web log free
March 28, 2024

மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா

நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படன் இன்று வெளியான நிலையில், இப்படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரிக்கிறது.

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மற்றொரு நடிகையாக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்.

‘ஹீரோ’ படத்திற்கு அடுத்ததாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.