Print this page

2020 ஒலிம்பிக் தள்ளிபோகும் சாத்தியம்

2020 ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போகும், இந்த வருடம் நடக்காது என்று ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் கனடியன் பவுண்ட் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் சரிந்துள்ளது. நகரங்கள் மூடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மூடப்பட்டது. அதேபோல் இதனால் விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டு, தள்ளிபோடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கூட இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நிறுத்தப்பட்டது. அதேபோல் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிபோடப்படுகிறது.

2020 ஜூலை 24ம் தேதி டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக் போட்டிகள் 2020 திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான பணிகள் ஜப்பானில் தீவிரமாக நடந்தது. மைதானம் கட்டும் பணிகள் முடிந்து உள்ளே சில பணிகள் மட்டும் நடந்து வந்தது.

ஆனால் கொரோனா காரணமாக இந்த போட்டிகள் தொடங்குவது சந்தேகமாக இருந்தது. இதை ஒத்திப்போட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. தற்போது இதை ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் உறுதி செய்துள்ளார்.

2020 ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போகும், இந்த வருடம் நடக்காது என்று ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் கனடியன் பவுண்ட் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து சர்வதேச விளையாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

 பெரும்பாலும் 24 ஆகஸ்ட் 2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.ஒரு வருடத்திற்கு ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Last modified on Tuesday, 24 March 2020 02:09