின. மிலிந்த் சோமன் 25 வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மதுசாப்ரேவுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருந்தார். அதில் இருவரும் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தனர். மிலிந்த் சோமன் கழுத்தில் ஒரு மலைப்பாம்பையும் போட்டு இருந்தார். இந்த விளம்பர படத்துக்கு எதிராக அப்போதே மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் மிலிந்த் சோமன் வெளியிட்டு, “இது 25 வருடம் பழமையான படம். அப்போது சமூக வலைத்தளங்கள், இணையதளம் கிடையாது. இப்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டால் என்ன எதிர்வினைகள் வரும் என்று ஆச்சரியப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மிலிந்த் சோமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் சிலர் தயாராகி வருகிறார்கள்.

நாடாளுமன்ற மைதானத்திற்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் நேற்று (19) நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கலந்து கொள்ள வைப்பதற்காக அரச தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அந்த நிகழ்வில் சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சியை ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்ய அரசாங்க தரப்பில் அக்கறை காட்டப்பட்டாகவும் சிங்கள இணையத்தளமொன்று குறிப்பிட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை தொடர்புகொண்டு அவர் நிகழ்வில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த அரசாங்க தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இவற்றுக்கு பொன்சேகா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பதிகாரியான ரொஹான் வெலிவிட்ட , நேற்றைய தினம் சரத் பொன்சேகாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது அரசியல் நண்பர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, “பீல்ட் மார்ஷல் ஒருவர் எப்போதும் லெப்டினட் கேர்ணல் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்த மாட்டார்.

நான் அந்த நிகழ்விற்கு செல்ல மாட்டேன்” எனக் கூறியதாக பொன்சேகாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய மத்திய அமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார். 

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய சிவில் விமான போக்குவரத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

குறித்த பதிவில்,

1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இளம் அதிகாரியாக நான் கடமையாற்றினேன்.

 இன மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறினேன்

டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன் என மேலும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பிலான வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று (20) மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் தனது மனுவில் பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால், அவருக்கும் உடனடியாக நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்ற நீதியசர்கள் நேற்று (19) உத்தரவிட்டனர். 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தன்னுடைய மகளுடன் வருகைதந்திருந்தமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக, 14 நாட்கள் அவருடைய மகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்தன் பின்னர், மேலும் 14 நாட்களுக்கு தனிமையில் இருப்பதற்கான அனுமதியுடன், தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார். 

அவருடைய மகளை, யாழ்ப்பாணம் நல்லூர் விலாசத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துசெல்வதற்கான யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலக வானமொன்றில் கொழும்புக்கு திரும்பிய ஹூல், தன்னுடைய மகளுடன் ஆணைக்குழுவுக்கு வந்துள்ளார்.

இதுதொடர்பில் தகவல் கிடைத்ததும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 

சிரேஷ்ட அதிகாரிகளின் தலையீட்டால், அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அதனையடுத்து ஆணைக்குழுவின் கட்டடத்தொகுதி முழுவதும் கிருமி தொற்றொழிப்பு தெளிக்கப்பட்டது. 
 

© 2019 Asian Mirror (pvt) LTD