web log free
December 07, 2021
sasmitha

sasmitha

நாம் விமான பயணத்தின் போது, ஏறும்போது அல்லது இறங்கும் போது விமானிகளை காணக்கூடியதாக இருக்கும். மற்றபடி விமானிகளை பற்றிய அதிக தகவல்கள் நமக்கு தெரிவதில்லை. இந்த கட்டுரை விமானிகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கி உள்ளது. இவற்றில் சில விடயங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும். அவ்வாறு தெரியாமல் இருக்கும் சிலருக்காக இந்த கட்டுரை.

ஒரு விமானத்தில் 2 விமானிகள் இருப்பார்கள். அவர்களின் கூடுதல் அனுபவம் உள்ளவர் கேப்டனாகவும் அவரது ஜூனியர் முதல் நிர்வாகியாக இருப்பார். பயிற்சி பறத்தல் நிலையில் உள்ளவர்களும் அவர்களுடன் செல்வது உண்டு. ஒரு விமானத்தின் அனைத்து அதிகாரங்களும் கேப்டனிடம் மட்டுமே உள்ளது. கதவுகள் அடைக்கப்பட்டு விமானம் புறப்பட தயாரானதன் பின்னர் விமானத்தில் நடக்கும் அனைத்து விடயங்களையும் முடிவெடுப்பது கேப்டன் தான். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டாலோ அல்லது பயணிகள் இடையில் ஏதேனும் தகராறுகள் ஏற்பட்டாலோ அப்போது என்ன முடிவெடுக்க வேண்டும்,என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது கேப்டன் தான். கூடுதல் பிரச்சனையாகும் நேரத்தில் ஒருவரை விமானத்தில் இருந்து வெளியேற்றுவது, விமானத்தைத் திருப்பி இறக்கி அந்த நபரை வெளியேற்றுவது போன்ற முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கேப்டனுக்கு உள்ளது அதே போல ஏதேனும் தேவையான நேரங்களில் வழி மாற்றிச் செல்லவது உட்பட உள்ள முடிவுகள் எடுப்பது கேப்டன் தான். 

விமானம், பறக்கத் தொடங்கி பத்தாயிரம் அடி உயரத்தை அடையும் வரை கேப்டனும் முதல் அதிகாரியும் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். காரணம் நேவிகேஷன் ,விமான கட்டுப்பாடு மையங்களுடனான தொடர்பு என்று இருவருமே பரபரப்பாக இருக்கவேண்டிய நேரம் அது. 

காக்பிட்டுக்குள்(cockpit) எப்போதுமே இரண்டு விமானிகள் இருப்பது கட்டாயமானது. இரண்டு விமானிகள் என்பதை விட இரண்டு நபர்கள் என்பது மிக கட்டாயம். ஒருவேளை கேப்டனோ அல்லது முதல் அதிகாரியோ காப்பிட்டை  திறந்துகொண்டு கழிவறைக்கு அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக காப்பிட்டை விட்டு வெளியே சென்றால் அந்த நேரங்களில் ஒரு கேபின் கிரூ(cabin crew) உறுப்பினர் காப்பிட்டுக்குள் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதற்கான காரணம் காப்பிட்டுக்குள் தனியாக அமர்ந்திருக்கும் விமானிக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவருக்கு உதவி செய்யவும் ஒற்றையில் இருக்கும்போது சோர்வடையாமல் இருப்பதற்கு அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டும் அல்லது அவரது கவனம் சிதறாமல் இருக்க உதவி செய்யவும் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால் எந்த காரணம் கொண்டும் காப்பிட்டுக்குள் ஒரு நபர் மட்டும் இருக்கக்கூடாது என்பது கட்டாயம்.

காப்பிட்டுக்குள்ளே புத்தகங்கள் மற்றும் அதுபோன்ற எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. செய்தித்தாள்கள் படிக்கலாம், விமானம் தயாராகும் போது அது திரும்பி வாங்கப்படும். மற்றவர்களுக்கு விமானம் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்களைத் தவிர்த்து வேறு எந்தவித புத்தகங்களும் அனுமதி இல்லை. காரணம் புத்தகங்கள் வாசிக்க தொடங்கிவிட்டால் கவனம் முழுவதும் புத்தகத்தில் இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வரும் ஏதேனும் தகவலை கவனிக்கத் தவறிடலாம்  என்பதாலே புத்தகம் அனுமதிப்பதில்லை.

அதேபோல காப்பிட்டுக்குள் திரவ நிலையில் உள்ள எந்தப் பொருளும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. காபி , டீ என்று எந்த பொருளுக்கும் தொழில்நுட்ப ரீதியாக காப்பிட்டுக்குள்  அனுமதி இல்லை. காரணம் காப்பிட்டுக்குள் முழுவதும் கட்டுப்பாட்டு கருவிகளும் இலத்திரனியல் உபகரணங்களும் சென்சார்களுமாக இருப்பதனால் திரவநிலை பொருட்கள் அங்கு எங்கும் கசிந்து விடக்கூடாது என்பதால் எந்தவித திரவத்திற்கும் காப்பிட்டுக்குள் அனுமதி இல்லை.   

அதே போல இரண்டு விமானிகளும் ஒருபோதும் ஒரே விதமான உணவுகளை உண்ணக்கூடாது. கேப்டன் ஒரு உணவை உண்ணும்போது முதல் அதிகாரி வேறுவிதமான உணவை உண்ணவேண்டும். ஒருவர் அசைவம் சாப்பிட்டால் ஒருவர் சைவம் சாப்பிட வேண்டும், அல்லது இருவருமே அசைவம் சாப்பிட்டாலும் கூட தனித்தனியாக சமைக்கப்பட்ட வேறுவேறு உணவுகளாக இருக்க வேண்டும். காரணம், ஒருவேளை ஒரு உணவின் காரணமாக ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அது இருவருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. கேபினிலிருந்து விமானிகளுக்கு உணவு கொண்டு செல்லும் போதே அப்படி மாறுபட்ட உணவைத்தான் கொண்டு செல்வார்கள். அதைத்தாண்டி இருவருமே ஒரே உணவை உண்ண வேண்டுமானால் ஒருவர் சாப்பிட்டுவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்னர் முதல் சாப்பிட்டவருக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லாவிடின் மற்றவர் சாப்பிடலாம். எந்த காரணம் கொண்டும் ஒரே உணவோ அல்லது ஒரே நேரத்திலோ உண்பதில்லை.

காப்பிட்டினுள் திரைப்படங்கள் பாடல்கள் போன்றவற்றை கேட்பதற்கோ பார்ப்பதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், கவனம் சிதறாமல் இருப்பதற்காகவே ஆகும்.

மிக முக்கியமானதொன்று விமானிகள் எந்த காரணம் கொண்டும் நீளமான தாடி வைக்க கூடாது. காரணம் கேபினுக்குள் ஒக்சிசன் பற்றாக்குறை ஏற்படும்போது குயிக் டாமின் மாஸ்க் (Quick Domin mask) அணிந்து கொண்டு அதன் மூலம் சுவாசம் பெற வேண்டும் எனவே அந்த மாஸ்க் அணியும் போது நீண்ட தாடி இருந்தால் அந்த மாஸ்க் சரியாக பொருந்தாது. இந்த சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது எயார் கனடா நிறுவனம் தான். அதன் பின்னர் எல்லா நிறுவனமும் நீண்ட தாடி வைப்பதற்கான அனுமதியை மறுத்தது. 

அதேபோல நீண்ட தூரம் பறத்தலின் போது விமானிகளும் கேபின் க்ரூ உறுப்பினர்களும் ஓய்வெடுப்பது உண்டு அதன்போது அவர்களுக்கென உள்ள குரூப் கம்பார்ட்மென்டில் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இதன்போது பயண தூரத்தை பொறுத்து அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை குறுகிய நேரம் ஓய்வாக அது இருக்கும்.

இவ்வாறான இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வரும் கட்டுரைகளில் எதிர்பாருங்கள்

பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் எனவும் அதன்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கட்டண அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.

ஒரு நாள் மனைவி வீடு சுத்தம் செய்து கொண்டு இருக்கையில் கட்டிலுக்கு அடியில் ஒரு இரும்பு பெட்டியை பார்க்கிறார். அதை திறந்து பார்த்தால் உள்ளே 1லட்சம் பணம் மற்றும்1 கோழி முட்டை இருக்கிறது.

அதை பற்றி கணவனிடம் கேக்க நினைத்த அவள் அதை அப்படியே வைத்து மேலும் வேலை செய்ய ஆரம்பிக்க கதவை தட்டும் சத்தம் கேட்டது.

கணவன் வேலை முடித்து வந்து விட்டார்..

அவள் அந்த பெட்டிக்குள் இருப்பதை பற்றி கேட்க..

மனைவி : என்னெங்க இது என்ன??? பெட்டிகுள்ள காசும் 1 முட்டையும் இருக்கு???

கணவன் : அதுவா???? அது நான் எப்போதெல்லாம் உன் கிட்ட பொய் சொல்றேனோ அப்பல்லாம் ஒரு முட்டை வாங்கி அந்த பெட்டிக்குள்ள வைப்பேன்?

உடனே மனைவிக்கு கண்கள் கலங்கியது? ..

மனைவி: (mind voice) ஒரு பொய் தான் சொல்லியி௫க்காரா???ஒரு முட்டை தான் இருக்கு???

                 சரி அந்த 1லட்சம்???

கணவன்: அது முட்டை வித்த காசு மா.. அதை எடுக்காத.।

கடுப்பான மனைவி உருட்டு  கட்டையால் கணவனை புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டாள். 

எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகில் இந்த எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பமானது.

நகர மண்டபத்தில் இருந்து மருதானை நோக்கி பயணித்த குழுவினர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு செல்ல உள்ளனர்.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும் எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை குழுவினால் முதலாவது தடவையாக பிரேரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் ச.செல்வேந்திரா பதவி விலக்கப்படுவதுடன், புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு திகதி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா பிறழ்வு உலக நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இது குறித்து வௌ்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

உரையில் Omicron கொவிட் பிறழ்வு தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை எவ்வாறாயினும், எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் ஜனாதிபதி ஜோ பைடன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே ஆபிரிக்காவின் 8 நாடுகளுக்கான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் அல்லது முடக்கல் நிலை தேவையற்றது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Omicron பிறழ்வு கண்டறியப்பட்டதை அடுத்து, தென்னாபிரிக்கா, Botswana, Zimbabwe, Namibia, Lesotho, Eswatini, Mozambique மற்றும் Malawi நாடுகளிலிருந்து வருகை தரும் விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (30) பாராளுமன்றத்தில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

 

2021 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லயோனல் மெஸ்சி தேர்வாகி உள்ளார்.

இதன்படி ,சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சி பெற்றார். சந்தோசத்தில் அவரின் ரசிகர்கள்  ஆர்ப்பரிக்கின்றனர். 

மேலும் ,கடந்த ஜூலை மாதம் கோபா அமெரிக்கா தொடரை அர்ஜென்டினா அணிக்கு மெஸ்சி வென்று தந்திருந்தார். நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளை கொண்டு மெஸ்சிக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டது.மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை Alexia Putellas தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றார். 

நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.

அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.

இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது - தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.

அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்

உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.

Page 1 of 58
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd