Print this page

பச்சை கிளியின் சுயசரிதை

நான் ஒரு பச்சை கிளி. நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பேன். அழகான சோலையில் பிடித்த பழங்கள்,தானியங்களை நினைத்த நேரத்தில் என் நண்பர்களோடு சேர்ந்து உண்ணுவேன்.நினைத்த இடத்திற்கு மகிழ்ச்சியாக பறந்து செல்வேன்.ஒருநாள் என் நண்பர்களோடு விளையாடும் போது ஒரு வேடன் விலங்குகளை தேடினார். சிறிது நேரம் கழித்து விளையாடி விட்டு களைப்பாகி தண்ணீர் குடிப்பதற்காக  போகும் போது அந்த வேடன் வலையை விரித்து விட்டார். தாகத்தில் தெரியாமல் வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்டேன். பிறகு என்னை பிடித்து அந்த வேடன் அவனது வீட்டிற்கு கொண்டு சென்றார். பிறகு என்னை கூட்டில் அடைத்து வைத்து விட்டார். எனது நண்பர்களோடு பேசி மகிழ்ச்சியாக சுதந்திரமாக பறந்து செல்ல வேண்டும். ஆனால் நான் இங்கு கூட்டில் தனியாக இருக்கிறேன். எனக்கு இது பிடிக்கவில்லை. நான் இங்கிருந்து போக முடியாதா ?

 

                                                                                                                                                                                                                                  

M. அக்ஷயா

தரம் : 7

கணபதி இந்து மகளிர் மஹா வித்யாலயம்

கொழும்பு : 12

 

                                                                                                    

Last modified on Friday, 27 August 2021 05:13