web log free
July 26, 2021
editor

editor

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில், சட்டமா அதிபர் தன்னுடைய நிலைப்பாட்டை ஒக்டோபர் 3ஆம் திகதி அறிவிக்கவுள்ளார்.

சிங்கபூருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12 ஆம திகதி வரையிலும் மருத்துவ சிகிச்கைக்காக செல்லவேண்டும் எனக் கோரியே, கடவுச்சீட்டை விடுவிக்குமாறு, நிலையான மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ இன்று (01) கோரியிருந்தார்.

வீரக்கெட்டிய மெதமுல டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுதூபியை நிர்மாணிப்பதற்கு, காணியை பெற்று, அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் போது, 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது எதிராக தாக்கல் வழக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நகர்வு மனுவின் ஊடாக, பிரதிவாதி தரப்பினரால் இன்று (01) அழைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான, சம்பத் விஜேரத்ன (தலைவர்) சம்பத் அபேகோன் மற்றும் சம்பா ஜனாகி ராஜரத்னம் ஆகியோர் முன்னிலையிலேயே இவ்வழக்கு அழைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்னும் ஆறு மாதங்களுக்குள் கலைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அப்படியாயின், எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, அதற்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். புதிய பாராளுமன்றமும் தெரிவு செய்யப்படும். 

 

பாராளுமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்றத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. மக்களும் அவை தொடர்பில் ஓரளவுக்கு தெளிவுப்படுத்தப்பட்டனர் என்றார். 

பாராளுமன்றத்தில் இடம்பெறும் சகல நடவடிக்கைகளையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 


1. எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாவல, ரொசலின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2.திருகோணமலை தரஸ்கொட்டுவ பகுதியில் டிப்பர் வாகனமொன்று சிறுமி ஒருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் குறித்த 9 வயதுடைய டபிள்யு.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமி ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

3. யாழ். பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் நிறுத்தி விட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலுமொரு மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாகியது.

4. கொக்குவில் கிழக்கு ரயில் நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி அட்டூழியத்தில் ஈடுபட்ட அயல்வீட்டு இளைஞனுக்கு பொலிஸார் துணை நிற்பதால் தமக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

5.சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை வழங்காவிட்டால் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

6.வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (30.09) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 3 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவிருக்கும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராயப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும், பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நேற்று (30) மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

கோத்தாவுக்கு அவ்வாறான சட்டசிக்கல் ஏற்படுமாயின், அடுத்ததாக சமல் ராஜபக்ஷ அல்லது ஷிரந்தி ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அவ்விரண்டு யோசனைகளையும் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார் என அறியமுடிகின்றது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்கட்சித் தலைவருக்கும் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சிக்கல் ஏற்படுமாயின், ஜனாதிபதி வேட்பாளராக தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (30) கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காத்திருப்பதாக அறியமுடிகின்றது.

 நாளை 2 ஆம்திகதி, 3ஆம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது தரப்பு வாதங்களை முன்வைக்கும் சட்ட ஏற்பாடுகளை பெரமுன முன்னெடுத்துவருவதாக அறியமுடிகின்றது. 

சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்த சமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள், கைப்பற்றப்பட்டுள்ளன. 

தேசிய கட்டுப்பாட்டு அதிகாரிகளினால், பம்பலப்பிட்டியிலுள்ள மருந்தகம் ஒன்றிலிருந்தே இவை, நேற்று (30) மாலை கைப்பற்றப்பட்டன. 

அந்த மருந்தகம் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையடுத்தே, அங்கு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளை கைப்பற்றியுள்ளன.

மருந்தகத்துக்கு உத்தியோகபூர்வ அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய மருந்துகள் மற்றும் குளிசைகள் அங்கு விற்பனைச் செய்யப்படும் அதேவேளை, சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளும் விற்பனைச் செய்யப்படுகின்றன. 

அந்த மருந்தகத்தில் மாத்திரை ஒன்று, 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

 

சட்டத்தரணியின் வாதத்தால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரசார பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது, கோத்தாபய ராஜபக்ஷ பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில், செப்டெம்பர் 27ஆம் திகதி ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்றையதினம் ஆஜராகமுடியாது என கோத்தாவின் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. 

மனுவை ஆராய்ந்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,  வடக்கு, கிழக்கிலுள்ள நீதிமன்றங்களை தவிர, நாட்டிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும், ஆஜராகி சாட்சியமளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு  கட்டளைப் பிறப்பித்துள்ளது.

 

காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் ஆகிய இருவரின் உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில், கோத்தாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்ததன் பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர மேற்கண்டவாறு இடைக்கால தடையை விதித்து, கட்டளையைப் பிறப்பித்தார்.

கோத்தாவின் மனுவை, நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வேங்கப்புலி ஆகியோரே இன்று (24) ஆராயவிருந்தனர். எனினும், நீதியசர் அசல வேங்கப்புலி மனுவை ஆராய்வதிலிருந்து விலகிச்சென்றார்.

கோத்தாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீதியரசர் தீபாலி விஜயசுந்தர, அம்மனுவை ஆராய்ந்தார். மனு ஆராயப்பட்டபோது, சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி வசந்த பெரேரா, “கோத்தாவின் கோரிக்கை தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றார். அதன்பின்னரே மேற்கண்ட இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்குமென கட்டளையிடப்பட்டது.

இதனால், ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தாபயவுக்கு வடக்கு, கிழக்கில் சென்று பிரசார பணிகளை முன்னெடுக்கமுடியாது. 

அவ்வாறு முன்னெடுக்கும் போது, அங்குள்ள நீதிமன்றமொன்றில், அவர் கட்டாயமாக ஆஜராகவேண்டிய நிலைமை ஏற்படுமென அறியமுடிகின்றது.

 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்தது.

மூவருக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது.

நேற்றுமாலை ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு மேல் நடைபெற்றதாக அறியமுடிகின்றது. 

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் விஞ்ஞாபனம் வெளியிட்டதன் பின்னர், அதுதொடர்பில் கலந்துரையாடி, இறுதித்தீர்மானம் எட்டப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடைலான புதியக் கூட்டணி தொடர்பில் எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

கோத்தாவுக்கு வாக்களிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமரை மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பொதுசின்னமொன்றில் களமிறங்கினால், சுதந்திரக் கட்சியும் இணைந்து கொள்ளுமென பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தாமரை மொட்டு சின்னத்தை எக்காரணத்துக்காகவும் கைவிடமுடியாது என, முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

இந்நிலையில், அடுத்தக் கட்ட நடவடிககை தொடர்பில் ஆராய்வதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

அதன்போது, தாமரை மொட்ட சின்னம் தொடர்பில் ஆராய்வதற்கு காலந்தாழ்த்துமாறு மத்தியக் குழு, நேற்றிரவு தீர்மானித்தது. 

கோத்தாவுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவிருக்கும் மத்தியக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

கோத்தாவுக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினையில்லை எனினும், தாமரை மொட்டுவுக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினைகள் உள்ளன என, மத்தியக் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் சுமார் மூன்றரை மணிநேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

 

கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக, அவரின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கு எவ்விதமான தடையும் இல்லையெனவும் அவ்வாறு செய்வதற்கு சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லையென்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்கள், கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை உயர்நீதிமன்றத்தினால் மட்டுமே செய்யமுயும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கோத்தாபய ராஜபக்ஷவை வேட்பாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால், வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் மட்டுமே, எதிர்ப்பை தெரிவிக்கமுடியும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவினால், வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் மனுவை தாக்கல் செய்யமுடியும் என்றும் சரத் என். சில்வா மேலும் தெரிவித்துள்ளார்

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் ஊடாக, கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது என்றார்.

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நாளை (01) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஹபரண - வனப்பகுதியில், யானைகள் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பாகவே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd