web log free
May 08, 2021
editor

editor

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்றது. கம்பனிகளுடன் இணைந்து தொழிலாளர்களின் தொழில் சுமையை அதிகரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் தொழில் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது. அதுமட்டுமல்ல தொழில் சுமைகள் எதுவும் அதிகரிக்கப்படாமலேயே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது எனவும் அறிவிப்பு வெளியானது.  ஆனால் சம்பள உயர்வு விவகாரத்தில் இன்று சூழ்ச்சி இடம்பெற்றுவருகின்றது.

ஒரு நாள் பெயருக்கு 18 கிலோ கொழுந்தே பறிக்கவேண்டும். அந்த அளவை 20 கிலோவாக அதிகரிப்பதற்கு கம்பனிகள் முயற்சித்துவருகின்றன. தொழிலாளர்களையும் வற்புறுத்துகின்றன. இந்நிலையில் தோட்டத் தலைவர்களை அழைத்து, 20 கிலோ பறிக்குமாறு இ.தொ.கா. அழுத்தம் கொடுத்துள்ளது. எனவே, தோட்டக் கம்பனிகளுடன் மீண்டும் உறவு வைத்து இ.தொ.கா. இவ்வாறு செய்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு குறித்து முடிவு எடுக்கப்படும் என தோட்டக்கம்பனிகள் கூறின. இன்று மாறுபட்ட கருத்தை முன்வைத்துவருகின்றன. 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு தொழிலாளர்களை கம்பனிகள் நிர்ப்பந்தித்துவருகின்றன. இதனால் மக்களும் குழம்பிபோயுள்ளனர். அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளது. அதன்பின்னர் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்.

தற்போது எடுக்கப்படும் 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்கவேண்டாம் என தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்." - என்றார்.

 

அதிக விளைச்சலை பார்க்கிலும் உயிர்கள் எனக்கு மிகவும் பெறுமதியானது

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலை பெற முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதால் உயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை அந்த இலாபத்தால் ஈடுசெய்ய முடியாது.

இரசாயன உரங்களின் தாக்கம் சிறுநீரக நோய் உட்பட பல தொற்றா நோய்களுக்கு வழிவகுத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சிகிச்சைக்காக செலவாகும் தொகை மற்றும் உயிர்களுக்கு ஏற்படும் தாக்கம் அதிகம். ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த பிரஜையை உருவாக்குவதற்கு, நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக நாட்டின் விவசாயத்துறையில் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் (22) கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க சபைகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டில் சேதன உர உற்பத்தியை அதிகரிக்க அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். உர மானியத்திற்கு பதிலாக சேதன உரத்தை பெற்றுக்கொடுக்க திட்டமிடுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உர இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் 400 மில்லியன் டொலர்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தன்னை அதிகாரத்திற்கு தெரிவு செய்ததன் மூலம் மக்கள் கொள்கை சார்ந்த மாற்றத்தை எதிர்பார்த்தனர். நாட்டிற்காக அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரின் ஆதரவும் தேவை என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார்.

எத்தனோல் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை சீனி நிறுவனம் ரூ. 1100 மில்லியனை இலாபமாக பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக சாதாரண மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 2500 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் பதவி உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைப் பெறவும் முடிந்தது என்று இலங்கை சீனி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

நிறுவனங்கள் அடைய வேண்டிய இலக்குகள் தொடர்பில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தில் தெளிவாகக் கூறுப்பட்டுள்ளது. அமைச்சரவை, இராஜாங்க அமைச்சுகளுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் அடைய வேண்டிய முன்னேற்றம் ஆகியவை பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றி மக்கள் விரும்பும் கொள்கை மாற்றத்தை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் தலைவர்களிடம் கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி வலயமும், ஐஸ்வர்யம் யோகா கலை மன்றமும் இணைந்து நடாத்தும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான முதலாம் கட்ட வதிவிட யோகா பயிற்சி நெறி மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று நாட்களை கொண்ட வதிவிட யோகா பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (22) இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக காசி பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளரும் சித்தர்களின் குரல் அமைப்பின் ஆலோசகருமான  ஆர்.சிவசங்கர் குரு ஜீ மற்றும் ஐஸ்வர்யம் யோகா கலை மன்றத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

அதே வேளை குறித்த இப்பயிற்சிப் பட்டறையில் பதஞ்சலி யோக சூத்திர பயிற்சி முழுமையாக கற்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வின்போது சித்தர்கள் குரல் அமைப்பினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் யோகா சீருடை  இலவசமாக வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம்  கடந்த ஜனவரி 11அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது.

 

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிலக்காகியுள்ளனர். இச்சம்பவம்  இன்று(22) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் தொழிலாளர்களாவர்.

இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (22) முற்பகல் வழங்கிவைக்கப்பட்டது.

ஆண்டறிக்கையின்படி, மக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ரூபாய் 21 பில்லியனும், வரிக்குப் பிந்தைய இலாபம் ரூபாய் 14 பில்லியனும் ஆகும்.

2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் வங்கியின் பங்கு இலாபம் ரூபாய் 3.5 பில்லியன் எனவும், அரச வரி ரூபாய் 14 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதிக் கொள்கையைப் பின்பற்றி மக்கள் வங்கி இந்த ஆண்டில் 25 பில்லியன் ரூபாய் இலாபம் மற்றும் ரூபாய் 15 பில்லியனுக்கும் அதிகமான வரி வருவாயை எதிர்பார்ப்பதுடன், எதிர்பார்க்கும் பங்கு இலாபம் 3 பில்லியனாகும்.

குறித்த நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்கு, நிதி அதிகாரி அசாம் அஹமட் மற்றும் விநியோக நிறைவேற்று அதிகாரி நாலக விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வாழ்த்துக்களுடன் மாலி இராஜ்ஜியத்தில் ஐ.நா.அமைதி காக்கும் பணிக்களுக்கான மூன்றாவது குழு ஜெனரல் ஷவேந்திராவின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் அமைதிகாக்கும் பயிற்சி நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற்ற இராணுவ 243 வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய குழு கடந்த செவ்வாய் இரவு (20) புறப்பட்டுச் சென்றது.

மேற்படி குழுவில் இராணுவத்தின் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 212 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கியிருந்ததுடன், மேற்கு ஆபிரிக்க நாட்டிற்குச் புறப்பட்டுச் செல்லும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஜெனரல் ஷவேந்திர சில்வா, சிரேஷ்ட அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்கு வருதை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இதன்போது தளபதி மாலிக்குச் செல்லும் புதிய குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஷ் புலத்சிங்கள, 2 ஆம் கட்டளை அதிகாரி மேஜர் எல் உடகெதர மற்றும் போர்கள போக்குவரத்து குழு உறுப்பினர்களிடன் ஆகியோருடனும் கலந்துரையாடினார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு விமான நிலைய செயல்முறை தொடங்குவதற்கு முன்னர் குறுகிய இராணுவ முறைப்படி குழுவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முன்னதாக ஏப்ரல் 10 ஆம் தேதி, மாலி செல்லும் குழு குகுலேகங்க ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான பயிற்சி பாடசாலையில் இராணுவத் தளபதிக்கு முறையான இராணுவ வணக்கத்தை வழங்கியது. போர்கள போக்குவரத்து குழுவில் இராணுவ அதிகாரிகள் மற்றும் கஜபா படையின் சிப்பாய்களே பெரும்பலும் இருந்தமையோடு இலங்கை இராணுவ சேவை படை, இலங்கை கவச வாகன படை, இலங்கை பொறியியலாளர்கள் படை, இலங்கை சமிஞ்சைப் படை, இலங்கை பொறியியலாளர்கள் சேவைப் படை, இலங்கை இயந்திரவியல் கலாட் படை, இலங்கை இராணுவ போர்கருவிகள் படை, இலங்கை மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படை, இலங்கை இராணுவ மருத்துவ படை மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படை என்பவற்றின் படையினரும் குறுத்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அதே குழுவை சேர்ந்த 31 இராணுவ வீரர்கள் அடங்கிய குழு வழங்கல் தேவைகள் காரணமாக சில நாட்களுக்குப் பிறகு வெளியேறும் என்பதுடன் ஏற்கனவே மாலியில் சேவை செய்யும் குழுவின் (இரண்டாம் கட்டம்) 240 உறுப்பினர்கள் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முடித்துவிட்டு விரைவில் இரண்டு கட்டங்களாக நாடு திரும்ப உள்ளனர்.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டாரா, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் நாயகம் இந்திரஜித் கந்தனஆராச்சி, பிரிகேடியர் லசந்த ரோட்ரிகோ, அதிகாரிகள் தொழில்வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தொட்டெ, இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரும் வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிரி, கஜபா படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் விமான நிலையத்தில் அவர்கள் புறப்படும் போது இருந்தனர்.

 

“பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரச நிறுவனங்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொள்ள முடியாது.” என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

 கொவிட் தொற்று காலத்திலும்கூட “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட பல்வேறு விடயங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மக்களிடம் காணப்படும் மனக்குறைக்கு காரணம் சில அரச நிறுவனங்களில் நிலவுகின்ற செயற்திறனற்ற சேவை, ஊழல், தாமதம் போன்றவையாகும் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். செயற்திறன்மிக்க அரச சேவைக்காக இராஜாங்க அமைச்சர்களின் நேரடி தலையீடு மற்றும் தொழிநுட்ப பயன்பாட்டின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் மாதாந்தம் இடம்பெறும் மீளாய்வு கூட்டம் நேற்று (21) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில நிறுவனங்களின் தலைவர்கள் தமது பணிகளை உரியவாறு நிறைவேற்றாமை தொடர்பாகவும் அறியக் கிடைத்துள்ளது. அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி செல்லாத அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர்களுக்கு பணிப்புரைவிடுத்த ஜனாதிபதி, அந்நிறுவனங்களுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனில் அதற்கும் தான் தயாரென்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டு வரவுசெலவு திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றத்தை அவதானித்து துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“மக்களுடனேயே எமது பலம் இருக்கிறது. அவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” என்று ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர்களிடம் தெரிவித்தார்.

உற்சவ காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைவது சாதாரணமானது. அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியினால் விவசாயிகளின் விளைச்சலை விற்பனை செய்வதற்கு முடியாதுள்ளது. அந்த நிலைமையை மாற்றியமைத்து இம்முறை புதுவருட காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கீழ்மட்டத்தில் பேணுவதற்கும் விவசாயிகளின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கும் முதல் முறையாக அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்ததென சுட்டிக்காட்டிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரச அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

 

இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு விரைவாக தீர்க்கப்படும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி நேற்று உறுதி அளித்தார். இந்த நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாஷிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கிலிருந்து சிலிண்டர்களில் நிரப்பும்போது, வால்வில் கசிவு ஏற்பட்டு அதிகளவில் ஆக்சிஜன் வீணாக வெளியேறியது.

இதனால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக வென்டிலேட்டரில் இருந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd