web log free
July 26, 2021
editor

editor

கொழும்பு, ஜம்பட்ட வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாக நபர்கள் இருவர், இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னரே, அவர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

 

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மடுமாடவ அரவிந்த, அந்தக் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இன்று (09) இராஜினாமா செய்துள்ளார்.

இந்த கட்சியின் முக்கிஸ்தர்களில் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஆவார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை துறப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தளங்கள் பலவற்றிலும் இந்தச் செய்தி வைரலாகியுள்ளது.

இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, கட்சின் பதல் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என அறியமுடிகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீர்மானத்தை இன்றிரவு எடுத்துள்ள சுதந்திரக் கட்சி, உத்தியோகபூர்வமாக நாளை அறிவிக்கவுள்ளது.

இதேவேளை, எந்த வேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை.

பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

கூட்டத்தை அடுத்தவாரம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

பாராளுமன்றத்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் ஒத்திவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான யோசனை, பாராளுமன்றத்தில் இன்று (08) சமர்ப்பிக்கப்படும் என அந்தத் தகவல்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பில், இன்று (08) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுமென அறியமுடிகின்றது. 

 

அவ்வாறு ஒத்திவைக்கப்படுமாயின், எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10.30 மணிமுதல், இரவு 7.30 மணிவரையிலும் இடம்பெறும்.

பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது அமர்வு இன்றாகும். 

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அருவக்காடு குப்பைப் பிரிவில், நேற்றிரவு (07) பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இதனால், அண்மையில் வாழும் சேரக்குளி மற்றும் கரத்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

வெடிப்புகளுடன் பாரிய சத்தங்கள் கேட்டமையால் அந்த மக்கள் பாரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் என அறியமுடிகின்றது. 

கழிவுப் பகுதியில், மீதென் வாயு பரிசோதனை முதன்முறையாக முன்னெடுக்கப்பட்டது என அறியமுடிகின்றது.

அதனையடுத்தே, மேற்படி வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்றிரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. 

 

இந்த வெடிப்பினால், யாருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும், அங்கிருந்த பணியாளர்கள் அவ்விடத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து அருவாக்காட்டு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிக்கொண்டு அசன்ற 29 குப்பை டிப்பர்கள், ஜா-எல பகுதியில் வைத்து, கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தனது கையடக்க தொலைபேசியின் ஊடாக, பெண்களின் அந்தரங்கங்களை மிகவும் சூட்சுமமான முறையில், வீடியோ செய்த 25 வயதான இளைஞன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொடையைச் சேர்ந்த மேற்படி இளைஞன், தன்னுடைய பாதணிக்குள் கையடக்க தொலைபேசியை மறைத்துவைத்தே, பெண்களின் அந்தரகங்களை படம்பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை, பலாங்கொடை நீதவான் ஜயசூவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, அவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பலாங்கொடை வாராந்த சந்தைக்கு வரும் பெண்கள், மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்யும் போதே, தன்னுடைய பாதணிக்குள் மறைத்துவைத்திருந்த கையடக்க தொலைபேசியின் ஊடாக இவ்வாறு படம் பிடித்துள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்த கையடக்க தொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது, 

பெண்களின் அந்தரகங்கள், நிர்வாணப்படங்கள், மிகமோசமான காட்சிகள் பல பதிவுச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

 

01.சமரவீர வீரவன்ன

02.ஜயந்த கெடகொட

03.சிறிதுங்க ஜயசூரிய

04.பத்தரமுல்லே சீலரதன தேரர்

05.கலாநிதி அஜந்தா பெரேரா

06.சமன்சிறி ஹேரத்

07.ஏ.எஸ்.பீ.லியனகே

08.எம்.கே.சிவாஜிலிங்கம்

09.சமன் பிரசன்ன பெரேரா

10.சிறிபால அமரசிங்க

11.பத்தேகமகே நந்தமித்ர

12.சரத் கீர்த்திரத்ன

13.அசோக வடிகமங்காவ

14.துமிந்த நாகமுவ

15.அஜந்த டி சொய்சா

16.சமிந்த அநுருத்த

17.மில்ரோய் பெர்ணான்டோ

18.மொஹமட் ஹசன் அலவி

19.ரொஹான் பல்லேவத்த

20..நாமல் ராஜபக்ஷ

21.அபருக்கே புண்ணியநந்த தேரர்

22.வஜிரபானி விஜேசிறிவர்தன

23.அநுர குமார திஸாநாயக்க

24.அருண டி சொயிசா

25.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

26.இல்லியாஸ் மொஹமட்

27.பியசிறி விஜேநாயக்க

28.கலாநிதி ரஜீவ விஜேசிங்க

29.சரத் மனமேந்திர

30.சுப்ரமணியம் குணரத்னம்

31.சஜித் பிரேமதாஸ

32.மஹேஷ் சேனாநாக்க

33.கோட்டாபய ராஜபக்ஷ

34.பிரியந்த எதிரிசிங்க

35.ஆரியவங்ச திஸாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும்,இறுதி நேரத்தில் ஆறுபேர், தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

இதனால், 35 பேர் மட்டுமே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அந்த 35 வேட்பு மனுக்களில் சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவே இரண்டு ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அவையும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், அந்த 35 வேட்பாளர்களில், கண்டி தலதா மாளிகையை தரிசிப்பதற்காக, முதலாவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ செல்கிறார்.

தலதாமாளிகையில் வழிபடும் அவர்,  மநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். 

”துருக்கி தங்களின் நீண்ட நாள் திட்டப்படி சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தவுள்ளது.

அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபடவோ அல்லது இதற்கு ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தின் முக்கிய பகுதியை வீழ்த்தியபின் தங்கள் படைகள் அந்த பகுதியில் இருக்காது” என கூறுகிறது அமெரிக்கா.

”மேலும், இரண்டு வருடங்களாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு குழுவின் கைதிகளை துருக்கி பொறுப்பேற்றுக் கொண்டது.”

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்கள் நாட்டிலிருந்து வந்த ஐ.எஸ். போராளிகளை திரும்பப்பெறுமாறு நாங்கள் கேட்டபோது அந்த நாடுகள் அதை மறுத்துவிட்டது.”

”எங்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் நாங்கள் அவர்களை நீண்டகாலம் வைத்திருக்கமாட்டோம்” என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

துருக்கி, பயங்கரவாதிகள் என குறிப்பிடும் குர்து இன கிளர்ச்சியாளர்களின் அமைப்பான ஒய்பிஜி அமைப்பிடமிருந்து முழுமையாக விடுப்பட்ட பகுதியாக இது இருக்க வேண்டும் என்று எண்ணியது.

பெரும்பாலும் சிரியாவின் ஜனநாயக படை மற்றும் அமெரிக்காவின் ஆதரவு படையைக் கொண்டதே இந்த ஒய்பிஜி படை ஆகும்.

இந்த பாதுகாப்பு பகுதிக்குள் இரண்டு மில்லியன் அகதிகளை அனுப்ப விரும்பியது துருக்கி. இப்போது துருக்கியில் 3.6 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர்.

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது.

அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்.

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd