web log free
July 26, 2021
editor

editor

நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மூன்று வேலை உணவு உண்டு நிம்மதியாக வாழ வேண்டும் எனவே விரும்புகிறார்கள் என்றும்,  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்கப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதற்கு நிகரானது. நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் பற்றி தான் அறியாததால் அதனைப்ப பற்றி பேசவில்லை என்றும், அதேபோல், அரசமைப்பில் சகலரினதும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதே அவசியம் எனவும் தெரிவித்தார். 

குறிப்பாக, யுத்தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தபட்டவை என்றும் , 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அப்பாவி மக்களும் யுத்தத்தை ஒருபோதும்  விரும்பவில்லை எனவும், அதனாலேயே தான் யுத்தம் நிறைவடைந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

அத்தோடு யுத்த காலத்தில் நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, யுத்தம் நிறைவடைந்த பின்பு நாட்டில் இரத்த ஆறு ஓடுவதும் தடைப்பட்டதென தெரிவித்த அவர், மீண்டும் இரத்த ஆறு ஓட வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாத காரணத்தாலேயே மேற்குறித்த நிலைப்பாட்டை தான் வகிப்பதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், தான் மலையகத்தில் அரசியல் பிரசாரம் செய்யப்போவதாக வதந்திகள் பரப்பபடுவதாகவும் , மக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் கண்டு அஞ்சுவது போல தன்னையும் கண்டு சில அரசியல் வாதிகள் அச்சப்படுகின்றனர் என்று சாடினார்.

அ​தேபோல், தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் திருப்தி அடையும் வகையிலான சேவைகளை செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தக்கவைத்து  கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்திருக்காவிட்டால் இந்த ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு முதற்காரணியாக பார்க்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் பிணைந்த சங்கிலிகளாவே பொருளாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம், 2009 மே மாதம் 18 ஆம் திகதியன்றே நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

வாக்குச்சீட்டை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்தார் என்றக் குற்றச்சாட்டில், வாக்குச்சாவடிக்குள் வைத்தே ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அவரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேர்தல்கள் சட்டத்தை மீறியக் குற்றச்சாட்டின் கீழ், வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். 

எல்பிட்டிய பிரதேச சபைக்காக நடத்தப்பட்ட வாக்களிப்பில், தலகஸ்பே வாக்களிப்பு நிலையத்தில் வைத்தே, நேற்று மாலை 3 மணியளவில் இவ்வாறு படம்பிடித்துள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்தவரிசையில் தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், கௌதம் கார்த்திக் ஜோடியாக இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தற்போது ” நான்தான் ” சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு துளு படத்திலும் நடித்துள்ளார்.

அஷ்ரிதா ஷெட்டிக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இவர்கள் காதல் விவகாரம் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்தது. தற்போது மனிஷ் பாண்டே உறவினர்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடப்பதாகவும் அடுத்த மாதம் மும்பையில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே  டி20 தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வசதியாக திருமணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து நாசமாக்கிய ராஜபக்ஷ குடும்பத்திற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பை வழங்க முடியாது என ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பினால் நேற்று (10) பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேகாலை மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர் பண்டார அத்துகோரள இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “இன்று நாம் 68 வருட ஸ்ரீ.ல.சு.கட்சி அரசியல் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான தடை தாண்டல் நிலைக்கு வந்திருக்கின்றோம்.

அந்த தடை தாண்டல் 2015 ஜனவரி 08ம் திகதி இடம்பெற்ற அந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த தேர்தலில் இந்நாட்டின் 62 இலட்சம் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ  உள்ளிட்ட கும்பல்  வீட்டுக்குச் சென்று சும்மா இருக்கவில்லை.

அவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியை அழித்து நாசமாக்குவதற்கான சதியினை ஆரம்பித்தார்கள். ராஜபக்ஷ ஜன்னலில் தொங்கிக் கொண்டு ஆரம்பித்த ஸ்ரீ.ல.சு.கட்சியை அழிக்கும் சதி நாளுக்கு நாள் வளர்ந்து இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்த 87 பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைவடையும் நிலைக்கு வந்திருக்கின்றது” என்றார்.

எல்பிட்டி பிரதேச சபையில் 17 உறுப்பினர்களை வெற்றிக்கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அந்த சபையை தனது வசமாக்கிக்கொண்டது.

அதில், ஐக்கிய தேசியக் கட்சி ஏழு உறுப்பினர்களையும்

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 உறுப்பினர்களையும்

ஜே.வி.பி இரண்டு உறுப்பினர்களையும் தனதாக்கிக் கொண்டது.

17 உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்காக, 85 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அளிக்கப்பட்ட வாக்குகள் 42,100

செல்லுப்படியான வாக்குகள் 41,503

 நிராகரிக்கப்பட்டவை 597 வாக்குகள் ஆகும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெறுகின்றன.

தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அப்பணிகள் முன்னெடுக்கப்படுவதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு, பொலிஸ் அதிகாரிகள் 41 பேரடங்கிய விசேட குழுவொன்றும், பொலிஸ் சாவடியும் நிறுவப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார். 

24 மணிநேரம் தொடர்ச்சியாக  இயங்கும் இந்த பொலிஸ் சாவடியில், பொரளை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுவோர், இணை சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன. 

வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், பொலிஸ் பாதுகாப்புடன் அவை விநியோகிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

இன்றிரவு 10 மணிக்கு மேல் முதலாவது தேர்தல் பெறுபேறுகளை வெளியிடமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல், இன்று (11) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

இந்த சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 85 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களை தெரிவு செய்வதற்கு 53.384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அறிவிப்பினால், ராஜபக்ஷர்கள் நடுங்குகின்றனர். அவர்களுக்கு சிறுநீர் போயிருக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற முதலாவது பிரசாரக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பில்,  உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, காட்போட் வீரர்களுக்கு அல்லாமல் உண்மையாக, தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்து, இரவு பகல் பாராது, பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆவார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவருக்கு நிறையவே அனுபவம் உண்டு. ஏசி அறைக்குள் இருந்துகொண்டல்ல. களத்திலிருந்து 30 வருடங்கள் போராடியவர். அவருக்கே, தனது ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்று சஜித் தனதுரையில் தெரிவித்தார்.

அதனை குறிப்பிட்டு காட்டிய அமைச்சர் ராஜித, “ ராஜபக்ஷர்களுக்கு எதிராக கடும் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சரத் பொன்சேகாவின் பெயரை கேட்டவுடன், ராஜபக்ஷர்களுக்கு சிறுநீர் போயிருக்கும் என்றார். 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர் டத்தோ அயோப் கான், கைதான ஏழு பேரும் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, நிதி திரட்டியதாக காவல்துறை நம்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், கைதானவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் சந்தேக நபர்களைக் கண்காணித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாகவே சம்பந்தப்பட்டவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

"நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தான் முதலில் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் சிலரை கவுரவிக்கும் விதமாக மலாக்கா மாநிலத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குணசேகரன் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்வில் உரையாற்றியதுடன், அந்த அமைப்புடன் தொடர்புள்ள துண்டுப் பிரசுரங்களையும் அவர் விநியோகித்ததாக நம்புகிறோம்," என்றார் அயோப் கான்.

கைதான மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான சாமிநாதன் மலாக்காவைச் சேர்ந்தவர். குணசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள அதே குற்றச்சாட்டுகளை தான் இவரும் எதிர்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் துணைத் தூதர் தாக்கப்பட்டதில் தொடர்புடைய 28 வயதான ஆடவர் ஓருவரும் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.

காப்பீட்டு முகவர், வாடகைக் கார் ஓட்டுநர் கைது

கோலாலம்பூரைச் சேர்ந்த 28 வயதான காப்பீட்டு முகவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கோலாலம்பூரில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக டத்தோ அயோப் கான் தெரிவித்தார்.

"விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக ரகசியக் கூட்டங்களை நடத்தி அந்த அமைப்புக்காக பிரசாரம் செய்த டாக்சி ஒட்டுநரையும் தடுத்து வைத்துள்ளோம். 37 வயதான அந்த ஆடவருக்கும் இலங்கை துணைத் தூதர் கோலாலம்பூரில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ளது.

"கைது நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட சோதனையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அமைப்பின் கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"கைதானவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. எனவே மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது," என டத்தோ அயோப் கான் எச்சரிக்கை விடுத்தார்.

கைது நடவடிக்கையை இனப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்: போலீஸ் எச்சரிக்கை

இனம் சார்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்துள்ள புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உண்மையாகவே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டுமே கைது செய்வதாக அவர் தெளிவுபடுத்தினார்.

"கடந்த சில ஆண்டுகளில் 284 ஜெமா இஸ்லாமியா அமைப்பினரும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 512 பேரும், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் 25 பேரும் கைதாகி உள்ளனர்.

"சட்டத்தை மீறும் எவர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கைகள் எடுக்கும். குறிப்பாக பயங்கரவாத தொடர்பு இருப்பவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்," என்று அயோப் கான் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய இயக்கங்கள் நன்கு வளர்ச்சி காண்பதற்குள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

புலிகள் அமைப்புக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயன்ற நான்கு பேர் அண்மையில் ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய காவல்துறையினர் கைது நடவடிக்கையை இனப் பிரச்சினையாக மாற்ற நினைப்பது தவறு என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் இதர பயங்கரவாத அமைப்பினர் கைது செய்யப்பட்டபோது ஏன் எந்தவொரு அரசியல் பிரமுகரும் குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

விடுதலைப்புலிகளை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை காவல்துறை கண்காணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இனிமேல் எத்தகைய எச்சரிக்கையும் விடுக்கப்படாது என்றார்.

"பயங்கரவாத அமைப்பு என்று தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குழுவை ஆதரிப்பதில் அப்படியென்ன நன்மை இருக்க முடியும்?," என்றும் டத்தோ அயோப் கான் கேள்வி எழுப்பினார்.

இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மலேசிய பொலிஸாரினால் ஏழுபேர், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

அந்த ஏழுபேரில், அரசியில் ஈடுபடும் இருவரும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2014ஆம் ஆண்டு முதல், இன்று வரையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே, மலேசியாவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு, மீளவும் உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் செய்திகள் வெளியானமை இது முதன்முறையல்ல.

என்றாலும், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மலேசிய பொலிஸின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது. 

 

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd