2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாதங்களில் Associated Motor Finance Company PLC (AMF) நிறுவனம் வலுவான செயற்றிறனை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனம் முக்கிய இலாப வளர்ச்சி, வலுவூட்டப்பட்ட கையிருப்புநிலை நிதி பட்டியலுடன் வலிமை மற்றும் வலுவான பணப்புழக்க நிலையைப் பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் மூலோபாய வேகம் மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவத்தை நிரூபிக்கிறது.
கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் 2022 நிதி நெருக்கடியின் போதான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் AMF ஈடுகொடுக்கும் தன்மையைக் காண்பித்துள்ளது. தொழில்துறையானது கடன் செயற்பாட்டில் சரிவைக் காண்பித்த போதிலும், AMF அதன் தயாரிப்புளை தொடர்ச்சியாக மேம்படுத்தி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான மூலதனத்தையும் பணப்புழக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளது.
நிறுவனம் முக்கிய நிதி குறிகாட்டிகளில் முக்கிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 133% ஆக அதிகரித்து, ரூ. 781 மில்லியனாகவும், வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 135% ஆக அதிகரித்து, ரூ. 393 மில்லியனாகவும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
சொத்துகளின் மீதான வருவாய் (ROA) மற்றும் பங்குகள் மீதான வருவாய் (ROE) முறையே 5.25% மற்றும் 15.25% ஆக பதிவாகியுள்ளதோடு, மூலதன அடிப்படைக்கு இடர்-அளவிடப்பட்ட சொத்துகள் (மட்டம் II) விகிதம் 15.49% ஐ எட்டியுள்ளது. இது ஒழுங்குபடுத்தல் விதிமுறைக்குட்பட்ட குறைந்தபட்ச தேவையான 12.5% ஐ விட அதிகமாக பதிவாகியுள்ளதன் மூலம், நிறுவனத்தின் இலாபத்தையும் முன்னேற்றத்தையும் நிரூபித்துள்ளது.
மொத்த சொத்துகள் ரூ. 20.39 பில்லியனாக விரிவடைந்துள்ளதுடன், கடன்கள் மற்றும் கிடைக்கப் பெறத்தக்கவைகள் ரூ. 12 பில்லியன் ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளன. இது ஆரோக்கியமான கடன் தயாரிப்புகள் மற்றும் அதிகரித்த கடன் செயற்பாடு ஆகியவற்றை ஊக்கப்படுத்துகின்றன. வாடிக்கையாளர் வைப்புத்தொகை முக்கிய வளர்ச்சியைப் பிரதிபலித்து, ரூ. 15.46 பில்லியன் மதிப்புடையதாக மாறியுள்ளது. இது நிறுவனத்தின் நிதி வலிமையின் மீதான வாடிக்கையாளர்களின் நிலைபேறான நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.
அத்துடன், மொத்த பங்கு மதிப்பு 12% இனால் அதிகரித்து, ரூ. 3.63 பில்லியன் ஆகவும், ஒரு பங்கின் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூ. 32.07 ஆகவும் அமைந்துள்ளமையானது, பங்குதாரர்களுக்கான நிலையான மதிப்பு உருவாக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்த நிதிச் சாதனைகள் நிறுவனத்தின் வலுவான அடித்தளம், விவேகமான இடர் முகாமைத்துவம் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன. AMF ஆனது, தொழில்துறை தரநிலைகளை விட வலுவான பணப்புழக்கத்தைப் பேணியுள்ளதோடு, திரவ சொத்துகளானது மொத்த சொத்துகளில் 31.54% ஆகவும் குறுகிய கால பணப்புழக்க விகிதம் 198% ஆகவும் பதிவாகியுள்ளது. இது உடனடி பொறுப்புகளை எளிதாக நிறைவேற்றும் அதன் திறனை நிரூபிக்கிறது.
AMF இன் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகத்தை அங்கீகரித்து, லங்கா ரேட்டிங் அதன் கடன் மதிப்பீட்டை BB- (நிலையானது) இலிருந்து BB (நிலையானது) ஆக மேம்படுத்தியுள்ளது. இது அதன் வலுவான அடிப்படைகள் மற்றும் இடர் முகாமைத்துவ திறன்களை உறுதிப்படுத்துகின்றது.
AMF அண்மையில் சுரேன் குணவர்தனவை அதன் தலைவராக நியமித்துள்ளது. நிறுவனத்தின் சந்தை நிலை மற்றும் நிதி உள்ளீர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதில் அவர் கொண்டுள்ள வலுவான தலைமைத்துவம் தொடர்பான உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது. "நிலைபேறான வளர்ச்சி, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சந்தைக்கு இணங்கும் தன்மையை நோக்கி AMF நிறுவனத்தை வழிநடத்துவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்." என சுரேன் குணவர்தன தெரிவித்தார்.
நிறுவனத்தின் வெற்றிக்கு அதன் வாடிக்கையாளர் மைய அணுகுமுறை மற்றும் ஒழுக்கமான நிர்வாகமே காரணம் என நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரி.எம்.ஏ. சாலி தெரிவித்தார். "எமது செயல்திறனானது, நெறிமுறை ரீதியான நடைமுறைகள் தொடர்பான எமது குழுவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. வளர்ச்சியை விவேகத்துடன் சமநிலைப்படுத்துவதன் மூலம், நிலைபேறான தன்மை மற்றும் சுறுசுறுப்பு ஆகிய இரண்டையும் நாம் உறுதி செய்கிறோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தை நோக்கிச் செயற்பட்டு, டிஜிட்டல் கடன் வழங்கலை விரிவுபடுத்துதல், சந்தை எல்லையை மேம்படுத்துதல் மற்றும் செயற்பாடுகளை சீராக்க தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல் ஆகிய விடயங்களை AMF திட்டமிட்டுள்ளது. வலுவான மூலதன தாங்கல்கள் மற்றும் பணப்புழக்க இருப்புகளுடன் AMF ஆனது, நிதி உள்ளீர்ப்பு மற்றும் சந்தைக்கு இசைவாக்கமடைவதற்கு உறுதிபூண்டுள்ளது.
நிறுவன பணிப்பாளர் சபையில் சுரேன் குணவர்தன (தலைவர்), நாலத தயாவன்ச (பிரதித் தலைவர்), மேர்வின் சாலி (பிரதம நிறைவேற்று அதிகாரி), ஷம்மல்க தயாவன்ச, ஷனில் தயாவன்ச, நிலங்க பீரிஸ், ரணில் விஜேகுணவர்தன, தௌசிர கண்டம்பி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.