Print this page

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்களை மொத்தமாக நீக்கும் யூடியூப்

September 30, 2021

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுபபூசி போடாதது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய காரணம் ஆகும். கூகுளில் ஏராளமான பொய்யான தகவல்கள் கொரோனா தடுப்பூசிகள் குறித்து கொட்டிக்கிடக்கின்றன.குறிப்பாக யூடியூபில் தடுப்பூசி குறித்து பயமுறுத்தும் வண்ணம் பல்வேறு மொழிகளில் வீடியோக்கள் உள்ளன.


இந்நிலையில் சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது.