web log free
April 20, 2024

30 ஆண்டுகளுக்குப்பின் உள்நாட்டில் அவுஸ்திரேலியா 'பாலோஆன்' மூலம் பெரும் போராட்டம்

சிட்னியில் நடந்து வரும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 300 ஒட்டங்களுக்கு விக்கட்டுகள் அனைத்தும் இழந்த நிலையில், இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்கியது.

 

அவுஸ்திரேலியா அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் 322 ஒட்டங்கள் பின்தங்கி இருந்ததைத் தொடர்ந்து பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி.

 

கடந்த 1988 ஆம் ஆண்டுக்குப்பின்னர், உள்நாட்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா அணி பாலோ-ஆன் பெறாமல் ஆடி வந்தது. அதாவது 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி பாலோ ஆன் பெற்று ஆடி தோல்வி அடைந்தது.


அதன்பின்னர், 30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்தநிலையில், தற்போது, இந்தியாவிடம் அவுஸ்திரேலியாவுடைய கர்வம் உடைந்துள்ளது.


30 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. உண்மையில் இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.


சிட்னியில் இந்தியா ஆஸ்திரேலய அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ஒட்டங்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.


கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி : படம் உதவி ட்விட்டர்


3 ஆம் நாளான நேற்று மாலை திடீரென மேகம்கூடி வெளிச்சக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஆட்டம் 15 ஓவர்கள் குறைவாக வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. மேலும், மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


ஒருவேளை இன்று மழை பெய்யாமல் இருந்தால், ஆட்டத்தை இன்று அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்க நடுவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், சிட்னியில் காலையில் இருந்து பலமான தூறலும், மேகமூட்டமாக இருந்தது. இதனால், விளையாடுவதற்குச் சாதகமான சூழல் இல்லாமல் இருந்தது. இருமுறை நடுவர்கள் சென்று மைதானத்தை ஆய்வு செய்து காலை உணவு இடைவேளைவரையிலும் ரத்து செய்தனர்.


அதன்பின் உணவு இடைவேளைக்குப்பின் மழை குறைந்து ஓரளவுக்கு வெளிச்சம் நிலவியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடர நடுவர்கள் முடிவு செய்து புதிய பந்தை எடுத்தனர்.


கம்மின்ஸ் 25 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 3 ஆம் நாளான நேற்று ஜடேஜா வீசிய ஓவரில் 3 பந்துகள் மீதம் இருந்தநிலையில் அதை வீசினார்.


அதன்பின்னர், முகமது ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். கம்மின்ஸ் ஓவரை எதிர்கொண்டார். 3 ஆவது பந்தில் கம்மின்ஸ் க்ளீன் போல்டாகி 25 ரன்களில் வெளியேறினார்.


அடுத்து மிட்ஷெல் ஸ்டார்க் களமிறங்கி, ஹேண்டஸ்கம்ப்புடன் இணைந்தார். புதிய பந்து என்பதால், பும்ரா பந்துவீச அழைக்கப்பட்டார். பும்ரா வீசிய முதல் ஓவரில் ஸ்டார்க் திணறிக் கொண்டே சமாளித்தார்.


அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் இணைந்தார். வந்தவேகத்தில் குல்தீப் யாதவ் சுழலில் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட்டில் லயன் வெளியேறினார். அடுத்து வந்த ஹேசல்வுட், ஸ்டார்க்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர்.


குல்தீப் வீசிய 93-வது ஓவரில் அருமையான ஹேசல்வுட் அமைந்த கேட்சை விஹாரி தவறவிட்டார்.


குல்தீப் வீசிய 105 ஓவரின் கடைசிப் பந்தில் ஹேசல்வுட் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து 21 ரன்களில் வெளியேறினார். அவுஸ்திரேலியா அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் ஆட்டமிழந்தது.


இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.