Print this page

தாய்லாந்தில் சிறந்த வாடிக்கையாளர் மைய கம்பெனி'மகுடத்தைச் சூடியுள்ள HNB

February 26, 2026

HNB பொதுக் காப்புறுதி பாங்கொக்கில் இடம்பெற்ற 6வது வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகள் நிகழ்வில் பொதுக் காப்புறுதி வகை (இலங்கை) பிரிவில் பெருமைமிகு 'சிறந்த வாடிக்கையாளர் மைய கம்பெனி' விருதினை பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்விருதானது இலங்கையிலும் அதற்கப்பாலும் பொதுக்காப்புறுதித் துறையில் எதிர்காலத்திற்கு தயாரான அணுகுமுறையை வடிவமைப்பதிலான அதனது தற்போதைய நிலைமாறு பயணத்தின் ஊடாக HNB பொதுக்காப்புறுதி தொடர்ச்சியாக மேற்கொள்ளும் மூலோபாய முன்னேற்றத்திற்கான வலுவாக சான்றாக காணப்படுகின்து.

வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகளானது இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் பிராந்தியத்தின் வளர்ந்துவரும் சந்தைகள் ஊடாக அதிசிறப்பானவற்றையும் எல்லை கடந்த கூட்டிணைவினையும் வளர்த்தெடுப்பதற்காக ஒழுங்கமைக்கப்படுகின்றது. மதிப்பாய்வானது பிரைஸ்வாடர்ஹவுஸ்கூபர்ஸ் நிறுவனத்தினால் துறைசார் நிபுணத்துவமிக்க சர்வதேச நடுவர்களுடன் இணைந்து மிகக்கடுமையான மீளாய்வுகளுக்கு உட்பட்டமையினால் இவ்வருடத்திற்கான அங்கீகாரமானது குறிப்பிடத்தக்க பெறுமதியைப் பெறுகின்றது.

விருது மதிப்பீடானது புதிய வியாபார முன்னுரித்துகள் இடர் குறைப்பு விகிதம் கோரல்களின் சராசரி எண்ணிக்கை கோரல் தீர்ப்பனவு வீதம் மொத்த கோரல் தீர்ப்பனவுகள் மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கு வசதியளிக்கும் தயாரிப்புகளது எண்ணிக்கை போன்ற செயற்பாட்டு அளவுகோல்களது தக்க தொகுதிகளினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கௌரவமானது இலங்கை பொதுக் காப்புறுதித் துறையில் வாடிக்கையாளர் மைய நடைமுறைகள் நிதி நெகிழ்திறம் மற்றும் உள்ளடக்கமான தயாரிப்பு வழங்கல்களை வலுப்படுத்துவதிலான கம்பெனியின் அர்ப்பணிப்பினை மேலும் வெளிப்படுத்திக்காட்டுகின்றது.

HNB பொதுக்காப்புறுதியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்றதிகாரி சிதுமின ஜயசுந்தர அவர்கள், 'இவ்வங்கீகாரத்தை பெறுவதில் உண்மையில் பெருமையடைவதுடன், இது எமது செயற்பாடுகளில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொள்வதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது.

சேவை தரநியமங்கள், செயற்பாட்டு வினைத்திறன், மற்றும் உள்ளடக்கமான காப்புறுதி தீர்வுகளிலான எமது கவனம் எவ்வாறு எமது வாடிக்கையாளர் மற்றும் வியாபாரத்திற்கான பொருளார்ந்த பெறுமதியாக மாற்றமுறுகின்றது என்பதற்கான பெருமைமிகு பிரதிபலிப்பாகவும் காணப்படுகின்றது.' எனக்குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் பயணிக்கும் HNB பொதுக் காப்புறுதியுடன், அதன் விருதுகள் அதனது உறுதியான உள்ளுர் வளர்ச்சி மற்றும் நிதிசார் நெகிழ்திறத்துடன் பொருந்திப்போகின்றன. பொதுக் காப்புறுதித் துறைக்கான வாடிக்கையாளர் சிறப்பு தரப்படுத்தல்களில் முதல் மூன்று இடங்களில் HNB பொதுக் காப்புறுதியினை தரப்படுத்திய LMD இனால், வாடிக்கையாளர்கள் மீதான கம்பெனியின் கவனமானது சமீபத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வெற்றியானது, கம்பெனியின் நிலைப்பாட்டினை நிலையானதாகவும், இலங்கை காப்புறுதி துறையில் சேவைத் தலைமையான தலைமைத்துவமாகவும் கம்பெனியின் நிலைப்பாட்டினை வலுப்படுத்தும், சமீபத்திய பிட்ச் தரப்படுத்தல் உயர்நிலையாக 'A(lka)’ உள்ளடங்கலாக உறுதியான நிதிசார் அடித்தளங்களினால் மேலும் ஆதரவளிக்கப்படுகின்றது.