web log free
May 08, 2021
editor

editor

டுபாயிலிருந்து சட்டவிரோதமானமுறையில் எடுத்துவரப்பட்ட சிகரெட்டுகளுடன், இலங்கை பிரஜையொருவர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபரின் பயணப் பொதியிலிருந்து, 16,50,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பிலான, 30,000 சிகரெட்டுகள் அடங்கிய 150 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு, நேற்று முன்தினம் (03) இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு சீன ஜனாதிபதியின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை, சீனத் தூதுவர் கையளித்திருந்தார்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் சந்தித்திருந்த சீனத் தூதுவரால், சீன ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, கையளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகம் இல்லாவிட்டாலும், மக்களுக்காக முன்னெடுக்கும் தனது பணிகள் தொடருமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள தனது அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடிகளைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இவ்வருடம், தேர்தல் வரு​டமென்பதால், அதற்கு முகங்கொடுக்க, தனது முகாமை பலப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

முக்கிய பிரமுகர்கள் கொலை சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

நாமல் குமார கொலைச் சதிதிட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வௌியிட்டுக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றங்கள், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி, பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளன.

சேவையின் அவசியம் கருதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம்.
இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படமும், தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் வியாபாரமும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் போட்டிப்போட்டு டிக்கெட் புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய நாளுக்கான (04) மொத்த புரள்வு 68.77 மில்லியன் ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ள அதி குறைந்த மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, கொழும்பு பங்குச் சந்தையின் நாளுக்கான மொத்த புரள்வு 64.3 மில்லியன் ரூபாயாக இருந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்களுக்கு தலைவர்களையும் பணிப்பாளர்களையும் நியமிக்கும் போது, ஜனாதிபதிச் செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்துக்கு அமைய செயற்படுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்களுக்கே ஜனாதிபதியால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நியமனங்கள் தொடர்பில், தகுதி நிலையைப் பரிசோதித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் தலைமையிலான குழுவொன்றும், ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டது.

இதன்படி, இவ்வாறு நயமிக்கப்பட உள்ளவர்களின் தகுதிகளை ஆராய்ந்து பரிந்துரை முன்வைப்பதற்காக அவர்களின் பெயர் விவரங்களை குறித்த குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும், அமைச்சுகளின் செயலாளர்களுக்கு, ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இக்குழு, எதிர்வரும் திங்கட்கிழமை (07) நியமிக்கப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பான கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவுமே, இக்குழு அமைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன, வடமேல் மாகாண ஆளுநராக பேசல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள், செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளன.

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd