Print this page

மூலோபாய வங்கிக்காப்புறுதி பங்குடைமையில் இணையும் HNB பொதுக்காப்புறுதி மற்றும் யூனியன் வங்கி

HNB பொதுக் காப்புறுதியானது புத்தாக்க காப்புறுதித் தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு  குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மூலோபாய வங்கிக்காப்புறுதி உடன்படிக்கை ஊடாக யூனியன் வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இப்பங்குடைமையானது வங்கியின் விரிவான வலையமைப்பின் ஊடாக மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத என இரு காப்புறுதித் தீர்வுகளையும் உள்ளடக்கியதாக பொருந்தக்கூடிய வகையிலான பொதுக்காப்புறுதியின் உற்பத்திகளை யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் சௌகரியமாக பெற்றுக்கொள்வதனை இயலுமாக்குகின்றது.

இவ்வுடன்படிக்கையானது தங்களது நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய HNB பொதுக் காப்புறுதியின் பிரதம நிறைவேற்றதிகாரி சிதுமின ஜயசுந்தர மற்றும் யூனியன் வங்கயின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி டில்ஷான் ரொட்றிகோ ஆகியோரினால் யூனியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் முறையாக கையெழுத்திடப்பட்டது. அத்துடன் கசுன் டி சில்வா நிலையான வைப்பு நகர்த்தல்/உதவி உபத்தலைவர் சாயா ஜெயவர்த்தன, சில்லறை வங்கியியல்மற்றும் தசுன் சிறிவர்த்தன யூனியன் வங்கியின் வங்கிக்காப்புறுதி தலைவர் முதலிய சிரேஷ்ட அலுவலர்களது பிரசன்னத்தையும் கொண்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய HNB பொதுக்காப்புறுதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதுமின ஜயசுந்தர அவர்கள்'எம்முடைய பொருத்தமான காப்புறுதித்தீர்வுகளை பரந்த வாடிக்கையாளர் மையத்திற்கு விரிவாக்கும் இப்பங்குடைமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது புத்தாக்கமான வங்கிக்காப்புறுதி தீர்வுகள் மூலமாக பாரிய சௌகரியங்களையும் நிதிசார் பாதுகாப்பினையும்வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியையும் வழங்குவதிலான எமது அர்ப்பணிப்பிற்கானவொரு சான்றாக இது விளங்குகின்றது.' என்றார்.

யூனியன் வங்கியின் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்றதிகாரிடில்ஷான் ரொட்றிகோ அவர்கள் கருத்துரைக்கையில்'இப்பங்குடைமையானது எமது சேவை வழங்கல்களை வளப்படுத்துதல் மற்றும் அடிப்படை நிதிசார் தீர்வுகளுக்கான தடையற்ற அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல் எனும் எம்முடைய இப்போதைய முயற்சிகளுடன் ஒருங்கிணைந்ததாக காணப்படுகின்றது. HNB பொதுக் காப்புறுதியுடன் இணைந்து பணியாற்றுவதன்வாயிலாகதங்களது பன்மைத்துவ தேவைகளை நிவர்த்திக்கும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட உயர் தர காப்புறுதி பொதியிலிருந்து எமது வாடிக்கையாளர்கள் நன்மையடைவார்கள் என்பதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.” என்றார்.

இப்பங்குடமையின் ஊடாக கணக்குரிமையாளர்கள்பெருநிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் நிதிசார் தீர்வுகளை எதிர்பார்க்கும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலான யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் தளமானது பொருத்தமானதும் அடையக்கூடியதுமான பொதுக் காப்புறுதி உற்பத்திகளை அணுகக்கூடியவர்களாவார்கள். இக்கூட்டுடமையானது நிதிசார் உள்ளீர்ப்பினை முன்னேற்றுதல் வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் இலங்கையின் காப்புறுதி மற்றும் வங்கியியல் துறையில் அதியுன்னத சேவை வழங்கல் போன்ற இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட நோக்கங்களை மீளவலியுறுத்துகின்றன.

HNB பொதுக்காப்புறுதி என்பது இலங்கை முழுவதும் தனிநபர்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத மற்றும் டகாபுல் தீர்வுகளிலிருந்து பன்முகப்பட்ட காப்புறுதித் தேவைகளை வழங்கும்  ஒரு அர்ப்பணிப்புமிக்க பங்குதாரராவார். HNB அஸ்ஷுரன்ஸ் பிஎல்சியின் துணைநிறுவனமும் HNB குழுமத்தின் உறுப்பினருமான HNB பொதுக் காப்புறுதியானது நாடாளவியரீதியில் பொருத்தமான சேவை உள்ளடக்கத்தினை உறுதிப்படுத்த அளப்பரிய கிளை வலையமைப்பின் ஊடாக செயற்படுகின்றது. பிட்ச் ரேட்டிங் லங்கா லமிட்டெட்டின் காப்புறுதியாளர் நிதிசார் பலத்தரப்படுத்தலின் 'A' (lka) தரத்துடன் HNB பொதுக் காப்புறுதியானது புத்தாக்கம் மற்றும் பராமரிப்பின் ஊடாக பங்குதாரர்களுக்கு நிலைபேறான பெறுமதியினை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.