இலங்கையின் முதல்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு கம்பெனியான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளவை சுபர்க்ரோஸ் 2025இற்கான பிரதான அனுசரனையாளர் எனும் அதன் வகிபாகத்தை அறிவிப்பதில் பெருமைக்கொள்கின்றது.
இந்நிகழ்வானது, உத்தியோகப்பூர்வமாக ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வே வளவை சுபர்க்ரோஸ் 2025 என மகுடமிடப்பட்டுள்ளமையானது, 2019 ஆம் ஆண்டிலிருந்தான 5வருட இடைவெளிக்குப் பின்னரான அதிமுக்கிய மோட்டார்பந்தய வர்த்தகநாமத்தின் மீள்வருகையை குறிப்பதுடன்- ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் இலங்கை மோட்டார் பந்தய சமுதாயத்திற்கு முக்கியமான கணமாகவும் விளங்குகின்றது.
இவ்வறிவித்தலானது இந்நிகழ்வின் உப-ஏற்பாட்டாளர்களான, இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியிலாளர்களினால் (SLEME) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டது.
செவனகலயின் கிராப்ட்ஸ்மேன் ஒட்டோட்ரோமில் ஜுலை 12மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள, வளவை சுபர்க்ரோஸின் 10வது பதிப்பானது புதுப்பிக்கப்பட்ட சக்தி மற்றும் உணர்வுகளுடன் மீளவருகின்றது. மோட்டார்கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் 21 போட்டி பிரிவுகளினை உள்ளடக்கியுள்ள, இந்நிகழ்வானது 50,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மயிர்கூச்செரியும் பந்தயங்களிற்கும் அப்பால், வளவை சுபர்க்ரோஸானது, இலங்கை சமுதாயத்துடனான அதனது ஆழமான பிணைப்பினை வெளிப்படுத்தும்விதமாக, .இராணுவ நலன்புரி மற்றும் சமுதாய செயற்றிட்டங்களுக்கான ஆதரவுடன், தொண்டு நோக்குடைய துவக்கமாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் அதிகமாக கொண்டாடப்பட்ட மோட்டார் பந்தய வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் வர்த்தகநாம தூதுவராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக காணப்படுபவருமான, அஷான் சில்வா அவர்கள் வர்த்தகநாம தூதுவராக போட்டியாளர்கனை உற்சாகப்படுத்துவதற்காக இந்நிகழ்வில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. SL-GT
பந்தயத்திலான சில்வாவின் ஆகர்ஸமிக்க வரலாறுகளும் பல்வேறு வெற்றிக்கிண்ணங்களும் உற்பத்தியின் அதியுன்னதத்திற்கான நீண்டகால நோக்கம் மற்றும் தொழில்முனைப்பினை கட்டமைந்ததாக காணப்படுகின்றது.
ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே - இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள் கருத்துரைக்கையில், “வளவை சுபர்க்ரோஸ் உடனான எமது நீண்டகால பங்குடைமையானது பரஸ்பர மதிப்பு மற்றும் பகிரப்பட்ட பெறுதிகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பின், இலங்கையின் மோட்டார் பந்தயம் மற்றும் வாகன உற்பத்தி துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில், மீண்டும் பிரதான அனுசரனையாளராவதனில் நாம் பெருமையடைகின்றோம். இளைஞர் திறன்களிலான மூலோபாய கூட்டிணைவு மற்றும் முதலீடுகளின் வாயிலாக, இத்துறையினை உயர்த்துவதற்கும் தேசிய கட்டமைப்பிற்கு பங்களிப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடையவர்களாக காணப்படுகின்றோம். இந்நிகழ்வின் வெற்றியினையும் வருகின்ற ஆண்டுகளிலும் நம்பிக்கைமிக்க இப்பங்குடைமையை தொடர்வதனையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கையின் தன்னியக்க சுத்திகரிப்பு துறையின் நம்பிக்கைமிகு பெயராக விளங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, உலகத்தரம் வாய்ந்த நிறப்பூச்சுக்களின் வகைகளை வழங்கின்றது. வளவை சுபர்க்ரோசிலான இதனது ஈடுபாடானது மூலோபாயமானது என்பதுடன், உற்பத்திகளின் சிறப்பினை மாத்திரமின்றி உள்ளுர் வாகன உற்பத்தி துறையிலான அபிவிருத்திக்குமான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கின்றது.
வாகன உதிரிபாக துறையில் திறனுடைய தொழிலாளர்களது அடுத்து தலைமுறையினை வளர்த்தெடுக்கும் தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான வர்த்தக நாம பங்குடைமையானது, இத்துறை குறித்த இதனது அர்ப்பணிப்பிற்கான மற்றொரு உதாரணமாகும்.
வளவை சுபர்க்ரோஸ் 2025 ஆனது 30 உயர் பரிணாமமுடைய ஊஊவுஏ கமராக்கள், அலார்ம் முறைமைகள் மற்றும் மத்தியமயப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைந்த விரைவு-மீட்பு மார்சல்கள் உள்ளடங்கலாக, அதனது வரலாற்றிலேயே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உட்கட்டுமானத்தில் அதிநவீனமான அம்சங்களுடன் காணப்படுகின்றது.
இந்நடவடிக்கைகளானவை துல்லியம், தயார்ப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு எனும் - ஒவ்வொரு உற்பத்தி மற்றும் பங்குடைமையுடன் ஒன்றிணைந்த- ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயயின் சுயமதிப்புடன் மிகநெருக்கமாக இணைந்ததாக காணப்படுகின்றது.
வளவை சுபர்க்ரோஸ் 2025 வார இறுதியானது விறுவிறுப்பான பந்தயங்கள், பங்கேற்புடைய திருவிழா சூழல், மற்றும் செவனகலையிற்கு வேகம் மற்றும் சமுதாய உணர்வு என்பன மீளவரும் வரலாற்று நிகழ்வு என்பனவற்றை உறுதிப்படுத்துகின்றது. மோட்டார்பந்தய ஆர்வலர்கள்,. குடும்பங்கள், மற்றும் விறுவிறுப்பினை எதிர்ப்பார்ப்பவர்கள் என அனைவரையும் இலங்கை மோட்டார் பந்தயத்தின் ஆர்வமிகு இப்புதிய அத்தியாயத்தினை கண்டுகளிக்க அழைக்கின்றோம்.