web log free
March 29, 2024

கயலின் உரசலால் நடிகருக்கு கூச்சம்

Kayal Anandi is having such a relationship with that actor. Kayal Anandi is having such a relationship with that actor.

நல்ல ஹோம்லி லுக்கில் வெயிட்டான கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பான நடிப்பை கொடுத்து வரும் நடிகை கயல் ஆனந்தி, அடுத்தாக வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் அந்த வெப்சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

வெப்சீரிஸ் என்பதால், கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடித்து கொடுத்து வருகிறாராம் ஆனந்தி.

தெலுங்கில் வெளியான பஸ் ஸ்டாப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆனந்தி, தமிழில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் மற்றும் கயல் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

பிரபு சாலமனின் கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார். நல்ல வேளை பஸ் ஸ்டாப் ஆனந்தி என யாரும் அழைக்கவில்லை.

கயல் படத்தைத் தொடர்ந்து நடிகை ஆனந்தி தேர்வு செய்த அத்தனை படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், நல்ல வலுவான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.

கயல், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என தரமான படங்களில் நடித்துள்ளார்.

ஒரு பக்கம் ஹோம்லியாக நடித்தாலும், மறு பக்கம் சில அடல்ட் படங்களிலும் நடித்து கிளாமர் ஏரியாவிலும் தான் சிறப்பானவள் என்பதை ஜி.வி. பிரகாஷின் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நிரூபித்து இருப்பார் நம்ம கயல் ஆனந்தி.

அந்த படத்தில் இடம்பெற்ற பால் பாக்கெட் காட்சிகளையும், பிட்டு படம் டி பாடலையும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால், வைபவ் லீடு ரோலில் நடித்து வரும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. அதில், தனக்கு ஜோடியான நடிகருடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நல்லா தாராளம் காட்டி நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வெங்கட் பிரபு இயக்கி வரும் 10 எபிசோடுகளை கொண்ட அந்த வெப்சீரிஸின் டைட்டில் மற்றும் மற்ற விபரங்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்சீரிஸ் என்றாலே ஹாட்னஸுக்கு பஞ்சம் இருக்காது. காஜல் அகர்வால், கயல் ஆனந்தி நடித்துள்ள இந்த வெப்சீரிஸும் இளைஞர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Last modified on Monday, 07 September 2020 01:40