Print this page

குளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

September 18, 2020

குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான விளக்கம் கூறுகிறது.

அதற்குமுன்னர் எமது முன்னோர்கள் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

எமது உடலில் உள்ள சூடுதான் பல உபாதைகளுக்கும் காரணம் என்பார்கள். காய்ச்சலிலிருந்து வயிற்றுப்போக்குவரை உடல்சூடு பங்களிப்பு செலுத்துகிறது.

உடலின் சூட்டைத் தணிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுவந்தாலும் குளிக்க்ம்போது சிறு நீர் கழிப்பது உடல் சூட்டைத் தணிக்கும் ஒரு நல்ல உபாயம் என கூறியுள்ளனர்.

சரி, நவீன மருத்துவம் என்ன சொல்கிறது?

நாம் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கிறோமெனில் அது கண்டிப்பாக எமது கால்களில் பட்டுத்தான் நீர்வீழ்ச்சிபோல் வழிந்தொடும். இதனால் சிறு நீரிலுள்ள யூரியா எமது கால்களில் ஏதேனும் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகின்றது.

குறிப்பாக சொரியோஸிஸ் மற்றும் பூஞ்சை நோய்கள் காலை அண்டவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு யூரியாவுக்கு உண்டு.

சரும உபாதைகளுக்கு எதிராக தயாரிக்கப்படும் பல கிறீம்களில் சிறு நீரில் கலந்துள்ள யூரியாவைத்தான் உபயோகிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.