Print this page

உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டியது

November 15, 2022

ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி, செவ்வாய் கிழமை எங்காவது பிறக்கும் குழந்தை, உலகின் எட்டு பில்லியனை பூரணபடுத்தும் மனிதராக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிட்டுள்ளது.

உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

7 பில்லியனை கடந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா முன்னிலை பெரும் எனவும் இதுவரை காலமும் சீனா வகித்து வந்த இடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

1950 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கடந்த 2020 ஆம் ஆண்டில் உலக மொத்த சனத்தொகை வளர்ச்சி வீதம் ஒரு வீதத்திலும் குறைவாக காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகை 8.5 பில்லியன்களாக உயர்வடையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 

Last modified on Tuesday, 15 November 2022 10:51