Print this page

தலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி?

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகும் சக இந்தியரான ஷஷாங் மனோகரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் செளரவ் கங்குலி பிரதியிடுகிறாரா எனக் கேள்வி தொக்கி நிற்கிறது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாடு இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறும்போது ஷஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடையும்போது மீண்டுமொரு தடவை ஷஷாங் மனோகர் போட்டியிடமாட்டார் என்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸே முன்னிலையிலுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொவிட்-19 பரவல் உலகக் கிரிக்கெட்டை பாதித்துள்ள நிலையில் கங்குலியை சில முழு அங்கத்தவர்கள் ஆதரிக்கின்றார்களா என அவர்களின் விருப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சோதிக்கின்றது.

அந்தவகையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிலிருந்து கங்குலி ஆதரவைப் பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட் சபையில் பலமான தலைமைத்துவம் தேவை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்ததுடன், கங்குலி அதற்கு மிகவும் பொருத்தமானவர் எனக் கூறியிருந்தனர்.

Last modified on Friday, 22 May 2020 22:24