web log free
July 26, 2021
editor

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (30) பிறப்பித்துள்ளது. மோசடி வழக்கொன்றில் நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

திங்கட்கிழமை (30) மாலை உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்தர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.

 -ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினால், கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று, கடந்த வௌ்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணைகளை எதிர்வரும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரிக்கையும் மனுமீதான விசாரணைகளை நிறைவடையும் வரையிலும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறே, அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதாவது, மனுமீதான விசாரணைகளை நிறைவடையும் வரையிலும், கோத்தாபய ராஜபக்ஷ, தற்போது பயன்படுத்தும், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு கோரப்பட்டது.

காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுமீதான விசாரணைக்கு திகதிகளை குறித்தது.

அந்த மனுவில், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி, முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுமாயின், கோத்தாபய ராஜபக்ஷவினால் தேர்தலில் போட்டியிடமுடியாது.

ஆகையால், எதிர்க்கட்சியின் சார்பில் மற்றுமொரு வேட்பாளரை நிறுத்தவேண்டும். அதுதொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினர் ஆராய்ந்துவருகின்றனர் என அறியமுடிகின்றது.

 முன்னாள் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு பிரசார பணிகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி வியூகங்களை வகுத்து வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, கட்சியின் அமைப்பாளர்களை கொழும்பு இன்று (30) அழைத்து, சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இந்த சந்திப்பு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும்.

அதில், ஐக்கிய தேசியக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் பங்கேற்பார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

இரட்டை குடியுரிமை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தார் எனக் குற்றம்சுமத்தி, உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு ஐ.தே.க தயாராகி விருவதாகவும் அறியமுடிகின்றது. 

இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கும் நபரொருவரினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதே, ஐக்கிய தேசியக் கட்சியின் வாதமாக உள்ளது. 

அதற்காக உயர்நீதிமன்றத்தை நாடி, இடைக்கால தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கும் ஐ.தே.க முயற்சிக்கின்றது என தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இன்றையதினம் அதற்கான இடைக்கால தடையுத்தரவை, ஐ.தே.க பெற்றுக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அந்த பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பேச்சாளர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, ஐக்கிய தேசியக் ்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளார் என அறியமுடிகின்றது.

அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் இரண்டு ஒப்பந்தங்கள் தொடர்பில், பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுக்கு இடையில், இருவேறு கருத்துமுரண்பாடுகள் நிலவுகின்றமையால், கெஹலிய மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் தன்னுடைய வாக்குவங்கியில் சரிவு ஏற்படுமென்ற அச்சத்தினால், ஐ.தே.கவில் இணைவதற்கு கெஹலிய ரம்புக்வெல தீர்மானித்துள்ளார் என அறியமுடிந்துள்ளது.

எக்ஸா மற்றும் மிலேனியம் சிட்டி ஆகிய ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தலாமென கெஹலிய ரம்புக்வெல அண்மையில் கருத்துரைத்திருந்தார். 

எனினும், அவ்வாறு சிந்திப்பதே தவறாகும். அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில், அறியாதவர்களே அவ்வாறு கூறுகின்றனர் என, விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருப்பினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கி, பலமானதாக உள்ளதெனத் தெரிவித்த கெஹலிய ரம்புக்வல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது சாத்தியமற்றதென தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. 

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த 7 யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது குறித்து முக்கிய தகவல்கள் பல வெளியாகிவருகின்றன. 

இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், 27 ஆம் திகதி இறந்த நான்கு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு,  ஆம் திகதி மேலும் 3 யானைகளின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த இரு நாட்களில் குறித்த பகுதியில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறந்த யானைகளில் மூன்று கர்ப்பிணி யானைகளும் காணப்படுவதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைகளின் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏதேனும் மனித செயற்பாடுகள் காரணமாக இருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிகிரியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், இராணுவம், ஹபரண பொலிஸார் ஆகியோர் பிரதேசவாசிகளுடன் இணைந்து, மேலும் யானைகளின் சடலங்கள் உள்ளதா என தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பெண் யானையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹாரே விஜயம் செய்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயத்தின் உதவி பணிப்பாளர் W.D.M.J. விக்ரமசிங்க, இந்தச் செயலைச் எவரேனுமொருவர் செய்திருந்தால், அவர்களுக்கெதிராக உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட இறந்த யானை ஒன்றின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டிருந்த வேளையில், ​​அதன் குட்டியொன்று அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து, அதற்கு மயக்க மருந்து வழங்கி வேறொரு பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யானைகளின் மர்மமான மரணத்திற்கான காரணத்தை அறிய, கிரித்தலை, அநுராதபுரம், வட மேல் வலயங்களுக்கு பொறுப்பான 3 கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட 4 வனவிலங்கு குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலி்ல் போட்டியிடும் ஒருவர், தனது வெற்றிக்காக, யானைகளை பலிபூஜை செய்திருக்கலாம் என சமூக ஊடகங்களில் பரவலாக கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யானைகளை பலிபூஜை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றமை இதுவே முதன்முறையாகும். 

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அடுத்தவாரம் விலகிக்கொள்வார் என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவிடம் தேசிய அடையாள அட்டைகள் இரண்டு உள்ளன. அவை தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார். 

குடியுரிமையில் மோசடிகளில் ஈடுபட்ட நபரொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதுதொடர்பிலான இடைக்கால தடையுத்தரவை, இன்று (30) பெற்றுக்கொள்வோம் என்றும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீண்ட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற சம்பவதினை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்

இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பின்வருமாறு,

 1. முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன கோவிலாகும்
 2. இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் முற்றிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்கள்
 3. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினை கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார்
 4. குறித்த நிலத்தினை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்து மக்கள் தொடந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியதோடு இது தொடர்பில் ஒரு முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது
 5. குறித்த பௌத்த துறவி அண்மையில் கொழும்பில் காலமானார் அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வேண்டுமென்றே உணர்ச்சினைகளை தூண்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
 6. இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, செப்டம்பர் 22 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
 7. மேலதிக விசாரணைகளின் பின்னர் 23 செப்டம்பர் 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதனை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த இறுதிக் கிரிகைகள் அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெற வேண்டியதாயிருந்தது.
 8. நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. தீர்த்தக்கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனித நீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இச்செயலினால் ஆலயமும் அதன் பூமியும் தனது புனித தன்மையை இழந்துள்ளது. சைவ மக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்த பிறகு குறைந்தது 1 மாத காலம் வரையில் ஆலயத்தினுள்ளோ அதன் பூமிக்கோ செல்வதில்லை

 

 1. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.
 1. இதன்பிரகாரம், பின்வரும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன்.
 1. நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்கள் முறையாக கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
 2. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்ற தவறிய போலீசாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கினை  நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது.   

இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

மேலும் அண்மைகாலங்களில் குற்றவாளிகளிற்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.. மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களிற்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தினை அவமதித்த  நபருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தினை மீறி செயற்பட்ட நபரொருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்ட மீறல்களிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் மேலதிக விபரங்களை தற்போது குறிப்பிட விரும்பவில்லை நான் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில்  மேதகு ஜனாதிபதி அவர்கள் விளங்கிக்கொள்வீர்கள் என அறிவேன்.

நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில்தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாச்சார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும் அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களிற்கும்  மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.

எனவே சட்ட ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களிற்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளார். 

 

நாட்டின் குடியுரிமையும் தேசிய அடையாள அட்டையும் அற்ற கோத்தபாய ராஜபக்சவை நாட்டின் தலைவராக நியமிக்க இடமளிக்கக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றும் போது குடியுரிமை மற்றும் குடியகல்வு திணைக்களத்தையும் ஆட்பதிவு திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் பாதுகாப்பச் செயலாளராக கடமை புரியவில்லை. பாதுகாப்பு அமைச்சராகவே கடமையாற்றினார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கோத்தபாய ராஜபக்ச போலியான கடவுச் சீட்டினையும் அடையாள அட்டையினையும் பெற்றுக் கொண்டுள்ளார் என இங்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன விமர்சித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜி,

 

 

 

கோத்தபாய ராஜபக்ச என்பவர் தனக்குத் தானே கூறிக்கொள்கின்றார் ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அப்பாவியான நபர் தானே என்று. அவருடைய அப்பாவித்தனத்தை கமல் குணரத்ன எழுதிய புத்தகத்தில் காணக்கூடியதாக இருந்தது.

சிறுவயதில், ஒரு தருணத்தில் தனது அம்மா தனக்கு சாப்பாட்டை கொடுத்த போது அதில் ஏதோ குறை இருந்ததால் அந்த சாப்பாட்டை தனது தலையிலேயே கொட்டிக்கொண்டாராம்.

தான் வீட்டில் இருக்கும்போது ஒருவர் வந்து தம்மை தாக்கி சென்ற நேரத்தில் தாம் ஆடையில்லாமல் இருப்பதை கூட மறந்து நெடுந்தூரம் சென்று அந்த நபரை தாக்கியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அவரது அப்பாவித்தனம்.

கோத்தா “பய” அதன் அர்த்தம், சிறுவயதிலேயே சிறந்த பெயரையே அவரது பெற்றோர் அவருக்கு இட்டுள்ளனர். அவரது பெயரைக் கண்டால் பயம் என்பதைப் போல இருக்கின்றது.

1991 இராணுவத்தில் இருந்து விலகி பயந்து ஓடிய கோத்தபாய இன்று தாம் சிறந்த இராணுவ வீரர் என கூறிக்கொள்கின்றார். நாட்டை காக்கும் யுத்தத்தின் போது உயிர் தப்பிக்கொள்வதற்காகவே அவர் இராணுவத்தில் இருந்து வெளியேறினார்.

அவ்வாறு தப்பியோடிய இவர் எப்படி சிறந்த இராணுவ வீரராவார். நினைத்தாலே சிரிப்பாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd