web log free
April 25, 2024

அமெரிக்க போராட்டம் எனக்கு ஒரு பாடம்

இனவாதம் மற்றும் அநீதிக்கு எதிரான அமெரிக்காவின் சிவில் போராட்டம் எமக்கொரு பாடம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த இனவாத சம்பவம் மற்றும் அதற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் குறித்து தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவில் குமார் சங்ககார இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ நாம் வாழும் நாடு எதுவாக இருந்தாலும் அது அமெரிக்காவாக இருக்கலாம், இலங்கையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு நாடாக இருக்கலாம் எமது உணர்வுகள் மற்றும் உணர்வு ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அரசாங்கம் அல்ல அதனை நானும் நீங்களுமே எடுக்க வேண்டும்.

எமது ஞானம், கருணை, இரக்கம், உணர்வுகள் மற்றும் புரிதல்களை தீர்மானிகக் வேண்டியது அரசுகள் அல்ல. எமது மனங்கள், நமக்கிடையிலான திறந்த மனப்பான்மைகள் அல்லது மாற்றங்கள் அல்லது மாற்றங்களை பின்பற்றுவது மற்றும் மதிக்கும் இயலுமைகளுக்கு அரசுகள் எல்லைகளை நிர்ணயிக்கக் கூடாது. அவற்றை தெரிவு செய்யும் மக்களாக நாம் இருப்போம்.

நாம் எமது பிரதிநிதிகளை எம்மிடையே உள்ளவர்கள் மத்தியில் தெரிவு செய்வோம்.அவர்கள் அரசுக்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும்.

அவர்கள் எப்படியான நபர்கள், அவர்கள் எப்படியான நபர்களாக மாறுகின்றனர் என்பதும் நமது பொறுப்பு. எமது அழுத்தங்கள் மற்றும் ஆரவாரங்கள் மூலமே அவர்களின் தன்மைகள் உருவாகும்.

எமது தெரிவுகள் அரச அணுகுமுறைகள், செயல்கள், கொள்கை மற்றும் சட்டவாக்கங்களுக்கும் வழிக்காட்டும்.

சிறந்த அரசு மற்றும் சிறந்த சமநிலையை ஏற்படுத்துவற்காக நாம் மிக சிறந்த நபர்களாக இருக்க வேண்டும்.

எமது பலமும் பலவீனங்களும் எமக்கு மாத்திரமல் நாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகளின் நடத்தியிலும் வெளிப்படும்.

சாதாரண குடிமக்களான எமக்கு, பகிரங்கமான, கௌரவமான, புரிந்துணர்வுடன் கூடிய உலக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றாக இணைந்து மிக சிறந்த அசாதாரணமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அறியாமை மற்றும் பாதிப்புகளுக்கு இடமில்லாத மற்றும் உண்மையான சுதந்திரம் அரசாளும் உலக கலாசாரம் அவசியம்.

நாம் தைரியமாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடனான இந்த பயணத்தில் செயற்பாட்டு ரீதியாக பங்கேற்க வேண்டும். இன்றைய எமது தெரிவுகள் எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உரித்தாகும் கலாசாரத்தை தீர்மானிக்கும்.

எமக்கு எமது வாழ்க்கை குறித்து பெருமை கொள்ள வேண்டுமாயின், எமது உரிமைகளை முன்நோக்கி கொண்டு சென்று எமது பிள்ளைகள் பெருமைப்படுவதை காண வேண்டுமாயின் நாம் மிகவும் சிறந்தவர்களாக மாறுவோம்.

எமது பிள்ளைகளுக்காக எமக்கு மத்தியிலும் ஒவ்வொருவரிடமும் இதனை கோருவோம்”. என குமார் சங்ககார தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
Last modified on Sunday, 07 June 2020 03:19