Print this page

கொரோனாவும் ஆண்குறியும்! செய்தி ஆண்களுக்கு மட்டும்!!

February 08, 2022

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண் தரப்பினர் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர், கடந்த ஆண்டு கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு தனது ஆணுறுப்பை 1.5 அங்குலம் சுருங்கி இதற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30-40 வயதுக்குட்பட்ட இவரின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். புணர்ச்சி குறைந்தாக குறிப்பிடுகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், நான் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, ​​எனக்கு சில விறைப்புத்தன்மை குறைபாடுகள் இருந்தன,” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் இந்த நபரின் பாலுணர்வை தூண்டும் திறன் முன்பை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த நிலைமைகளுக்கு நீண்டகால சிகிச்சை மூலம் அவற்றை குணப்படுத்த முடியும், ஆனால் நோயாளியின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடைவதால், அது மீட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் யுனிவேர்சிட்டி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 3,400 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், 200 பேர் சுருங்குதல் என்ற அரிய பக்க விளைவுகளுடன் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதற்கிடையில், மியாமி மில்லர் மருத்துவக் கல்லூரியின் குளோபல் மென்ஸ் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கொவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் நாளமில்லா செல்கள் சேதமடைவதால் ஆண்களின் பாலியல் தூண்டுதல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதன் முழுமையான முடிவுக்கு வர இன்னும் ஆராய்ச்சி தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Last modified on Tuesday, 08 February 2022 13:23