web log free
November 27, 2021
dev

dev

19 வயதுடைய குறித்த நபர் நேற்று தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அல்ல எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

அவரது சமையல் அறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த மரணம் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

 

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

சீரற்ற காலநிலை காரணமாக மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

குறித்த வீதியில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு போரதீவுப்பற்று பிரதேச சபையினால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

 

அதேபோன்று காக்காச்சிவட்டை - ஆனைக்கட்டியவெளி பிரதான வீதியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

வெல்லாவெளி பொலிஸாரும் போரதீவுப்பற்று பிரதேச சபையினரும் அப்பகுதியினூடாக மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

 

அதேபோன்று, கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வெளியேற வசதியாக கடற்படை மற்றும் இராணுவத்தினரால் விசேட படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று பாராளுமன்றத்தில் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சமீபத்திய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

இது B.1.1.529 என குறிப்பிடப்படும் கடுமையான கோவிட் மாறுபாடு என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 1.3 கிலோகிராம் குஷ் கஞ்சா அடங்கிய பத்துப் பொதிகளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

 கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 20 மில்லியன் இருக்கும் என கூறப்படுகிறது.

 சந்தேகத்தின் பேரில் பல பொட்டலங்களை பரிசோதித்த போது சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இந்த இடைமறிப்பு செய்யப்பட்டது.

 குறித்த பொதிகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து ராகம, பிலியந்தலை, கொழும்பு, கண்டி மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சாங்கேணி குளத்திற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தை 9 மாதங்களுக்குள் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிறேமசிறி ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (நவம்பர் 25) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நவம்பர் 23 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கிண்ணியா குறிஞ்சாங்கேணி குளத்தில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த மோசமான சம்பவம் நடந்தபோது படகு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

தற்போதுள்ள குறிஞ்சாங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை கிண்ணியா நகர சபையினால் படகு சேவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த அனர்த்தம் தொடர்பில் குறித்த பயணிகள் படகு உரிமையாளர் மற்றும் இரண்டு நடத்துனர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இதேவேளை, கிண்ணியா நகர சபையின் தலைவரும் இன்று மாலை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தையில் உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு டொலர் தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான

கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருப்பதே காரணம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியில் வெற்றிடமாக இருப்பதால், உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் அந்த பதவியை ஏற்குமாறு கோரியதாகவும், அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

 

"நான் நவம்பர் 29 ஆம் தேதி அமெரிக்காவிற்கு புறப்படுவேன்," என்று அவர் மேலும் கூறினார்

இரசாயன உர இறக்குமதியை தடை செய்யும் ஏப்ரல் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்பட்டு இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மக்கள் உணர்வுடன் கூடிய அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரசாயன உரத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என்றும் தற்போதைய கொள்கையே தொடரும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் இழுவை படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகிய அனர்த்தத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் மைத்துனரான கிண்ணியா மேயரே பொறுப்பு என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று தெரிவித்துள்ளார்.

அவரை பதவியில் இருந்து நீக்குமாறும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் லன்சா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தடாகத்தில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை எனவும் அனுமதியின்றி இவ்வாறான படகு சேவையை நடாத்துவதால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி படகு சேவை நடத்தப்பட்டதாகவும், மேயரின் நடவடிக்கையால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Page 1 of 18
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd