Print this page

மக்கள் வங்கியின் கந்தப்பளை சேவை நிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் வங்கியின் கந்தப்பளை சேவை நிலையத்தினை புதிய இடத்தில் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இதன் மூலம் கந்தப்பளை பிரதேச மக்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதுடன் இங்கு நிறுவப்பட்டுள்ள மக்கள் வங்கியின் தன்னியக்க டெலர் இயந்திரத்தின் மூலம் பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளும் வசதிகளை கிழமையின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அனுபவித்திட முடியும்.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் நுவரெலியா பிரதேச முகாமையாளர் அநுர தீகலகே, நுவரெலியா உதவி பொலிஸ் மாஅதிபர் பீ.எம்.எஸ்.எல்.பீ. பஸ்நாயக்க, மக்கள் வங்கி - நுவரெலியாவின் முன்னாள் பிரதேச முகாமையாளர், தற்போதய கண்டி பிரதேச முகாமையாளர் கபில திசாநாயக்க, நுவரெலியா பிரதேச முகாமையாளர் வினோதிகா பீரிஸ், நுவரெலியா கிளை முகாமையாளர் அனுர அபேகோன், கந்தப்பளை சேவை நிலைய முகாமையாளர் கிரிஷாணி செல்வகுமார் ஆகியோருடன் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 741 கிளைகள் மற்றும் சேவை நிலையங்களை கொண்டுள்ளதுடன் 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நாட்டின் முன்னோடியான நிதிச் சேவை வழங்குனராக மக்கள் வங்கி விளங்குகிறன்து.

Last modified on Monday, 31 January 2022 04:41