Print this page

மீண்டும் களமிறங்கும் வைகை புயல்! நகைச்சுவை விருந்துக்கு தயாராகுங்கள்!

November 30, 2021

நம் மனங்களை கொள்ளை கொண்ட இம்சை அரசன் நகைச்சுவைகள் மன்னன் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நீண்ட வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சந்தோசத்தில் உறைய செய்துள்ளது. தமிழ் சினிமாவே அவரை திரைப்படத்தில் காண ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதன் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவை நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Last modified on Tuesday, 30 November 2021 05:43